இருபரிமாண பகுமுறை வடிவியல்−II - பயிற்சி 5.6: சரியான விடையைத் தேர்ந்தெடுக்க | 12th Maths : UNIT 5 : Two Dimensional Analytical Geometry II
பயிற்சி 5.6
கொடுக்கப்பட்ட நான்கு விடைகளிலிருந்து சரியான அல்லது மிகப் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.
1. (1, 5) மற்றும் (4, 1) என்ற புள்ளிகள் வழிச் செல்வதும் y −அச்சைத் தொட்டுச் செல்வதுமான வட்டத்தின் சமன்பாடு x2 + y2 −5x − 6y + 9 + λ(4x + 3y − 19) = 0 எனில் λ −ன் மதிப்பு
(1) 0, −40/9
(2) 0
(3) 40/9
(4) −40/9
விடை: (1) 0, −40/9
2. செவ்வகல நீளம் 8 அலகுகள் மற்றும் துணையச்சின் நீளம் குவியங்களுக்கிடையே உள்ள தூரத்தில் பாதி உள்ள அதிபரவளையத்தின் மையத்தொலைத் தகவு
(1) 4/3
(2) 4/√3
(3) 2/√3
(4) 3/2
விடை: (3) 2/√3
3. வட்டம் x2 + y2 = 4x + 8y + 5 நேர்க்கோடு 3x −4y = m −ஐ இரு வெவ்வேறு புள்ளிகளில் வெட்டுகின்றது எனில்
(1) 15 < m <65
(2) 35 < m <85
(3) −85 <m < −35
(4) −35 < m < 15
விடை: (4) −35 < m < 15
4. x −அச்சை (1,0) என்ற புள்ளியில் தொட்டுச் செல்வதும் (2,3) என்ற புள்ளிவழிச் செல்வதுமான வட்டத்தின் விட்டம்
(1) 6/5
(2) 5/3
(3)10/3
(4) 3/5
விடை: (3) 10/3
5. 3x2 + by2 + 4bx − 6by + b2 = 0 என்ற வட்டத்தின் ஆரம்
(1) 1
(2) 3
(3) √10
(4) √11
விடை: (3) √10
6. x2 − 8x – 12 = 0 மற்றும் y2 −14y + 45 = 0 என்ற கோடுகளால் அடைபடும் சதுரத்தின் உள்ளே வரையப்படும் மிகப்பெரிய வட்டத்தின் ஆரம்
(1) (4,7)
(2) (7,4)
(3) (9,4)
(4) (4,9)
விடை: (1) (4,7)
7. நேர்க்கோடு 2x + 4y = 3−க்கு இணையாக x2 + y2 − 2x − 2y + 1 = 0 என்ற வட்டத்தின் செங்கோட்டுச் சமன்பாடு
(1) x + 2y = 3
(2) x + 2y + 3 = 0
(3) 2x + 4y + 3 = 0
(4) x − 2y + 3 = 0
விடை: (1) x + 2y = 3
8. P(x, y) என்ற புள்ளி குவியங்கள் F1(3, 0) மற்றும் F2(−3, 0) கொண்ட கூம்பு வளைவு 16x2 + 25y2 = 400 −ன் மீதுள்ள புள்ளி எனில் PF1 + PF2 −ன் மதிப்பு
(1) 8
(2) 6
(3) 10
(4) 12
விடை: (3) 10
9. x + y = 6 மற்றும் x + 2y = 4 என்ற நேர்க்கோடுகளை விட்டங்களாகக் கொண்டு (6, 2) புள்ளிவழிச் செல்லும் வட்டத்தின் ஆரம்
(1) 10
(2) 2√5
(3) 6
(4) 4
விடை: (2) 2√5
10. என்ற அதிபரவளையங்களின் குவியங்கள் ஒரு நாற்கரத்தின் முனைகள் எனில் அந்த நாற்கரத்தின் பரப்பு
(1) 4(a2 + b2)
(2) 2(a2 + b2)
(3) a2 + b2
(4) 1/2(a2 + b2)
விடை: (2) 2(a2 + b2)
11. y2 = 4x என்ற பரவளையத்தின் செவ்வகல முனைகளில் வரையப்பட்ட செங்குத்துக் கோடுகள் (x − 3)2 + (y + 2)2 = r2 என்ற வட்டத்தின் தொடுகோடுகள் எனில் r2 −ன் மதிப்பு
(1) 2
(2) 3
(3) 1
(4) 4
விடை: (1) 2
12. x + y = k என்ற நேர்க்கோடு பரவளையம் y2 = 12x −இன் செங்கோட்டுச் சமன்பாடாக உள்ளது எனில் k −ன் மதிப்பு
(1) 3
(2) −1
(3) 1
(4) 9
விடை: (4) 9
13. நீள்வட்டம் E1 : செவ்வகம் R −க்குள் செவ்வகத்தின் பக்கங்கள் நீள்வட்டத்தின் அச்சுகளுக்கு இணையாக இருக்குமாறு அமைந்துள்ளன. அந்த செவ்வகத்தின் சுற்றுவட்டமாக அமைந்த மற்றொரு நீள்வட்டம் E2, (0, 4) என்ற புள்ளி வழியாகச் செல்கிறது எனில் அந்த நீள்வட்டத்தின் மையத்தொலைத் தகவு
(1) √2/2
(2) √3/2
(3) 1/2
(4) 3/4
விடை: (3) 1/2
14. 2x − y = 1 என்ற கோட்டிற்கு இணையாக என்ற நீள்வட்டத்திற்கு தொடுகோடுகள் வரையப்பட்டால் தொடுபுள்ளிகளில் ஒன்று
(1) (9/2√2 , −1/√2)
(2) (−9/2√2 , 1/√2)
(3) (9/2√2 , 1/√2)
(4) (3√3, −2√2)
விடை: (3) (9/2√2 , 1/√2)
15. என்ற நீள்வட்டத்தின் குவியங்கள் வழியாகவும் (0, 3) என்ற புள்ளியை மையமாகவும் கொண்ட நீள்வட்டத்தின் சமன்பாடு
(1) x2 + y2 − 6y − 7 = 0
(2) x2 + y2 − 6y + 7 = 0
(3) x2 + y2 − 6y −5 = 0
(4) x2 + y2 − 6y + 5 = 0
விடை: (1) x2 + y2 − 6y − 7 = 0
16. C என்ற வட்டத்தின் மையம் (1, 1) மற்றும் ஆரம் 1 அலகு என்க. T என்ற வட்டத்தின் மையம் (0, y) ஆகவும் ஆதிப்புள்ளி வழியாகவும் உள்ளது. மேலும் C என்ற வட்டத்தை வெளிப்புறமாகத் தொட்டுச் செல்கிறது எனில் வட்டம் T −ன் ஆரம்
(1) √3/√2
(2) √3/2
(3) 1/2
(4) 1/4
விடை: (4) 1/4
17. மையம் ஆதிப்புள்ளியாகவும் நெட்டச்சு x−அச்சாகவும் உள்ள நீள்வட்டத்தைக் கருத்தில் கொள்க. அதன் மையத்தொலைத் தகவு 3/5 மற்றும் குவியங்களுக்கிடையே உள்ள தூரம் 6 எனில் அந்த நீள்வட்டத்தின் உள்ளே நெட்டச்சு மற்றும் குற்றச்சுகளை மூலைவிட்டங்களாக் கொண்டு வரையப்படும் நாற்கரத்தின் பரப்பு
(1) 8
(2) 32
(3) 80
(4) 40
விடை: (4) 40
18. என்ற நீள்வட்டத்தினுள் வரையப்படும் மிகப்பெரிய செவ்வகத்தின் பரப்பு
(1) 2ab
(2) ab
(3) √[ab]
(4) a/b
விடை: (1) 2ab
19. நீள்வட்டத்தின் அரைக்குற்றச்சு OB, F மற்றும் F' குவியங்கள் மற்றும் FBF' ஒரு செங்கோணம் எனில் அந்த நீள்வட்டத்தின் மையத்தொலைத் தகவு காண்க.
(1) 1/√2
(2) 1/2
(3) 1/4
(4) 1/√3
விடை: (1) 1/√2
20. (x − 3)2 + (y − 4)2 = y2/9 என்ற நீள்வட்டத்தின் மையத்தொலைத் தகவு
(1) √3 / 2
(2) 1 / 3
(3) 1 / 3√2
(4) 1 / √3
விடை: (2) 1 / 3
21. P என்ற புள்ளியிலிருந்து y2 = 4x என்ற பரவளையத்திற்கு வரையப்படும் இரு தொடுகோடுகளுக்கிடையேயான கோணம் செங்கோணம் எனில் P −ன் நியமப்பாதை
(1) 2x + 1 = 0
(2) x = −1
(3) 2x – 1 = 0
(4) x = 1
விடை: (2) x = −1
22. (1, −2) என்ற புள்ளி வழியாகவும் (3, 0) என்ற புள்ளியில் x −அச்சைத் தொட்டுச் செல்வதுமான வட்டம் பின்வரும் புள்ளிகளில் எந்தப் புள்ளி வழியாகச் செல்லும்?
(1) (−5, 2)
(2) (2, −5)
(3) (5, −2)
(4) (−2, 5)
விடை: (3) (5, −2)
23. (−2, 0)−இலிருந்து ஒரு நகரும் புள்ளிக்கான தூரம் அந்தப் புள்ளிக்கும் நேர்க்கோடு x = −9/2 −க்கும் இடையேயான தூரத்தைப் போல் 2/3 மடங்கு உள்ளது எனில் அந்தப் புள்ளியின் நியமப்பாதை
(1) பரவளையம்
(2) அதிபரவளையம்
(3) நீள்வட்டம்
(4) வட்டம்
விடை: (3) நீள்வட்டம்
24. x2 − (a + b)x – 4 = 0 என்ற சமன்பாட்டின் மூலங்களின் மதிப்புகள் m−ன் மதிப்புகளாக இருக்கும்போது y = mx + 2√5 என்ற நேர்க்கோடு 16x2 − 9y2 = 144 என்ற அதிபரவளையத்தைத் தொட்டுச் செல்கின்றது எனில் (a + b) −ன் மதிப்பு
(1) 2
(2) 4
(3) 0
(4) −2
விடை: (3) 0
25. x2 + y2 − 8x − 4y + c = 0 என்ற வட்டத்தின் விட்டத்தின் ஒரு முனை (11, 2) எனில் அதன் மறுமுனை
(1) (−5, 2)
(2) (−3, 2)
(3) (5, −2)
(4) (−2,5)
விடை: (2) (−3, 2)