Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | தரவரிசை ஆய்வு (அல்லது தரவரிசை பயன்பாட்டு முறை அல்லது ஹிக்ஸ் மற்றும் ஆலன் முறை அல்லது சமநோக்கு வளைகோட்டு ஆய்வு)

பொருளாதாரம் - தரவரிசை ஆய்வு (அல்லது தரவரிசை பயன்பாட்டு முறை அல்லது ஹிக்ஸ் மற்றும் ஆலன் முறை அல்லது சமநோக்கு வளைகோட்டு ஆய்வு) | 11th Economics : Chapter 2 : Consumption Analysis

   Posted On :  26.07.2022 04:49 am

11வது பொருளாதாரம் : அத்தியாயம் 2 : நுகர்வு பகுப்பாய்வு

தரவரிசை ஆய்வு (அல்லது தரவரிசை பயன்பாட்டு முறை அல்லது ஹிக்ஸ் மற்றும் ஆலன் முறை அல்லது சமநோக்கு வளைகோட்டு ஆய்வு)

தரவரிசை ஆய்வு (அல்லது தரவரிசை பயன்பாட்டு முறை அல்லது ஹிக்ஸ் மற்றும் ஆலன் முறை அல்லது சமநோக்கு வளைகோட்டு ஆய்வு)

தரவரிசை ஆய்வு (அல்லது தரவரிசை பயன்பாட்டு முறை அல்லது ஹிக்ஸ் மற்றும் ஆலன் முறை அல்லது சமநோக்கு வளைகோட்டு ஆய்வு)

அறிமுகம்


1934-ல் R.G.D.ஆலன் (Allen) மற்றும் J.R.ஹிக்ஸ் (Hicks) சமநோக்கு வளைகோடு கோட்பாட்டை "மதிப்புக் கோட்பாட்டின் மறுவடிவமைப்பு" என்னும் நூலில் விளக்கினர்.

F.W. எட்ஜ்வொர்த் (Edgeworth) (ஆங்கில பொருளியலாளர்) மற்றும் வில்பிரட்டோ பேரிட்டோ (Pareto) (இத்தாலிய பொருளியலாளர்) ஆகியோர் எண்ணளவு பயன்பாட்டு ஆய்வை குறை கூறியுள்ளனர். பயன்பாட்டை துல்லியமாக அளவிட முடியாது. ஆனால் ஒப்பிடவோ அல்லது தரப்படுத்தவோ அல்லது, வரிசைப்படுத்தவோ (தர எண்கள் I, II, III, IV மேலும்) முடியும் என அவர்கள் கருதுகின்றனர். 1881ல் எட்ஜ்வொர்த் முதன் முதலில் அறிவியல் பூர்வமாக சமநோக்கு வளைகோட்டு முறையை நுகர்வோர் நடவடிக்கையை அறிய உருவாக்கினார். 1906ல் வில்பிரட்டோ பேரிட்டோ இக்கருத்தில் மாற்றங்களை ஏற்படுத்தினார். 1934-ல் R.G.D.ஆலன் (Allen) மற்றும் J.R.ஹிக்ஸ் (Hicks) ஆகியோர் இக்கருத்தை வளப்படுத்தினர். மீண்டும் 1939ல் J.R. ஹிக்ஸ் தனது மதிப்பு மற்றும் மூலதனம்' என்ற நூலில் சமநோக்கு வளைகோட்டு ஆய்வுக்கு இறுதி வடிவம் கொடுத்தார். 


விருப்ப முன்னுரிமை 

இக்கோட்பாடு விருப்ப முன்னுரிமையின் அடிப்படையில் அமைந்துள்ளது. உச்ச அளவு மனநிறைவு தரும் பண்டங்களின் தொகுப்பையே பொதுவாக சராசரி நுகர்வோர் தேர்ந்தெடுப்பர். எனவே நுகர்வோர் பண்டங்களை அவரவரின் மனநிறைவின் அடிப்படையில் வரிசைப்படுத்துகிறார்கள் மற்றும் அவற்றை தேர்ந்தெடுக்கிறார்கள். இவ்வாறு பண்டங்களின் தொகுப்பை நுகர்பவரின் மனநிறைவிற்கேற்ப வரிசைப்படுத்துவதை விருப்ப முன்னுரிமை என்று அழைக்கிறோம்.


அனுமானங்கள் 

1. நுகர்வோர் பகுத்தறிவு உள்ளவர்கள். மேலும் அவர்கள் திருப்தியை உச்சமாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளார்கள். 

2. பயன்பாட்டை எண்களால் அளவிட முடியாது. ஆனால் தரப்படுத்தலாம் அல்லது ஒப்பிடலாம் அல்லது தர எண்களில் வரிசைப்படுத்தலாம். அதாவது 1, II, III, IV....... 

3. குறைந்து செல் இறுதிநிலை பதிலீட்டு விகிதம் என்ற கருத்தின் அடிப்படையில் சமநோக்கு வளைகோட்டு ஆய்வு அமைகிறது. 

4. நுகர்வோர் சீரான சிந்தனை உள்ளவர்கள். இந்த அனுமானம் மாறக்கூடிய அனுமானம் என அழைக்கப்படுகிறது. நுகர்வோரின் தெரிவு A>B, B>C என இருந்தால் பிறகு A>C என இருக்கும். 


சமநோக்கு அட்டவணை

நுகர்வோருக்கு சம அளவு திருப்தியை தரக்கூடிய இரண்டு பண்டங்களின் பல்வேறு தொகுப்பினை விளக்கும் அட்டவணை சம நோக்கு அட்டவணையாகும். வேறுவகையில் கூறுவதானால் சமநோக்கு அட்டவணை என்பது இரண்டு பண்டங்களின் பல்வேறு இணைப்புகளில் நுகர்வோர் சமமான திருப்தியையே பெறலாம் என்பதைக் கூறுகிறது.


அட்டவணை (2.7)ல் இரண்டு பண்டங்களாகிய ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு ஆகியவற்றின் ஐந்து தொகுப்புகள் உள்ளன. அவர் ஒன்றுக்கு பதிலாக மற்றொரு தொகுப்பை தேர்ந்தெடுப்பதன் மூலம் அதிக திருப்தியையோ அல்லது குறைந்த அளவு திருப்தியையோ பெற மாட்டார். சம அளவு திருப்தியையே பெறுவார். சமநோக்கு அட்டவணை வரைபடத்தின் மூலம் விளக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட ஐந்து தொகுப்புக்களில் எந்த ஒன்றை தேர்ந்தெடுப்பினும் சம அளவு திருப்தியையே நுகர்வோர் பெறுவார்.


Tags : Economics பொருளாதாரம்.
11th Economics : Chapter 2 : Consumption Analysis : Ordinal Analysis (or) Ordinal Utility Approach (or) Hicks and Allen Approach (or) Indifference Curve Analysis Economics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது பொருளாதாரம் : அத்தியாயம் 2 : நுகர்வு பகுப்பாய்வு : தரவரிசை ஆய்வு (அல்லது தரவரிசை பயன்பாட்டு முறை அல்லது ஹிக்ஸ் மற்றும் ஆலன் முறை அல்லது சமநோக்கு வளைகோட்டு ஆய்வு) - பொருளாதாரம் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது பொருளாதாரம் : அத்தியாயம் 2 : நுகர்வு பகுப்பாய்வு