வரையறை - கூம்பு வளைவுகள் (Conics) | 12th Maths : UNIT 5 : Two Dimensional Analytical Geometry II
கூம்பு வளைவுகள் (Conics)
வரையறை 5.2
ஒரு தளத்தில் ஒரு நகரும் புள்ளியிலிருந்து நிலைப்புள்ளிக்கு உள்ள தூரத்திற்கும் நகரும் புள்ளியிலிருந்து நிலைப்புள்ளி வழிச்செல்லாத ஒரு நிலைக்கோட்டிற்குமான தூரத்திற்கும் உள்ள விகிதம் ஒரு மாறிலியாக இருக்குமாறு நகரும் எனில் அந்தப் புள்ளியின் நியமப்பாதை ஒரு கூம்பு வளைவு (வளைவரை) எனப்படும்.
நிலைப்புள்ளி குவியம் எனப்படும். நிலைக்கோடு இயக்குவரை எனப்படும் மற்றும் மாறாத விகிதம் மையத் தொலைத்தகவு எனப்படும். இது 'e' என குறிக்கப்படும்.
(i) இந்த மாறிலி e = 1 எனில் கூம்பு வளைவரை பரவளையம் எனப்படும்.
(ii) இந்த மாறிலி e < 1 எனில் கூம்பு வளைவரை நீள்வட்டம் எனப்படும்.
(iii) இந்த மாறிலி e > 1 எனில் கூம்பு வளைவரை அதிபரவளையம் எனப்படும்.