Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | பாடச்சுருக்கம் - இயற்பியல் : ஈர்ப்பியல்
   Posted On :  19.10.2022 02:44 am

11வது இயற்பியல் : அலகு 6 : ஈர்ப்பியல்

பாடச்சுருக்கம் - இயற்பியல் : ஈர்ப்பியல்

கெப்ளரின் விதிகளின் மூலம் கோள்களின் இயக்கத்தை விளக்க முடியும்.

பாடச்சுருக்கம்


* கெப்ளரின் விதிகளின் மூலம் கோள்களின் இயக்கத்தை விளக்க முடியும்.


* கெப்ளர் முதல் விதி : சூரியனை ஒரு குவியமாகக் கொண்டு சூரிய குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் அதனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன.


* கெப்ளர் இரண்டாம் விதி : சூரியனையும் கோளையும் இணைக்கும் ஆரவெக்டர் சமகால இடைவெளியில் சமபரப்புகளை ஏற்படுத்தும்.


* கெப்ளர் மூன்றாம் விதி : கோளின் சுற்றுக்காலங்களின் இருமடிக்கும் மற்றும் சுற்றுப்பாதையின் அரை நெட்டச்சின் மும்மடிக்கும் இடையேயான தகவு அனைத்து கோள்களுக்கும் மாறிலியாக இருக்கும்.


* நியுட்டனின் ஈர்ப்பியல் விதி : இரு நிறைகளுக்கிடையேயான ஈர்ப்பியல் விசையானது அவற்றின் நிறைகளின் பெருக்கல் பலனுக்கு நேர்த்தகவிலும், அவற்றுக்கு இடையேயான தொலைவின் இருமடிக்கு எதிர்த்தகவிலும் இருக்கும். வெக்டர் வடிவில்


* நிறை m ஆல் r தொலைவில் உள்ள ஒரு புள்ளியில் ஏற்படும் ஈர்ப்பு புலச் செறிவு இது ஒரு வெக்டர் அளவு.


* இரு நிறைகளுடைய அமைப்பின் ஈர்ப்பு நிலை ஆற்றல்   இது ஸ்கேலர் அளவு ஆகும்.


* நிறை m ஆல் r தொலைவில் ஏற்படும் ஈர்ப்பு தன்னிலை ஆற்றல் . இது ஒரு ஸ்கேலார் அளவு.


* உயரம் அதிகரித்தாலோ அல்லது ஆழம் அதிகரித்தாலோ புவிஈர்ப்பு முடுக்கம் g யின் மதிப்பானது குறையும்.


* புவியின் சுழற்சியின் காரணமாக ஈர்ப்பின் முடுக்கம் துருவப்பகுதிகளில் பெருமமாகவும், நடுவரைக்கோட்டுப்பகுதிகளில் சிறுமமாகவும் இருக்கும்.


* புவிபரப்பிலிருந்து தப்பி செல்ல ஒரு பொருளின் விடுபடு வேகம் இது எறியப்படும் பொருளின் நிறையை சார்ந்தது அல்ல.


* துணைக் கோளின் ஆற்றல் எதிர்க்குறி மதிப்பு உடையது. இது துணைக்கோளானது புவியின் ஈர்ப்பியல் விசையால் பிணைக்கப்பட்டுள்ளதை குறிக்கின்றது.

 

* பின்நோக்கிச் செல்வது போல தோன்றும் இயக்கமானது கோள்களுக்கிடையேயான சார்பு இயக்கத்தால் ஏற்படுவது என்பதை கோபர்நிக்கஸின் மாதிரி விளக்கியது. சிக்கலான தாலமியின் பெருவட்டத்தின் மேல் அமையும் சிறுவட்ட சுழற்சி விளக்கத்தை விட இம்மாதிரியானது எளிமையான விளக்கத்தை தந்தது.


* வடிவியல் மற்றும் முக்கோணவியல் ஆகியவற்றின் உதவியால் கோபர்நிகஸ்சும் கெப்ளரும் கோளுக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவை அளந்தனர்.


* எளிய வடிவியல் மற்றும் முக்கோணவியல் கோட்பாடுகள் மூலம் 2400 ஆண்டுகளுக்கு முன்பே எரட்டோஸ்தனீஸ் புவியின் ஆரத்தை அளந்தார்.


11th Physics : UNIT 6 : Gravitation : Summary - Physics: Gravitation in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : அலகு 6 : ஈர்ப்பியல் : பாடச்சுருக்கம் - இயற்பியல் : ஈர்ப்பியல் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : அலகு 6 : ஈர்ப்பியல்