பொருளாதாரம் - தேவை நெகிழ்ச்சியை அளவிடும் முறைகள் | 11th Economics : Chapter 2 : Consumption Analysis
தேவை நெகிழ்ச்சியை அளவிடும் முறைகள்
விலைத் தேவை நெகிழ்ச்சியை மூன்று வகைகளில் அளவிடலாம்.
Ep = ΔQ/ΔP x P/Q
இது விகிதாசார முறை என்றும் அழைக்கப்படுகிறது.
விகிதாச்சார முறையில்
Ep = %ΔQ / %ΔP
இதில்
%ΔQ என்பது தேவையில் ஏற்படும் சதவீத மாற்றம்
%ΔP என்பது விலையில் ஏற்படும் சதவீத மாற்றம்.
நுகர்வோரின் மொத்தச் செலவில் ஏற்படும் மாற்றத்தையோ அல்லது நிறுவனத்தின் மொத்த வருவாயில் ஏற்படும் மாற்றத்தையோ அளவிடுவதன் மூலம் தேவையானது நெகிழ்ச்சி உள்ளதா நெகிழ்ச்சியற்றதா என்பதை எளிய முறையில் அறியமுடியும் என மார்ஷல் குறிப்பிடுகிறார்.
மொத்த வருவாய் = விலை X விற்பனை அளவு
TR = P X Q
விலைக்கும் மொத்தச் செலவிற்கும் எதிர்மறை உறவு இருக்குமெனில் இங்கு தேவை நெகிழ்ச்சியுள்ளதாக இருக்கும்; நேரடி உறவு எனில் நெகிழ்ச்சியற்றதாக இருக்கும். மொத்தச் செலவில் மாற்றமில்லாதபோது நெகிழ்ச்சி ஒன்றுக்குச் சமமாக இருக்கும்.
நேர் தேவைக் கோட்டில் குறிப்பிட்ட புள்ளியினுடைய வலப்பகுதியை இடப்பகுதியால் வகுக்கக் கிடைக்கும் விகிதத்தைக் கொண்டு புள்ளி முறையில் நெகிழ்ச்சியை அளவிடலாம்
புள்ளி நெகிழ்ச்சி = தேவைக் கோட்டில் புள்ளிக்கு கீழ்ப்பகுதியின் அளவு (வலது பகுதி) / தேவைக்கோட்டில் புள்ளிக்கு மேல்பகுதி (இடது பகுதி)
ep = L / U = கீழ்ப்பகுதி / மேல்பகுதி
இங்கு ep என்பது புள்ளி நெகிழ்ச்சி, L என்பது கீழ்ப்பகுதி, U என்பது மேல்பகுதி.