Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | சமநோக்கு வரைபடம்

பொருளாதாரம் - சமநோக்கு வரைபடம் | 11th Economics : Chapter 2 : Consumption Analysis

11வது பொருளாதாரம் : அத்தியாயம் 2 : நுகர்வு பகுப்பாய்வு

சமநோக்கு வரைபடம்

சமநோக்கு அட்டவணையின் அடிப்படையில் நாம் பல்வேறு சமநோக்கு வளைகோடுகளை வரைய முடியும்.

சமநோக்கு வரைபடம்

சமநோக்கு அட்டவணையின் அடிப்படையில் நாம் பல்வேறு சமநோக்கு வளைகோடுகளை வரைய முடியும். எனவே பல்வேறு திருப்தி நிலையைக் குறிக்கின்ற பல சமநோக்கு வளைகோடுகளை கொண்டதையே சமநோக்குத் தொகுதி என்கிறோம். இது வரைபடம் 2.16ல் விளக்கப்பட்டுள்ளது.


சமநோக்கு வளைகோடுகள் IC1, IC2, IC3, ஆகியவற்றை உள்ளடக்கியது சமநோக்கு தொகுதி ஆகும். வரைபடம் 2.16-ல் கீழே உள்ள சமநோக்கு வளைகோட்டைக் காட்டிலும் (IC1) மேலே உள்ள சமநோக்கு வளைகோடுகள் (IC2, IC3) அதிக அளவு திருப்தியைக் கொடுப்பதைக் குறிக்கின்றன. 

இறுதிநிலை பதிலீட்டு வீதம்

சமநோக்கு வளைகோட்டின் வடிவம், தெரிவுகள் பற்றிய பயனுள்ள தகவலைத் தருகிறது. சமநோக்கு வளைகோடு இறுதிநிலைப் பயன்பாடு என்பதற்குப் பதிலாக இறுதிநிலை பதிலீட்டு வீதம் என்ற கருத்தை தருகிறது.

லெப்ட்விச் (Leftwich) என்பவரின் கூற்றுப்படி," X மற்றும் Yன் இறுதிநிலை பதிலீட்டு வீதம் (MRSxy) என்பது ஒரே சமநோக்கு வளைகோட்டில் இருந்து கொண்டே கூடுதல் அலகு Xயை பெற நுகர்வோர் விட்டுக் கொடுக்க விரும்பும் Yன் அளவு ஆகும்" என்கிறார்.

Tags : Economics பொருளாதாரம்.
11th Economics : Chapter 2 : Consumption Analysis : An Indifference Map Economics in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது பொருளாதாரம் : அத்தியாயம் 2 : நுகர்வு பகுப்பாய்வு : சமநோக்கு வரைபடம் - பொருளாதாரம் : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது பொருளாதாரம் : அத்தியாயம் 2 : நுகர்வு பகுப்பாய்வு