ஈர்ப்பியல் மாறிலி
ஈர்ப்பியல் மாறிலி "G" யின் மதிப்பு, ஈர்ப்பியல் விதியில் முக்கிய பங்காற்றுகிறது. சூரியனுக்கும் புவிக்கும் இடையே உள்ள ஈர்ப்பு விசை மிக அதிகமாக இருப்பதும், நிறை குறைவான மிகச்சிறிய பொருள்களுக்கு (எடுத்துக்காட்டாக இரு மனிதர்களுக்கிடையேயான) விசை புறக்கணிக்கத்தக்க அளவில் மிகக்குறைவாக இருப்பதன் காரணத்தை G ன் மதிப்பு விளக்குகிறது.
புவிபரப்பில் உள்ள நிறை m (படம் 6.7) உணரும் விசை
இங்கு ME - புவியின் நிறை, m - பொருளின் நிறை, RE- புவியின் ஆரம் ஆகும்.
நியூட்டன் இரண்டாம் விதிப்படி, F = -mg, இதனை (6.11) னுடன் ஒப்பிட,
புவியின் மையத்திலிருந்து r தொலைவில் உள்ள நிறை M உணரும் விசை
6.12 -ல் உள்ள GME யின் மதிப்பை மேலே உள்ள சமன்பாட்டில் பிரதியிட,
இதன் மூலம் நமக்குத் தெரிவது என்னவென்றால், g இன் மதிப்பு தெரிந்தாலே விசையை எளிதில் கணக்கிடலாம். இதற்கு 'G' இன் மதிப்பு தேவை இல்லை .
உங்களுக்குத் தெரியுமா?
1798ல் ஹென்றி காவண்டிஷ் முறுக்கு தராசு (torsion balance) கருவியின் மூலம் G = 6.75 × 10-11Nm2kg-2 எனக் கண்டறிந்தார். இன்று நவீன தொழில்நுட்பத்தின் மூலம் G இன் மதிப்பு மிகத் துல்லியமாக கண்டறியப்பட்டுள்ளது. தற்போது G = 6.67259 × 10-11Nm2kg-2 என்ற மதிப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.