நுகர்வு பகுப்பாய்வு | பொருளாதாரம் - பண்டங்களின் வகைகள் | 11th Economics : Chapter 2 : Consumption Analysis
பண்டங்களின் வகைகள்
பண்டங்கள் பொதுவாக மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
மனிதன் உயிர் வாழத் தேவையான மற்றும் தவிர்க்க முடியாத பண்டங்கள் இன்றியமையாத பண்டங்கள் எனப்படுகின்றன. (உ.ம்) உணவு, உடை மற்றும் இருப்பிடம்.
சில பண்டங்கள் தவிர்க்கக் கூடியவை என்றாலும், நம்முடைய வாழ்வை எளிதாக, சுகமாக மற்றும் வசதியாக வைத்துக் கொள்வதற்கு பயன்படக் கூடியவை வசதிப் பண்டம் எனப்படும் (உ.ம்.) தொலைக்காட்சிப் பெட்டி, மின்விசிறி, குளிர்சாதனப் பெட்டி மற்றும் குளிரூட்டி (AC) போன்றவைகள்.
சில வகைப் பண்டங்கள் மிக முக்கியமானவை அல்ல. ஆனால் அவை மிக விலை உயர்ந்தவை. இவற்றை ஆடம்பரப் பண்டங்கள் என்கிறோம். (உ.ம்.) நகைகள், வைரங்கள் மற்றும் விலை உயர்ந்த கார்கள். எனினும் கூட உயர் வருமான பிரிவினர் இவைகளை வசதிப் பண்டங்களாகவும் இன்றியமையாத பண்டங்களாகவும் கருதுகின்றனர்.