தாவரவியல் - இலையின் வாழ்நாள் | 11th Botany : Chapter 3 : Vegetative Morphology of Angiosperm
இலையின் வாழ்நாள் (Leaf duration):
இலைகள் பெரும்பாலும் தாவரங்களில் தங்கியிருத்தல் மற்றும் அதன் பணிகளைப் பொறுத்து சில நாட்கள் முதல் பல வருடங்கள் வரை வாழும். இவை பெரும்பாலும் சூழ்நிலை காரணங்களின் தகவமைப்பினால் நிர்ணயிக்கப்படுகின்றன.
உடன் உதிர்பவை (Cauducous - Fagacious)
இவற்றில் இலைகள் உருவான உடனே உதிர்ந்துவிடும். எடுத்துக்காட்டு : ஒபன்ஷியா, சிஸ்சஸ் குவாட்டிராங்குலாரிஸ்.
முதிர் உதிர்பவை (Deciduous)
இவற்றில் இலைகள் வளரும் பருவத்தின் முடிவில் முதிர்ந்து உதிர்ந்துவிடுகின்றன. மரமோ, செடியோ குளிர்காலத்திலோ அல்லது கோடைகாலத்திலோ இலைகளற்றதாகக் காணப்படும். எடுத்துக்காட்டு: மாப்பில், புளுமேரியா, லானியா, எரித்ரினா.
பசுமை மாறாதவை (Evergreen):
இலைகள் சீரான இடைவெளிகளில் உதிர்வதால் இத்தாவரங்களில் இலைகள் எப்பொழுதும் நிலைத்திருக்கும். எனவே தாவரம் முழுவதுமாக இலையற்றுக் காணப்படுவதில்லை. எடுத்துக்காட்டு: மைமூசாப்ஸ், கேலோஃபில்லம்.
உதிரா இலைகள் (Marcescent):
ஃபேகேசி குடும்பத் தாவரங்களில் இலைகள் உலர்ந்து உதிராமல் தாவரத்திலேயே இருக்கும்.