தமிழ்நாடு - மானுடப் புவியியல் | புவியியல் | சமூக அறிவியல் - கீழ்க்கண்டவற்றிற்குக் காரணம் கூறுக. | 10th Social Science : Geography : Chapter 8 : Human Geography of Tamil Nadu
VII. கீழ்க்கண்டவற்றிற்குக்
காரணம் கூறுக.
1. விவசாயிகள் இரசாயண வேளாண்மையிலிருந்து கரிம
(இயற்கை) வேளாண்மைக்கு மாறுகிறார்கள்.
• இயற்கை வேளாண்மையில் செயற்கை உரங்கள், பூச்சி கொல்லிகள், தாவர வளர்ச்சி
சீராக்கிகள் (செயற்கை உரங்கள்) கால்நடை
தீவனக் கலப்புகள் பயன்படுத்துவதில்லை.
• மாறாக மண்புழு உரங்கள், தாவரக்
கழிவுகள், விலங்கு கழிவுகள் கொண்ட உரங்கள், பூச்சிக் கொல்லிக்கு மாற்றாக பஞ்சகவ்யங்கள் பயன்படுத்துவதால் விவசாயிகள் இயற்கை
வேளாண்மைக்கு மாறுகின்றனர்.
• குறைவான விவசாயிகளே இதனைப் பயன்படுத்துகின்றனர்.
2. கிராமங்களை விட பெருநகரங்களில் மக்கள் தொகை நெருக்கம்
அதிகம்.
• பெருநகரங்களில் வேலை வாய்ப்புகள், சுகாதார வசதிகள், பள்ளி மேற்படிப்புகள், போக்குவரத்து வசதிகள் அதிகம் உள்ளன.
• பல்நோக்கு வேலைவாய்ப்புகள் அதிகம் கிடைக்கின்றன.
• தரமான குடிநீர் கிடைக்கின்றது.
• ஆதலால் கிராம மக்கள் பெருநகரங்களை நோக்கி படையெடுக்கின்றனர்.
3. தமிழ்நாட்டின் ‘நெசவாலைத் தலைநகர்' என
கரூர் அழைக்கப்படுகிறது.
• கரூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் கைத்தறி நெசவுகள், விசைத் தறிகள், நிறைய பரவி
உள்ளது.
• ஆயத்த ஆடைகள், டையிங் தொழிலகங்கள்,
கரூரைச் சுற்றி உள்ளன.
• ஆதலால் கரூர் தமிழ்நாட்டில் நெசவுத் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது.