Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | ஈர்ப்புப்புலம்
   Posted On :  12.11.2022 09:04 pm

11வது இயற்பியல் : அலகு 6 : ஈர்ப்பியல்

ஈர்ப்புப்புலம்

அடிப்படையில் இரு பொருள்களுக்கு இடையான இடைவினையே (interaction) விசை ஆகும். (படம் 6.8) இந்த உறவின் தன்மையைப் பொறுத்து விசையானது (i) தொடுவிசை (ii) தொடா விசை என இருவகைப்படும்

ஈர்ப்பு புலமும், ஈர்ப்பு தன்னிலை ஆற்றலும்


ஈர்ப்புப்புலம்

அடிப்படையில் இரு பொருள்களுக்கு இடையான இடைவினையே (interaction) விசை ஆகும். (படம் 6.8) இந்த உறவின் தன்மையைப் பொறுத்து விசையானது (i) தொடுவிசை (ii) தொடா விசை என இருவகைப்படும் (படம் 6.8).


இரு பொருள்கள் ஒன்றுடன் ஒன்று தொட்டுக் கொண்டிருக்கும் போது ஏற்படும் விசை தொடு விசை ஆகும். விசையை ஏற்படுத்தும் காரணியும் பொருளும் ஒன்றுக்கொன்று தொடுவதன் மூலம் ஏற்படும் தொடு விசையால் பொருளின் இயக்கமானது ஏற்படுகிறது.

சூரியனை புவி சுற்றி வருவதை கருதுவோம். சூரியனும் புவியும் ஒன்றை ஒன்று தொடவில்லை என்றாலும் அவை ஒன்றையொன்று இடைவினை புரிகின்றன. அதன் காரணமாக புவியானது சூரியனின் ஈர்ப்பு விசையை உணர்கிறது. இவ்வகை ஈர்ப்புவிசை ஒரு தொடா விசை ஆகும்.

புவியிலிருந்து மிக அதிகத் தொலைவில் சூரியன் உள்ளபோதும் இரண்டும் ஒன்றுக்கொன்று இடைவினை புரிகின்றன என்பது நமக்கு வியப்பாக தோன்றும். நம்மால் நேரடியாக பார்க்கவோ அல்லது உணரவோ முடிவதால் தள்ளுதல் இழுத்தல் போன்ற தொடு விசைகளின் வலிமையை நம்மால் கணக்கிட முடியும். ஆனால் வெவ்வேறு தொலைவுகளில் செயல்படும் தொடா விசையின் வலிமையை எவ்வாறு கணக்கிடுவது? தொடா விசையின் வலிமையை புரிந்து கொள்ளவும் மற்றும் கணக்கிடவும், ஈர்ப்புப் புலம் என்ற கருத்து அறிமுகப்படுத்தப்படுகிறது.

நிறை `m2` மீது நிறை ’m1’ ஏற்படுத்தும் ஈர்ப்பியல் விசை


இங்கு   என்பது நிறை m1 மற்றும் m2, வை இணைக்கும் கோடு வழியே செயல்படும் அலகு வெக்டர் ஆகும்.

நிறை m1 லிருந்து r தொலைவில் உள்ள புள்ளியில் ஈர்ப்பு புலச்செறிவு ( என்பது "ஓரலகு நிறையினால் உணரப்படும் ஈர்ப்பு விசை என வரையறுக்கப்படுகிறது. ஈர்ப்புபுலச்செறிவானது  /m2 என்ற விகிதத்தால் குறிக்கப்படுகிறது

இங்கு நிறை m2 மீது செயல்படும் விசை ஆகும். 

எனவே வை 6.14 ல் பிரதியிட


ஈர்ப்புலச்செறிவு (இனிமேல் ஈர்ப்பு புலம் என்று அழைக்கப்படும்) ஒரு வெக்டர் ஆகும். வெக்டர் இன் திசை நிறை m1ஐ நோக்கி அமையும். மேலும் இது நிறை m2 வைச் சார்ந்தது அல்ல.

பொதுவாக, நிறை M ஆல் r தொலைவில் ஏற்படும் ஈர்ப்பு புலம், பின்வருமாறு குறிக்கப்படுகிறது


ஈர்ப்பு புலம் செயல்படும் பகுதியில் உள்ள புள்ளி P யில் நிறை 'm' வைக்கப்படுகிறது. நிறை 'm' ஆனது ஈர்ப்பு புலம் யை உணர்வதால் ஒரு ஈர்ப்பு விசை ஏற்படுகிறது. (படம் 6.9)

நிறை M ஆல் நிறை m உணரும் ஈர்ப்பு விசை பின்வருமாறு எழுதப்படுகிறது


இந்தச் சமன்பாட்டை நியூட்டனின் இரண்டாம் விதி சமன்பாட்டோடு ஒப்பிடும் போது, நமக்கு கிடைப்பது


அதாவது ஒரு புள்ளியில் இருக்கும் ஈர்ப்பு புலமானது அப்புள்ளியில் உள்ள ஒரு துகள் உணரும் முடுக்கத்திற்கு சமம் ஆகும். ஆனால் எண்மதிப்பும் திசையும் ஒன்றாக அமைந்தாலும் மற்றும் ஆகிய இரண்டும் வெவ்வேறு இயற்பியல் அளவுகள் ஆகும். ஈர்ப்பு புலம் என்பது மூல நிறையின் (source mass) காரணப் பண்பு. முடுக்கம் என்பது ஈர்ப்பு புலம் -ல் வைக்கப்பட்டுள்ள சோதனை நிறை உணரும் விளைவுப் பண்பாகும்.

ஒன்றையொன்று தொடாத இரு நிறைகளிடையே நடைபெறும் இடைவினையை "ஈர்ப்புப்புலம்" என்ற கருத்தில் மூலம் இப்போது நாம் விளக்க முடியும்.

i. படம் 6.10 ல் காட்டியுள்ளவாறு நிறை M னை விட்டு விலகிச் செல்ல ஈர்ப்புப்புலத்தின் வலிமை குறையும். தொலைவு r அதிகரிக்கும் போது  யின் எண்மதிப்பு குறையும்.


படம் 6.10 இல் புள்ளிகள் P, Q, மற்றும் R ல் ஈர்ப்பு புலமானது என எழுதலாம். புள்ளிகள் P, Q, மற்றும் R க்கான விசை வெக்டர்களின் நீளங்களை ஒப்பிடுவதன் மூலம் இதனை புரிந்து கொள்ளலாம்.

ii. ஈர்ப்பியல் விசையை கணக்கிடுவதற்காக "ஈர்ப்புப் புலம்" என்ற கருத்து அறிமுகப்படுத்தப்பட்டது. பின்பு ஈர்ப்பு புலம் ஒரு இயற்பியல் அளவு என்றும் அது வெளியில் (space) ஆற்றலையும் உந்தத்தையும் பெற்றுள்ளது என்றும் கண்டறியப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் மின்னூட்டங்கள் இயங்குகின்ற முறையை புரிந்து கொள்ள புலக்கொள்கையானது தவிர்க்க முடியாத ஒன்றாக விளங்குகிறது.

iii. ஈர்ப்பு புலத்தின் அலகு நியூட்டன் /கிலோகிராம் (N/kg) அல்லது ms-2


11th Physics : UNIT 6 : Gravitation : Gravitational field in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : அலகு 6 : ஈர்ப்பியல் : ஈர்ப்புப்புலம் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : அலகு 6 : ஈர்ப்பியல்