Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | பாடச்சுருக்கம் - இயற்பியல் : வாயுக்களின் இயக்கவியற் கொள்கை
   Posted On :  14.11.2022 01:11 am

11வது இயற்பியல் : அலகு 9 : வாயுக்களின் இயக்கவியற் கொள்கை

பாடச்சுருக்கம் - இயற்பியல் : வாயுக்களின் இயக்கவியற் கொள்கை

வெப்பநிலை, அழுத்தம் போன்ற பேரளவான இயற்பியல் அளவுகளின் தோற்றம் பற்றிய நுட்பமான கருத்துக்களை வாயுக்களின் இயக்கவியற் கொள்கை விளக்குகிறது.

பாடச்சுருக்கம்:


• வெப்பநிலை, அழுத்தம் போன்ற பேரளவான இயற்பியல் அளவுகளின் தோற்றம் பற்றிய நுட்பமான கருத்துக்களை வாயுக்களின் இயக்கவியற் கொள்கை விளக்குகிறது.


• கொள்கலனில் அடைத்து வைக்கப்பட்டுள்ள வாயு மூலக்கூறுகள் கொள்கலனின் சுவரின் மீது உந்தத்தினைக் கொடுப்பதால் அச்சுவரின் மீது அழுத்தம் ஏற்படுகிறது.


• அழுத்தம் .வாயுவின் அழுத்தமானது, எண்அடர்த்தி, வாயு மூலக்கூறின் நிறை மற்றும் இருமடி வேகத்தின் சராசரி ஆகியவற்றுடன் நேர்விகிதத்தொடர்பைப் பெற்றுள்ளது.


• வாயு மூலக்கூறு ஒன்றின் சராசரி இடப்பெயர்வு இயக்க ஆற்றலைத் தீர்மானிப்பது வாயுவின் கெல்வின் வெப்பநிலையாகும். வாயு மூலக்கூறு ஒன்றின் சராசரி இயக்க ஆற்றல் அவ்வாயுவின் கெல்வின் வெப்பநிலைக்கு நேர்விகிதத்தில் இருக்கும். இது வாயு மூலக்கூறின் தன்மையைச் சார்ந்ததல்ல.


• வாயுவின் அழுத்தம், ஓரலகு பருமனுள்ள வாயுவின் அக ஆற்றலைப்போன்று மூன்றில் இரண்டு பங்காகும்.


• வாயு மூலக்கூறுகளின் சராசரி இருமடி மூல வேகம் =  = 



• வாயு மூலக்கூறுகளின் சராசரி வேகம்


• வாயு மூலக்கூறுகளின் சராசரி வேகம் vmp = 


• வாயு மூலக்கூறுகளின் மிகவும் சாத்தியமான வேகம்  


• மூன்று வேகங்களில் vrms பெருமமதிப்பையும் vmp சிறுமமதிப்பையும் பெற்றுள்ளன.  



• v யிலிருந்து v + dv என்ற வேக எல்லைக்குள் உள்ள வாயு மூலக்கூறுகளின் எண்ணிக்கையை மேக்ஸ்வெல் - போல்ட்ஸ்மென் வேகப்பகிர்வு அளிக்கிறது. 



• முப்பரிமாண வெளியிலுள்ள வெப்ப இயக்கவியல் அமைப்பு ஒன்றின் நிலை மற்றும் அமைப்பை விளக்குவதற்குத் தேவைப்படும் குறைந்தபட்ச சார்பற்ற ஆய அச்சுக்கூறுகளின் எண்ணிக்கையே சுதந்திர இயக்கக்கூறுகள் எனப்படும். வாயு ஒன்றின் மூலக்கூறுகளின் எண்ணிக்கை N எனில், அதன் மொத்த சுதந்திர இயக்கக்கூறுகளின் எண்ணிக்கை f = 3N ஆகும்.


• வாயு மூலக்கூறின் இயக்கத்திற்கு q கட்டுப்பாடுகள் இருப்பின், அதன் சுதந்திர இயக்கக்கூறுகளின் எண்ணிக்கை f = 3N-q ஆகும்.


• ஓரணு வாயு மூலக்கூறுக்கு f = 5


• சாதாரண வெப்பநிலையில் உள்ள ஈரணு மூலக்கூறுக்கு f = 5


• உயர் வெப்ப நிலையில் உள்ள ஈரணு மூலக்கூறுக்கு, f = 7


• நேர்க்கோட்டில் அமைந்த மூவணு மூலக்கூறுக்கு f = 7


• நேர்க்கோட்டில் அமையாத மூவணு மூலக்கூறுக்கு, = 6


• வாயு ஒன்றின் சராசரி இயக்க ஆற்றல் அதன் அனைத்து சுதந்திர இயக்கக்கூறுகளுக்கும் சரிசமமாக பகிர்ந்தளிக்கப்படும். இதற்கு ஆற்றல் சமபங்கீட்டுவிதி என்று பெயர். ஒவ்வொரு சுதந்திர இயக்கக்கூறும் 1/2KT ஆற்றலைப்பெறும்.


• அழுத்தம் மாறா மோலார் தன்வெப்ப ஏற்புத்திறனுக்கு (Cp) மற்றும் பருமன் மாறா மோலார் தன்வெப்பஏற்புத்திறனுக்கும் (Cv) உள்ள விகிதம் ஆகும்.

ஓரணு மூலக்கூறுக்கு: 1.67

சாதாரண வெப்பநிலையிலுள்ள ஈரணு மூலக்கூறுக்கு : 1.40

உயர் வெப்பநிலையிலுள்ள ஈரணு மூலக்கூறுக்கு: 1.28

நேர்க்கோட்டில் அமைந்த மூவணு மூலக்கூறுக்கு : 1.28.

நேர்க்கோட்டில் அமையாத மூவணு மூலக்கூறுக்கு : 1.33


• சராசரி மோதலிடைத்தூரம் λ = kT / ( √ 2πd2p)


• சராசரி மோதலிடைத்தூரம், வெப்பநிலைக்கு நேர்த்தகவிலும், மூலக்கூறின் அளவு மற்றும் அழுத்தத்திற்கு எதிர்விகிதத்திலும் இருக்கும்.


• வாயுக்களின் இயக்கவியற்கொள்கையின் அடிப்படையில் பிரௌனியன் இயக்கத்திற்கான ஆல்பிரட் ஐன்ஸ்டீ னின் விளக்கமானது அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளின் இருப்பிற்கான சாட்சியாக உள்ளது என்றால் அது மிகையாகாது.


11th Physics : UNIT 9 : Kinetic Theory of Gases : Summary - Physics: Kinetic Theory of Gases in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : அலகு 9 : வாயுக்களின் இயக்கவியற் கொள்கை : பாடச்சுருக்கம் - இயற்பியல் : வாயுக்களின் இயக்கவியற் கொள்கை - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : அலகு 9 : வாயுக்களின் இயக்கவியற் கொள்கை