தமிழ்நாடு
– மானுடப் புவியியல்
• தமிழ்நாட்டின் வேளாண் காரணிகள், முக்கியப் பயிர்கள்
மற்றும் அதன் பரவலைப் புரிந்துகொள்ளல்
• தமிழ்நாட்டின் நீர்
வளங்களைப் பற்றி தெரிந்துகொள்ளல்
• தமிழ்நாட்டின் கனிம
மற்றும் தொழிலக வளங்கள் பற்றி கற்றறிதல்
• தமிழ்நாட்டின் மக்கள்
தொகை மற்றும் அதன் கூறுகள் பற்றி பகுப்பாய்வு செய்தல்
• தமிழ்நாட்டின் -
மனிதனால் உருவாக்கப்பட்ட பேரிடரைப் பற்றி தெரிந்துகொள்ளல்
மானுடப்
புவியியல் என்பது மனித சமுதாயம் வளர்ச்சி பெற்ற வழிமுறைகள் மற்றும் இயற்கை
சூழலுடனான செயல்பாடுகள் குறித்துக் கற்றறிதல் ஆகும். தமிழ்நாட்டில் காணப்படும்
பல்வேறு வளப்பரவல்கள், பண்புகள் மற்றும் பயன்பாடுகள் பற்றி
இப்பாடப்பகுதி விளக்குகிறது. புவியானது, பல்வேறு வகையான இயற்கை வளங்களாகிய
நிலப்பகுதிகள், ஆறுகள், மண்வகைகள், இயற்கை
தாவரங்கள், நீர் மற்றும் வனவளங்கள் ஆகியவற்றை
வழங்கியுள்ளது என்பதை முன்னரே கற்றுள்ளோம். மேற்கண்டவற்றை பயன்படுத்தினால் மட்டுமே
அவைசார்வளங்கள் ஆகும். மனிதர்கள் தங்கள் அறிவு கூர்மை மற்றும் திறன்களால் பல
வளங்களைப் பயன்படுத்துகின்றனர். எனவே புவியில் காணப்படும் வளங்களில் மனித வளமே
மிகச் சிறந்த வளமாகும். மனிதர்கள் தங்களது திறன்கள் மூலம் இயற்கை வளங்களைப்
பயன்படுத்தக் கூடிய பொருள்களாக மாற்றுகின்றனர்.