எடுத்துக்காட்டு 6.1
படத்தில் காட்டியுள்ளபடி, 10 மீ தொலைவில் நிறைகள் m1 மற்றும் m2 அமைந்துள்ளன. இரு நிறைகளுக்கும் இடையேயான ஈர்ப்பியல் விசையை கணக்கிடுக. ஒவ்வொரு நிறையின் மீது செயல்படும் விசையின் திசையினை வரைக. (m1= 1 kg; m2 = 2 kg)
ஃ விசையின் எண் மதிப்பு
இவ்விசையின் எண் மதிப்பு மிகக்குறைவாக உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இதனால் தான் இரு மனிதர்களுக்கிடையேயான ஈர்ப்பியல் விசையை நாம் உணர முடிவது இல்லை. ஈர்ப்பியல் விசையின் வலிமையை நிர்ணயம் செய்வதில் G-ன் மிகக்குறைந்த மதிப்பு முக்கியப் பங்காற்றுகிறது.
நிறை m1 ஆல் நிறை m2 உணரும் ஈர்ப்பியல் விசை () yஅச்சு எதிர்த்திசையில் செயல்படுகிறது. அதாவது rˆ =−jˆ
நியூட்டனின் மூன்றாம் விதிப்படி, நிறை m1 ஆனது நிறை m2 மீது நிறை சமமான எதிர்த்திசையில் செயல்படும் விசையை ஏற்படுத்துகிறது. எனவே நிறை m2 ஆல் m1 உணரும் ஈர்ப்பியல் விசை () ஆனது y அச்சின் நேர்திசையில் செயல்படுகிறது. ie., rˆ = jˆ
படத்தில் விசைகள் செயல்படும் திசை குறிக்கப்பட்டுள்ளன. மேலும் = − என்பது, நியூட்டனின் மூன்றாம் விதியை உறுதிப்படுத்துகிறது.
எடுத்துக்காட்டு 6.2
நிலவும் ஆப்பிளும் ஒரே ஈர்ப்பியல் விசையாலேயே முடுக்கமடைகிறது. இவை இரண்டும் அடையும் முடுக்கங்களை ஒப்பிடுக.
புவியினால் ஆப்பிள் உணரும் ஈர்ப்பியல் விசை
இங்கு MA- ஆப்பிள் நிறை, ME புவியின் நிறை, R - புவியின் ஆரம் ஆகும்.
நியூட்டன் இரண்டாம் விதியைப் பயன்படுத்த
இங்கு ‘aA' ஆப்பிளின் முடுக்கம். இது 'g' க்கு சமம்
இதேபோல் புவியினால் நிலா உணரும் விசை
இங்கு Rm - புவிக்கும் நிலாவுக்கும் உள்ள தொலைவு, Mm - நிலாவின் நிறை
நிலா உணரும் முடுக்கம்
ஆப்பிளின் முடுக்கத்திற்கும், நிலாவின் முடுக்கத்திற்கும் இடையே உள்ள தகவு
நிலாவின் சுற்றுப்பாதையானது புவியின் ஆரத்தை போல 60 மடங்கு என ஹிப்பார்க்கஸ் (Hipparchus) முன்னரே கண்டறிந்துள்ளார்.
Rm = 60R.
இதன் மூலம் ஆப்பிளின் முடுக்கமானது, நிலாவின் முடுக்கத்தைப் போல 3600 மடங்கு பெரியது என அறிகின்றோம். தனது ஈர்ப்பியல் சமன்பாட்டின் மூலம் இதே முடிவை நியூட்டன் பெற்றார். ஆப்பிளின் முடுக்கம் 9.8ms-2 என எளிதில் கண்டறியப்பட்டது. புவியினை சுற்றும் நிலாவின் சுழற்சிகாலம் 27.3 நாட்கள் என்பதை மைய நோக்கு முடுக்கச் சமன்பாட்டில் பயன்படுத்த, நமக்கு கிடைப்பது
ஈர்ப்பியல் விதியின் மூலமாகவும் இதே மதிப்பினையே நியூட்டன் பெற்றார்.