பொருளாதாரம் - சமநோக்கு வளைகோடுகளின் பண்புகள் | 11th Economics : Chapter 2 : Consumption Analysis
சமநோக்கு வளைகோடுகளின் பண்புகள்
சமநோக்கு வளைகோடுகள் உள்ளுணர்வு சார்ந்து அமைவதால், அவை ஒவ்வொருவருக்கும் தனித்துவம் கொண்டதாக உள்ளன. இருப்பினும் கீழே உள்ளவைகள் பொதுவான பண்புகளாகும்.
சமநோக்கு வளைகோடு எதிர்மறையாக கீழ்நோக்கிச் சரிகிறது. இது நுகர்வோர் அதே அளவு பயன்பாட்டை நிலை நிறுத்த விரும்பினால் Y பண்ட அளவு குறையும்போது X பண்ட அளவு கூடுவதைச் சுட்டிக்காட்டுகிறது (தேவையான வளைவு )
மேலே உள்ள வரைபடத்தில் மூன்று கோடுகளுமே கீழ்நோக்கிச் சரியவில்லை. எனவே அவை சமநோக்கு வளைகோடுகள் இல்லை. மூன்று தொகுப்பிலும் A-யை விட B-யையே தேர்ந்தெடுப்பது போல் உள்ளது.
சமநோக்கு வளைகோடுகள் கீழ்நோக்கி சரிவதோடு மட்டுமல்லாமல் தோற்றுவாய் நோக்கி குவிந்த நிலையில் காணப்படுகின்றன. இதற்கு காரணம் இரண்டு பண்டங்களை பதிலீடு செய்து கொள்ளலாம் என்பது மட்டுமன்றி இரு பண்டங்களுக்கிடையோன இறுதிநிலை பதிலீட்டு வீதம் (MRS) குறைகிறது என்பதை (நுகர்வோர் சமநோக்கு வளைகோட்டில் நகர்ந்து செல்வதன் மூலம்) அறியமுடிகிறது.
IC1 குறைந்த திருப்தியைத் தரக்கூடிய சமநோக்கு வளைகோடாகும். இதில் C என்கிற புள்ளியும், B என்கிற புள்ளியும் உள்ளன.
IC2 என்பது அதிக திருப்தியைக் தரக்கூடிய சமநோக்கு வளைகோடாகும். இதில் C என்கிற புள்ளியும், A என்கிற புள்ளியும் உள்ளன.
இந்த இரண்டு சமநோக்கு வளைகோடுகளும் வெட்டுமிடத்தில் C=Bஆக IC1 லும் C=A ஆக IC2விலும் உள்ளன. இதனால் A=B என பொருள்படும். ஆனால் A என்பது அதிக திருப்தியைத் தரக்கூடிய கோட்டிலும், B என்கிற புள்ளி குறைந்த சமநோக்கு வளைகோட்டிலும் உள்ளன. எனவே, இது சாத்தியம் இல்லை. சமநோக்கு வளைகோடுகள் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளாது.
நுகர்வோர் இரு பண்டங்களின் கலவையை வாங்குகிறார் என்ற அடிப்படை அனுமானத்தையே அச்சுகளைத் தொடுதல் மீறியதாகிறது.
ஒரு பண்டத்தை மட்டும் வாங்குவது ஒற்றைப் பண்ட நுகர்வைக் குறிக்கும். நுகர்வோருக்கு மற்றொரு பண்டத்தின் மேல் ஆர்வம் இல்லாததைக் குறிக்கும் அல்லது ஒரு பண்டத்தை மட்டும் வாங்குவதற்கு அவர் தூண்டப்பட்டதாகும். சம நோக்கு வளைகோடு இரு பண்டங்களின் கலவையினால் பெறப்படும் வளைகோடாகும்