பொருளாதாரம் - சமநோக்கு வளைகோடு | 11th Economics : Chapter 2 : Consumption Analysis
சமநோக்கு வளைகோடு
இரண்டு பண்டங்களின் பல்வேறு தொகுப்புகள் வரைபடத்தில் விளக்கப்பட்டுள்ளன. (அட்டவணையில் உள்ளபடி) நுகர்பவர் நுகர்ந்த பண்டங்களின் அடிப்படையில் வரைபடத்தில் புள்ளிகளையிட்டு அப்புள்ளிகளை இணைத்தால் ஒரு வளைகோடுகிடைக்கும். அவ்வளைகோடே சமநோக்கு வளைகோடாகும்.
ஆகவே சமநோக்கு வளைகோட்டுப் பாதையில் பண்டங்களின் எல்லா தொகுப்புகளுமே நுகர்வோருக்கு சம அளவு திருப்தியை கொடுப்பதாக உள்ளது. இது சம பயன்பாட்டு வளைகோடு அல்லது சமதிருப்திக் கோடு எனவும் அழைக்கப்படுகிறது.
வரைபடம் 2.15ல் X அச்சில் ஆப்பிளையும் Y அச்சில் ஆரஞ்சையும் அளவிடுகிறோம். 'R' புள்ளி 1(ஆப்பிள்) மற்றும் 20 (ஆரஞ்சு) தொகுப்பினையும் 'S' புள்ளி 2 (ஆப்பிள்) மற்றும் 15(ஆரஞ்சு) தொகுப்பினையும் 'T' புள்ளி 3 மற்றும் 12 தொகுப்பியையும் குறிக்கின்றன. இதே போன்று U, V - இணைப்பும் உருவாகிறது. இந்த ஐந்து இணைப்பும் நுகர்வோருக்கு சமமான திருப்தியையே தருகிறது. நுகர்வோர் இந்த ஐந்து புள்ளிகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்வதால் சிறந்த நிலையையோ அல்லது மோசமான நிலையையோ அடையமாட்டார்கள். இந்த ஐந்து (R,S,T,U,V) புள்ளிகைளை இணைத்தால் சமநோக்குவளைகோட்டைப் (IC) பெறலாம்.