Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணிதம் | தொடரின் விரிவுகள் (Series Expansions) : டெய்லரின் தொடர் மற்றும் மெக்லாரனின் தொடர்

வகை நுண்கணிதம் | கணிதவியல் - தொடரின் விரிவுகள் (Series Expansions) : டெய்லரின் தொடர் மற்றும் மெக்லாரனின் தொடர் | 12th Maths : UNIT 7 : Applications of Differential Calculus

   Posted On :  05.09.2022 04:13 am

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 7 : வகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள்

தொடரின் விரிவுகள் (Series Expansions) : டெய்லரின் தொடர் மற்றும் மெக்லாரனின் தொடர்

முடிவில்லா எண்ணிக்கையிலான முறை வகையிடத்தக்க சார்புகளின் டெய்லர் மற்றும் மெக்லாரின் விரிவுகள்.

தொடரின் விரிவுகள் (Series Expansions)

முடிவில்லா எண்ணிக்கையிலான முறை வகையிடத்தக்க சார்புகளின் டெய்லர் மற்றும் மெக்லாரின் விரிவுகள்.


தேற்றம் 7.5 

(a) டெய்லரின் தொடர்

f(x) என்ற சார்பானது x = a-யில் முடிவற்ற எண்ணிக்கையிலான முறை வகையிடத்தக்கது என்க. (x - a, x + a) எனும் இடைவெளியில் f(x) - கீழ்க்காணும் வடிவத்தில்விரிவாக்கலாம் :


(b) மெக்லாரனின் தொடர் 

a = 0 எனில், மேற்கண்ட விரிவின் வடிவம்



நிரூபணம் 

f (x) -ன் விரிவு, (x-a)-ன் அடுக்குகளில், கீழ்க்காணுமாறு விரிவாக்கலாம்:


x = a எனப்பிரதியிட A0 = f (a) ஆகும். (7)- x-ஐப் பொருத்து வகையிட,


x = a எனப் பிரதியிட A1 = f'(a) ஆகும். (8)- x-ஐப் பொருத்து வகையிட,


x = a எனப் பிரதியிட A2 = f”(a)/2! ஆகும். (9)-ஐப் பொருத்து வகையிட


(10)- x-ஐப் பொருத்து (k - 3) முறை வகையிட,


x = a எனப் பிரதியிட Ak = f(k)(a) / k!. ஆகவே மேற்கண்ட தேற்றம் நிறுவப்பட்டது.


ஒரு சார்பை x = a-க்கு அருகில் விரிவாக்கம் செய்வதற்கு, அதாவது (x-a) -ன் அடுக்குகளில் விரிவாக்கம் செய்வதற்கு கொடுக்கப்பட்ட சார்பை தேவையான முறை வகைப்படுத்தி x = a -யில் மதிப்பினைக் காண வேண்டும். இம்மதிப்புகள் (x - a)-ன் அடுக்குகளின் குணங்களைத் தரும்


எடுத்துக்காட்டு 7.30

log(1+x)-ன் மெக்லாரனின் விரிவை -1 < x ≤ 1-ல் நான்கு பூச்சியமற்ற உறுப்புகள் வரை காண்க

தீர்வு

f(x) = log(1+x) என்க. f (x) -ன் மெக்லாரனின் விரிவு f(x) = , இங்கு an = f(n) 0 / n!

f(x) -ன் வகைக்கெழுக்கள் மற்றும் x = 0 ல் இதன் மதிப்புகள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.


இம்மதிப்புகளைப் பிரதியிட்டுச் சுருக்க, நமக்குத் தேவையான விரிவினை கீழ்க்காணுமாறு பெறலாம் :

log(1+x) = xx2/2 + x3/3 - x4/4 +---;-1 < x ≤ 1.



எடுத்துக்காட்டு 7.31

tan x-ன் விரிவை –π/2 < x < π/2 -ல் x-ன் அடுக்குகளாக 5ஆவது அடுக்குவரை காண்க

தீர்வு

f(x) = tan x என்க. f (x) -ன் மெக்லாரனின் விரிவு


f (x) -ன் வகைக்கெழுக்கள் மற்றும் x = 0 -ல் இதன் மதிப்புகள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன இப்பொழுது,

f'(x) = d/dx (tan x) = sec2 (x)

f’’(x) = d/dx(sec2(x)) = 2sec x.sec x.tan x = 2sec2 x- tan x

f'’’ (x) = d/dx (2sec2 (x) . tan x) = 2sec2 (x). sec2 x + tan x. 4sec x. sec x.tan x

= 2sec4x + 4 sec2 x . tan2 x

f(iv) (x) = 8sec3 x. sec x. tan x + 4sec2 x .2 tan x sec2 .x + 8sec x. sec x. tan x. tan2 x

= 16 sec4 x tan x + 8 sec2 x. tan3 x 

f'(v) (x) = 16sec4 x. sec2 x +64sec3 x .sec x. tan x-tan x +8sec2 x. 3 tan2 x sec2 x

+16sec x. sec x. tan x. tan3 x

= 16sec6 x +88sec4 x. tan2 x+16sec2 x. tan4x


இம்மதிப்புகளைப் பிரதியிட்டுச் சுருக்க, நமக்குத் தேவையான விரிவை கீழ்க்காணுமாறு பெறலாம்:

 tan x = x + 1/3 x3 + 2/15 x5 + .. … ;       − π/2 < x < π/2


எடுத்துக்காட்டு 7.32

1/x --ன் டெய்லர் தொடரின் விரிவை x = 2 -ல் முதல் மூன்று பூச்சியமற்ற உறுப்புகள் வரை காண்க.

தீர்வு

f (x) = 1/x என்க. f (x) -ன் டெய்லரின் விரிவு


f(x) ன் வகைக்கெழுக்கள் மற்றும் x = 2 வில் இதன் மதிப்புகள் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன.


இம்மதிப்புகளைப் பிரதியிட்டுச் சுருக்க, நமக்குத் தேவையான விரிவை கீழ்க்காணுமாறு பெறலாம்:



Tags : Differential Calculus | Mathematics வகை நுண்கணிதம் | கணிதவியல்.
12th Maths : UNIT 7 : Applications of Differential Calculus : Series Expansions: Maclaurin’s and Taylor’s Series Differential Calculus | Mathematics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 7 : வகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் : தொடரின் விரிவுகள் (Series Expansions) : டெய்லரின் தொடர் மற்றும் மெக்லாரனின் தொடர் - வகை நுண்கணிதம் | கணிதவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 7 : வகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள்