தமிழ்நாடு - மானுடப் புவியியல் - வேறுபடுத்துக. | 10th Social Science : Geography : Chapter 8 : Human Geography of Tamil Nadu
IV. வேறுபடுத்துக.
1. கடல் மீன்பிடித்தல் மற்றும் உள்நாட்டு மீன்பிடித்தல்.
கடல் மீன்பிடித்தல்
1. கடற்கரையில் இருந்து சில கி.மீட்டர் தூரம் வரை மீன்பிடித்தல் கடலோர மீன் பிடிப்பு எனப்படுகின்றது.
2. சுறா, பறவை மீன்,
சங்கு மீன், வெள்ளிவயிறு, திருக்கை, சீலா, மற்றும் நண்டுவகைகள்
பிடிக்கப்படுகின்றன.
3. டீசல் படகுகள், கட்டுமரம்,
மீன் வலைகள் கொண்டு பிடிக்கப்படும்.
4. மாநில கடல் மீன் உற்பத்தியில் 40% சதவீத பங்களிப்பைத் தருகின்றது.
உள்நாட்டு மீன்பிடித்தல்
1. ஏரிகள், ஆறுகள், குளங்கள், கழிமுகங்கள் மற்றும் சதுப்பு நிலப் பகுதி போன்ற
நீர் நிலைகளில் உள்நாட்டு மீன் பிடிப்பு நடைபெறுகிறது.
2. மீன் வளர்ப்பு, மீன் குஞ்சுகளால்
பொறிப்பகம், மீன்குளவு வளர்ப்பகம், அலங்கார
மீன் வளர்ப்பு போன்றவைகள் வளர்க்கப்படுகின்றன.
3. பெரிய மின் மோட்டார் பொருத்தப்பட்டு ஆழ்கடலில் மீன்கள்
பிடிக்கப்படும்.
4. மாநில பொருளாதாரத்தில் 1.25% சதவீத பங்களிப்பைத் தருகின்றது.
2. உணவுப் பயிர்கள் மற்றும் வாணிபப் பயிர்கள்.
உணவுப் பயிர்கள்
1. மக்களின் உணவுத் தேவைக்காக பயிரிடப்படும் பயிர்கள்.
2. நெல் மற்றும் திணை வகைகளான சோளம், கேழ்வரகு, கம்பு போன்றவை.
3. உணவுப் பயிர்களில் நெல், பொன்னி,
மற்றும் கிச்சடி சம்பா தமிழகத்தின் பயிரிடப்படும் முக்கிய நெல் வகையாகும்.
4. காவிரி டெல்டா பகுதிகள், மற்றும்
மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம் மாவட்டங்கள்.
உணவல்லாத பயிர்கள்
1. தொழிலகங்கள் மட்டுமன்றி வணிகத் தேவைக்காக பயிரிடப்படும்
பயிர்கள்.
2. கரும்பு, எண்ணெய்வித்துக்கள்,
பருத்தி மற்றும் தோட்டப் பயிர்களான காபி, தேயிலை,
ரப்பர் போன்றவை.
3. கரும்பும், இழைப்பயிரான பருத்தியும்,
தமிழகத்தின் மிக முக்கியமான உணவல்லாத பயிர்களாகும்.
4. விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், கடலூர்
மாவட்டங்கள்.
3. மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர்.
மேற்பரப்பு நீர்
1. மழைநீர் மூலம் பெறப்படும் ஆற்று வடிநிலப்பகுதி நீர்
நீர்த்தேக்கங்கள், ஏரிகள், குளங்களில்,
உள்ள நீர் மேற்பரப்பு நீர் எனப்படும்.
2. மேற்பரப்பு நீர் பருவ மழையை மட்டுமே
நம்பி கிடைக்கும் நீர்.
3. மேற்பரப்பில் 95% பயன்பாட்டில்
இருந்து வருகிறது.
நிலத்தடி நீர்
1. மழைநீரானது பூமியின் உள் சென்று தங்கி அதனை கிணறு,
மற்றும் ஆழ்துளைக் கிணறு (போர்வெல்) மூலம் பெறப்படும் நீர் நிலத்தடி நீர் எனப்படும்.
2. நிலத்தடி நீர் பூமியின் உள்ளே தங்கி நாம் எடுக்கும்
நீர்.
3. நிலத்தடி நீரில் 80% த்திற்கும்
அதிகமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது.