தமிழ்நாடு – மானுடப் புவியியல் - தகவல் தொழில் நுட்பம் | 10th Social Science : Geography : Chapter 8 : Human Geography of Tamil Nadu
தகவல் தொழில் நுட்பம்
தேசிய
மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவன கூட்டமைப்பின்படி (NAASCOM) இந்தியாவின்
மொத்த மென்பொருள் ஏற்றுமதியில் தென் மாநிலங்கள் தொடர்ந்து மேலானப் பங்களிப்பை செய்து
வருகின்றன. தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்கள் இணைந்து
இந்தியாவின் மொத்த மென்பொருள் ஏற்றுமதியில் 59.6%ஐ செய்கின்றன.
நாட்டின் மென்பொருள் ஏற்றுமதியில் கர்நாடகாவுக்கு அடுத்ததாக தமிழ்நாடு
இரண்டாவது பெரிய ஏற்றுமதி செய்யும் மாநிலமாக உள்ளது.
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சர்வதேச அளவில் மிகச்சிறந்த பகுதிகளாகவும் ஏற்றுமதியை ஊக்குவிக்கக்கூடிய சூழலைப் பெற்றதாகவும் உள்ளது. இம்மண்டலம் பல உற்பத்திப் பெருள்களை அளிப்பதுடன் பல்வேறு சேவைகளையும் அளிக்கிறது. நாங்குநேரி, எண்ணூர், ஓசூர் மற்றும் பெரம்பலூரில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைந்துள்ளன. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலங்களான - டைடல் பூங்கா-2, டைடல் பூங்கா-3 மற்றும் உயிரி மருந்தகம் போன்றவை சென்னையிலும் டைடல் பூங்கா-4 கோயம்புத்தூரிலும் அமைந்துள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள்
டைடல்
பூங்கா, அசெண்டாஸ்,
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளுக்கான
மகேந்திரா உலக நகரம், சிறப்பு பொருளாதார மண்டலம்-டைடல் பூங்கா || மற்றும் டைடல் பூங்கா III, கோயம்புத்தூர் சிறப்பு பொருளாதார மண்டலம்-டைடல் பூங்கா
ஆகியனவாகும்.
உற்பத்தித்
தொழில் என்பது மாநிலப் பொருளாதாரத்தின் துடிப்பான துறைகளில் ஒன்றாகும். இது பொறியியல் உற்பத்தி
தொழில்துறையில் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது. வாகனங்கள்
மற்றும் இதரபாகங்கள் உற்பத்தி, வாகன உற்பத்தி, மூல உலோகம் மற்றும் உலோகக் கலவைத் தொழில்கள், உலோகப்
பொருள்கள் மற்றும் பழுதுபார்க்கும் கருவிகள் ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றன.
இந்தியாவில்
உற்பத்தி செய்யப்படும் வாகனத் தொழில்களில் 21% பயணிகள் மகிழுந்து, 33% வணிக
வாகனங்கள் மற்றும் 35% வாகன உதிரிபாகங்கள் ஆகியன தமிழ்நாட்டின்
அதிகமான பங்களிப்பாகும். போர்டு, ஹூண்டாய்,
எச் எம் மிட்சுபிவி, அசோக் லைலாண்ட் மற்றும் வேளாண்
கருவிகள் நிறுவனம் (TAFE) (இழுவை இயந்திரம்)
(Tractor), ஆகியவற்றின் உற்பத்திக் தளங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளன.
கைத்தறித்
துறையானது மாநிலத்தில் மிகப்பெரிய குடிசைத் தொழிலாகும். இது கிராமப்புற மக்களுக்கு
வாழ்வாதாரத்தையும் ஏற்றுமதி வருவாயையும் அளிக்கின்றன. நெசவாளர்
சங்கங்கள், ‘பள்ளிக் குழந்தைகளுக்கு விலையில்லா சீருடையும்,
விலையில்லா வேட்டி மற்றும் சேலை’ திட்டத்திற்கு தேவையான துணிகளையும்
உற்பத்தி செய்கின்றன.
தமிழ்நாட்டில்
சர்க்கரைத் தொழிலகம் ஒரு வேளாண் சார்ந்த தொழிலகமாகும். கிராமப்புற பகுதிகள்
மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்கினை வகிக்கிறது. சர்க்கரைத் தொழிலகங்கள் பல ஆயிரம் மக்களுக்கு நேரடி வேலைவாய்ப்பையும்,
கரும்பு பயிர் சாகுபடி, அறுவடை, போக்குவரத்து மற்றும் இதரப் பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் வேளாண்
தொழிலாளர்கள் போன்ற பல இலட்சம் மக்களுக்கு மறைமுக வேலை வாய்ப்பையும் வழங்குகின்றன.
சுற்றுலாத்துறை
ஒரு தொழிலகமாகக் கருதப்படுகிறது.
ஏனெனில் இதில் ஏராளமான மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முக்கியப்பங்கு
வகிக்கின்றன. சமீப காலங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்
பயணிகளுக்கு முன்னணித் தலங்களில் ஒன்றாக தமிழகம் உருவாகிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சுற்றுலாத்துறை,
தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தால் (TTDC) ஊக்குவிக்கப்படுகிறது. பழங்கால நினைவுச் சின்னங்கள்,
புனிதத்தலங்கள், மலைவாழிடங்கள், பலவகையான இயற்கை நிலத்தோற்றங்கள், நீண்ட கடற்கரை,
கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றுடன் தமிழ்நாடு சுற்றுலாப் பயணிகளுக்கு
மிகச் சிறந்த மாநிலமாக உள்ளது.