தமிழ்நாடு - மானுடப் புவியியல் | புவியியல் | சமூக அறிவியல் - பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும். | 10th Social Science : Geography : Chapter 8 : Human Geography of Tamil Nadu
VIII. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும்.
1. தமிழ்நாட்டில் தோட்ட வேளாண்மை பற்றி விளக்குக.
• மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைச்சரிவுகளில் தோட்ட வேளாண்மை
பயிரிடப்படுகிறது.
• முக்கிய தோட்டப்பயிர்கள் தேயிலை, காப்பி, ரப்பர், முந்திரி,
பாக்கு, மற்றும் சின்கோனா ஆகியன.
• தேயிலை உற்பத்தியில் அசாம் மாநிலத்திற்கு அடுத்த இடத்தில் தமிழகம்
இருக்கின்றது.
• காபி உற்பத்தியில் கர்நாடகா மாநிலத்திற்கு அடுத்த இடத்தில் தமிழகம்
இருக்கின்றது.
• நீலகிரி மலை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மலைகளில் தேயிலையும்
மேற்குத் தொடர்ச்சி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் காபியும் பயிரிடப்படுகின்றது.
• இரப்பர் உற்பத்தியில் கன்னியாகுமாரி மலைப்பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றது.
• மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைச் சரிவுகளில்
மிளகு பயிரிடப்படுகின்றது.
• கடலூர் மாவட்டத்திலும் முந்திரி பயிரிடப்படுகின்றது.
2. தமிழ்நாட்டின் நீர் ஆதாரங்களைப் பற்றி எழுதவும்.
• மனித குலத்திற்கும் புவியில் வாழும் இலட்சக்கணக்கான உயிரினங்களுக்கும்
நீர் ஆதாரங்கள், இயற்கையின் ஒரு விலைமதிப்பற்ற பரிசாகும்.
• தமிழ்நாட்டின் நீர்வளங்களை பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்கு திட்டங்களே
பூர்த்தி செய்கின்றன. அவைகள் முறையே:
• மேட்டூர் அணை
• முல்லைப் பெரியார் அணை
• பவானிசாகர் அணை
• வைகை அணை
• அமராவதி அணை
• மணிமுத்தாறு அணை
• கிருஷ்ணகிரி அணை
• பாபநாசம் அணை
• சாத்தனூர் அணை
• பரம்பிகுளம் ஆழியாறு திட்டம்
• தமிழ்நாட்டில் நீர் ஆதாரங்கள் இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவைகள் முறையே:
• மேற்பரப்பு நீர்வள ஆதாரங்கள்
• நிலத்தடி நீர்வள ஆதாரங்கள்.
மேற்பரப்பு நீர்வள ஆதாரங்கள் :
• தமிழ்நாட்டில் மொத்த மேற்பரப்பு நீரின் அளவு சுமார் 24.864 மில்லியன் கன மில்லியன் மீட்டராகும்.
• தமிழ்நாட்டில் 17 பெரிய ஆற்று
வடிநிலப்பகுதிகள், 81 நீர்த்தேக்கங்கள், 41.262 ஏரிகள் உள்ளன.
• பெரும்பகுதி மேற்பரப்பு நீர்ப் பாசனத்திற்கு அதிக அளவில் பயன்படுகின்றன.
நிலத்தடி நீர்வள ஆதாரங்கள்
• தமிழ்நாட்டில் பயன்படுத்திக் கொள்ள நிலத்தடி நீர் வளம் 22,433 மில்லியன் கன மீட்டராகும்.
• தற்போதைய பயன்பாட்டின் அளவு 13.558 மில்லியன் க.மீட்டராகும்.
• மறுவூட்டல் மூலம் கிடைக்கும் நீர் 60 சதவிகிதமாகும். மீத இருப்பு நீரானது சுமார்
8.875 மில்லியன் கன மீட்டராகும் (சுமார்
40%). நிலத்தடி நீர் குடிநீர் தேவைக்கு அதிகம் பயன்படுகின்றது.
3. தமிழ்நாட்டின் கனிம பரவலை விவரி.
கனிம வளங்களின் வகைகள்
1. பழுப்பு நிலக்கரி
2. நிலக்கரி படிமங்கள்
3. இயற்கை எரிவாயு எண்ணெய்
4. இரும்புத்தாது படிவுகள்
5. மேக்னடைட் தாது
6. பாக்சைட் தாதுக்கள்
7. ஜிப்சம்
8. ஹேமனைட் - ருட்டிஸ்
9. சுண்ணாம்புக்கல்
10. பெலட்ஸ்பர்க் படிகக்கல், தாமிரம், காரியம்.
கனிம வளங்கள் பரவல்
1. கடலூர் - நெய்வேலி.
2. இராமநாதபுரம் பகுதிகள்.
3. காவிரி வடிநிலப் பகுதிகள்.
4. சேலம், கஞ்சமலை, திருவண்ணாமலை, கல்வராயன் மலை.
5. சேலம், வேலூர் மாவட்டங்கள்.
6. சேர்வராயன் குன்றுகள், கோத்தகிரி,
உதகமண்டலம், பழனிமலை, கொல்லிமலை.
7. திருநெல்வேலி, தூத்துக்குடி,
விருதுநகர் மாவட்டம்.
8. கன்னியாகுமரி கடற்கரை மணல் பகுதிகள்.
9. கோயம்புத்தூர், கடலூர்,
திருநெல்வேலி, கரூர், மதுரை,
நாமக்கல், பெரம்பலூர், சேலம்,
இராமநாதபுரம், திருவள்ளூர்.
10. மாநிலத்தின் சில பகுதிகள்.
4. தமிழ்நாட்டில் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
மற்றும் அதற்கான காரணங்களை எழுதுக.
நம் நாட்டில் வரையறுக்கப்பட்ட பகுதியில் வாழும் மக்களின் எண்ணிக்கையே
மக்கள் தொகை எனப்படுகிறது. மக்கள் தொகை அதிகரிப்பு
நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் முக்கியமான காரணியாகும்.
மக்கள் தொகை அதிகம் கொண்ட பகுதிகள்
கோவை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம்,
சேலம், திருச்சி, மதுரை,
அருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டங்கள்.
மக்கள் தொகை அதிகரிக்க காரணங்கள் :
• சென்னை மாநில தலைநகர், நகர்
விரிவாக்கம், வேலைவாய்ப்பு நிறைய கொண்ட பகுதிகளைக் கொண்டுள்ளது.
• தகவல் தொடர்பு பூங்காக்கள், தொழிலகங்கள்,
ஆயத்த ஆடைகள், சினிமாத்துறை போன்றவை வேலை வாய்ப்பை
வழங்குகின்றன.
• பிற பகுதிகள் வேளாண்மை மற்றும்
தொழில் துறையில் சிறந்து விளங்குவதால் மக்கள் தொகை அதிகரிக்க முக்கிய காரணமாகும்.
5. தமிழ்நாட்டின் பல்வேறு போக்குவரத்து முறைகளை விவரி.
போக்குவரத்து தமிழ்நாட்டில் பெருளாதார வளர்ச்சி காரணிகளில் பெரும் பங்கு
வகிக்கின்றது. அப்போக்குவரத்தானது நான்கு வகைகளாக
உள்ளது. அவைகள் முறையே:
• சாலைப் போக்குவரத்து
• வான்வழி போக்குவரத்து
• இரயில் போக்குவரத்து
• நீர்வழி போக்குவரத்து
சாலைப் போக்குவரத்து:
• இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ள போக்குவரத்து. மாநில நெடுஞ்சாலைத்துறை பராமரிக்கின்றது. மாநிலத்தின் மொத்த சாலைகளின் நீளம் 1,67,000 கி.மீட்டராகும்.
• மிக முக்கியமான சாலைகளாக:
• தேசிய நெடுஞ்சாலைகள்
• மாநில நெடுஞ்சாலைகள்
• மாநகராட்சி, நகராட்சி நெடுஞ்சாலைகள்
• ஊராட்சி ஒன்றிய சாலைகள
• கிராமப் பஞ்சாயத்து சாலைகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இரயில் போக்குவரத்து :
• தெற்கு இரயில்வேயின் தலைமையிடம் சென்னை. தமிழ் நாட்டின் மொத்த இருப்பு பாதையின் நீளம்
6,693 கி.மீட்டராகும். சுமார்
690 இரயில்வே நிலையங்கள் உள்ளன.
• சென்னையில் புறநகர் இரயில் போக்குவரத்து பறக்கும் தொடருந்து திட்டம்
நன்கு வளர்ச்சியடைந்துள்ளது.
• தற்போது, மெட்ரோ ரயில் திட்டம்,
விரிவாக்கம் செய்து வருகிறது.
வான்வழிப் போக்குவரத்து :
• தமிழ்நாட்டில் 4 முக்கிய சர்வதேச
விமான நிலையங்கள் உள்ளன. அவைகள் முறையே:
• சென்னை
• கோயம்புத்தூர்
• திருச்சி
• மதுரை
• சென்னை இந்தியாவின் மூன்றாவது பெரிய விமான நிலையம் ஆகும்.
• தொழிற்துறை, பயணிகள் போக்குவரத்திற்கு
பேரூதவியாக இருந்து வருகிறது.
• சரக்கு போக்குவரத்தில் வான்வழி பெரும் பங்கு வகிக்கின்றது.
நீர்வழிப் போக்குவரத்து:
• இந்தியாவில் 24% சதவிகித பங்குடன்
தமிழகம் முன்னணியில் உள்ளது.
• சென்னை, எண்ணூர், தூத்துக்குடி முக்கிய துறைமுகங்களாக உள்ளன.
• கடலூர், குளச்சல், நாகை இதர சிறிய துறைமுகங்களாகும்.
• சென்னை, தூத்துக்குடி துறைமுகங்கள்
73 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை ஆண்டுதோறும் கையாளுகின்றது.
சென்னை செயற்கை துறைமுகமாகும்.
6. சாலைப் பாதுகாப்பு விதிகள் பற்றி எழுதவும்.
• சாலைக் குறியீடுகள் பற்றிய விழிப்புணர்வு.
• நில், கவனி, செல்.
• வாகனம் நெருங்கி வருகிறதா என்பதை உறுதி செய்தல்.
• சாலைகளில் அதிவிரைவாக வாகனங்கள் செலுத்துவதை தவிர்த்தல்.
• பாதசாரிகளுக்கான இடத்தில் விதிகளைப் பின்பற்றுதல்.
• வாகனம் ஓட்டும் போது கைகளை நீட்டாதிருத்தல்.
• ஒருபோதும் வளைவுகளில் உபகரணங்களை முந்தாமல் நின்று கவனமாகச் செல்தல்.
• மது அருந்தாமல் வண்டி ஓட்டுதல்.
• மொபைல் போன்களை பயன்படுத்தாமல் வண்டி ஓட்டுதல்.