பொருளாதாரம் - தேவை நெகிழ்ச்சியின் முக்கியத்துவம் | 11th Economics : Chapter 2 : Consumption Analysis
தேவை நெகிழ்ச்சியின் முக்கியத்துவம்
தேவை நெகிழ்ச்சி என்ற கருத்து நடைமுறையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
1. விலைத் தீர்மானம்
நிறைகுறைப் போட்டியிலும் முற்றுரிமையிலும் விற்பனையாளர்கள் தங்களுடைய பண்டத்தின் விலையைத் தீர்மானிப்பதில் தேவை நெகிழ்ச்சி என்ற கருத்தை அடிப்படையாக கொள்கின்றனர். பண்டத்திற்கான தேவை நெகிழ்ச்சியற்றதாக இருக்கும்போது அவர்கள் அதிக விலையை நிர்ணயிக்கிறார்கள்.
2. உற்பத்தி
ஒரு பண்டத்தின் தேவையின் அடிப்படையில் உற்பத்தியாளர்கள், உற்பத்தியின் அளவைத் தீர்மானிக்கிறார்கள்.
3. பகிர்வு
தேவை நெகிழ்ச்சியினைப் பொறுத்து உற்பத்திக் காரணிகளின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
4. பன்னாட்டு வாணிபம்
இரண்டு நாடுகளிடையே வாணிப நிலையை நிர்ணயிக்க தேவை நெகிழ்ச்சி உதவிகரமாக உள்ளது. இரண்டு நாடுகளின் பண்டங்களின் தேவை நெகிழ்ச்சியைப் பொருத்தே ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் அளவு அமைகிறது.
5. பொதுநிதி
அரசாங்கம் வரிக்கொள்கையை உருவாக்க தேவை நெகிழ்ச்சி உதவிகரமாக உள்ளது. ₹ (உ.ம்.) பண்டங்களுக்கான வரிவிதிப்பு.
6. நாட்டுடமையாக்குதல்
தொழிற்சாலைகளை நாட்டுடமையாக்கும் முடிவை எடுப்பதற்கு அரசிற்கு தேவை நெகிழ்ச்சி என்ற கருத்து பயன்படுகிறது.