Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | நெடுவினாக்கள் மற்றும் பதில்கள்

வாயுக்களின் இயக்கவியற் கொள்கை | இயற்பியல் - நெடுவினாக்கள் மற்றும் பதில்கள் | 11th Physics : UNIT 9 : Kinetic Theory of Gases

   Posted On :  07.11.2022 01:14 am

11வது இயற்பியல் : அலகு 9 : வாயுக்களின் இயக்கவியற் கொள்கை

நெடுவினாக்கள் மற்றும் பதில்கள்

இயற்பியல் : வாயுக்களின் இயக்கவியற் கொள்கை : முக்கியமான கேள்விகள், பதில்கள், தீர்வுகள்: புத்தக நெடு வினாக்கள் விடைகள்

வாயுக்களின் இயக்கவியற் கொள்கை (இயற்பியல்)

நெடுவினாக்கள்


1. வாயுக்களின் இயக்கவியற் கொள்கைக்கான எடுகோள்கள் யாவை?

• வாயு மூலக்கூறுகள் அனைத்தும் முழுவதும் ஒரே மாதிரியான, ‘முழு மீட்சியுறும் கோளங்களாகும்’. 

• வெவ்வேறு வாயுக்களின் 'மூலக்கூறுகள் வெவ்வேறானவை’. 

• வாயுவில் மூலக்கூறுகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம். ஒவ்வொரு மூலக்கூறின் அளவுடன் ஒப்பிடும்போது, மூலக்கூறுகளுக்கு இடையே உள்ள 'சராசரித் தொலைவு’ மிக அதிகமாகும். 

• வாயு மூலக்கூறுகள் அனைத்தும் தொடர்ச்சியான ‘ஒழுங்கற்ற இயக்கத்தில்’ உள்ளன. 

• வாயு மூலக்கூறுகள் ஒன்றின்மீது மற்றொன்றும் மற்றும் அடைந்துள்ள கொள்கலனின் சுவருடனும் 'மோதலை' ஏற்படுத்துகின்றன. 

• இம்மோதல்கள் முழு மீட்சியுறும் மோதல்கள். எனவே மோதலின் போது "மூலக்கூறுகளின் இயக்க ஆற்றலில் எவ்விதமான இழப்பும் ஏற்படுவதில்லை ". 

• இரு அடுத்தடுத்த மோதல்களுக்கு இடையே, ஒரு வாயு மூலக்கூறு 'சீரான திசைவேகத்தில்' இயங்குகிறது. 

• வாயு மூலக்கூறுகள் ஒன்றுடன் ஒன்று மோதும் நேரம் தவிர மற்ற நேரங்களில் ஒன்றின்மீது மற்றொன்று எவ்விதமான கவர்ச்சி விசையோ அல்லது விலக்கு விசையையோ செலுத்துவதில்லை. வாயு மூலக்கூறுகள் எவ்விதமான நிலையாற்றலையும் பெற்றிருக்கவில்லை. அவற்றின் 'ஆற்றல் முழுவதும் இயக்க ஆற்றல் வடிவில் மட்டுமே உள்ளது' 

• மூலக்கூறுகளுக்கிடையேயான மோதல் ‘ஒரு கண நேர நிகழ்வாகும்'. இரு அடுத்தடுத்த மோதல்களுக்கிடைப்பட்ட நேரத்துடன் ஒப்பிடும்போது மோதலுறும் நேரம் மிகக் குறைவானதாகும். 

• வாயு மூலக்கூறுகள் 'ஒழுங்கற்ற இயக்கத்தில் உள்ளபோதும் அவை நியூட்டனின் இயக்கவிதிகளுக்கு உட்படுகின்றன'.


2. வாயு மூலக்கூறுகள், அவற்றை அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கொள்கலனின் சுவரின் மீது ஏற்படுத்தும் அழுத்தத்திற்கான கோவையைப் பெறுக.

• M நிறையும், திசைவேகமும் கொண்ட வாயு மூலக்கூறு ஒன்று, ஒரு சிறிய நேர இடைவெளியில், வலது பக்கச் சுவரின் மீது மோதுகிறது. அதன் திசைவேகக்கூறுகள் (Vx, Vy, Vz) ஆகும். முழு மீட்சியுறும் மோதல் என்பதால், மூலக்கூறுகள் அதே வேகத்துடன் பின்னோக்கி வரும். அதன் X கூறு - எதிர்குறி மதிப்பைப் பெறும்.



i) மோதலுக்குப்பின்பு வாயு மூலக்கூறின் திசைவேகக் கூறுகள் = (-Vx, Vy, Vz

ii) மோதலுக்கு முன்பு வாயு மூலக்கூறின் உந்தத்தின் X - கூறு = mVx

iii) மோதலுக்கு பின்பு வாயு மூலக்கூறின் உந்தத்தின் X - கூறு = -mVx 

iv) X - திசையில் வாயு மூலக்கூறின் உந்த மாறுபாடு = இறுதி உந்தம் - ஆரம்ப உந்தம் 

= -mVx - mVx = -2mVx 

v) உந்தமாறா விதியின்படி, சுவரின் உந்தமாறுபாடு = +2mVx 

வலது பக்க சுவரிலிருந்து, Avxt தொலைவிலுள்ள வாயு மூலக்கூறுகள், வலது பக்கமாகச் சென்று t என்ற நேர இடைவெளியில் வலது பக்கச் சுவரின்மீது மோதும் வாயு மூலக் கூறுகளின் எண்ணிக்கையானது, பருமன் (Avxt)மற்றும் மூலக்கூறுகளின் எண்ணடர்த்தி (n) ஆகியவற்றின் பெருக்கல்பலனுக்கு சமமாகும். A - சுவரின் பரப்பு, n - ஓரலகு பருமனில் மூலக்கூறுகளின் எண்ணிக்கை (N/V)

• கனசதுரக் கொள்கலன் முழுமைக்கும் வாயு மூலக்கூறுகளின் எண்ணடர்த்தி மாறிலியாக உள்ளது. 

• சராசரியாக பாதி மூலக்கூறுகள் வலது பக்கச் சுவரினை நோக்கியும், மறுபாதி மூலக்கூறுகள் இடது பக்கச்சுவரினை நோக்கியும் செல்கின்றன.


t நேர இடைவெளியில் வலதுபக்கச்சுவரின் மீது மோதும் மூலக்கூறுகளின் எண்ணிக்கை, 

t = n / 2 Avxt            ………. (1)

t நேர இடைவெளியில் மூலக்கூறுகளால் சுவருக்கு மாற்றம் செய்யப்பட்ட மொத்த உந்தம், 

p = n/2 Avt × 2mvxAv2x mnΔt        …………(2)

நியூட்டனின் இரண்டாம் இயக்க விதியின்படி, ஒரு சிறுநேர இடைவெளியில் உந்தத்தில் ஏற்பட்ட மாற்றம் விசையைக் கொடுக்கும். எனவே மூலக்கூறுகளால் சுவரின் மீது செலுத்தப்பட்ட விசையின் எண்மதிப்பு, 

F = ∆p / Δt = nmAv2x         ……….. (3)


மூன்று திசைகளிலும் வாயு மூலக்கூறுகளின் சராசரி வேகம் சமமாகும். 


• வாயு மூலக்கூறுகளின் சராசரி இருமடி வேகம், 

 

• வாயு மூலக்கூறுகளால் ஏற்படும் அழுத்தம் சார்ந்திருக்கும் காரணிகள்: 

(i) எண்ணடர்த்தி 

(ii) வாயு மூலக்கூறின் நிறை மற்றும் 

(iii) சராசரி இருமடி வேகம்


3. இயக்கவியற் கொள்கையின் அடிப்படையில் வெப்பநிலையைப் பற்றி விரிவாக விளக்கவும். 

• வெப்பநிலையின் உட்கருத்தை உணர்த்தும் சமன்பாடு, 


நல்லியல்பு வாயு சமன்பாடு, PV = NkT 

சமன்பாடு (1) மற்றும் (2) லிருந்து ………………….(2)



இருபுறமும் 3/2 ஆல் பெருக்கும்போது,


• மூலக்கூறு ஒன்றின் சராசரி இயக்க ஆற்றல்    


• சமன்பாடு (4) மற்றும் (6) லிருந்து, “வாயு மூலக்கூறு ஒன்றின் வெப்பநிலையை தீர்மானிப்பது, அவ்வாயுவின் சராசரி இயக்க ஆற்றல்” ஆகும். 

முக்கியத்துவம் : (வாயுவின் இயக்கவியற் கொள்கையிலிருந்து) 

1. வாயு மூலக்கூறு ஒன்றின் சராசரி இயக்க ஆற்றல், அவ்வாயுவின் கெல்வின் வெப்பநிலைக்கு நேர்த்தகவில் இருக்கும். 

• ஒவ்வொரு மூலக்கூறின் சராசரி இயக்க ஆற்றலையும், வாயு மூலக்கூறுகளின் மொத்த எண்ணிக்கையால் பெருக்கும்போது, வாயுவின் அகஆற்றல் கிடைக்கும். 

• நல்லியல்புவாயுவின் அக ஆற்றல் 


சமன்பாடு (4) லிருந்து,          ………… 6

• நல்லியல்பு வாயுவின் அக ஆற்றல் அதன்கெல்வின் வெப்பநிலையை மட்டுமே சார்ந்தது. அதன் அழுத்தம் மற்றும் பருமனை சார்ந்ததல்ல.


4. ஓரணு மூலக்கூறு, ஈரணு மூலக்கூறு மற்றும் மூவணு மூலக்கூறுகளின் சுதந்திர இயக்கக் கூறுகளைப் பற்றி விரிவாக விளக்கவும். 

1. ஓரணு மூலக்கூறு: : 

• ஓரணு மூலக்கூறு ஒன்று அதன் இயல்பின் காரணமாக மூன்று இடப்பெயர்வு சுதந்திர இயக்கக் கூறுகளைப் பெற்றிருக்கும். 

f = 3 

• எடுத்துக்காட்டு : ஹீலியம், நியான் மற்றும் ஆர்கான்.


II. ஈரணு மூலக்கூறு: : 

1. சாதாரண வெப்பநிலையில்: 

ஈரணு மூலக்கூறானது, கவர்ச்சி விசையினால் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்ட இரண்டு அணுக்களைப் பெற்றிருக்கும். 

• நிறையற்ற மீட்சியுறும் சுருள் வில்லின் இரு முனைகளில் பொருத்தப்பட்டுள்ள புள்ளி நிறைகளைப் போன்ற அமைப்புடையது. 

• நிறைமையம் ஈரணு மூலக்கூறின் மையத்தில் அமையும். இவை இயங்க மூன்று இடப்பெயர்வு சுதந்திர இயக்கக் கூறுகள் தேவை. 

• ஈரணு மூலக்கூறானது, ஒன்றுக்கொன்று செங்குத்தாக உள்ள மூன்று ஆய அச்சுக் கூறுகளைப் பொருத்தும் சுழலும். 

• தன் அச்சை (y-அச்சை) பொருத்து நிலைமத் திருப்புத்திறன் புறக்கணிக்கத் தக்கது. இவ்வமைப்பு இரண்டு சுழற்சி சுதந்திர இயக்கக் கூறுகளை மட்டுமே பெற்றுள்ளது. 

ஈரணு மூலக்கூறு அமைப்பானது மொத்தம் ஐந்து சுதந்திர இயக்கக்கூறுகளைப் பெற்றுள்ளது. f = 5 

2. உயர் வெப்பநிலையில்: 

• ஈரணு மூலக்கூறானது, 5000K வெப்பநிலையில் கூடுதலாக இரண்டு சுதந்திர இயக்கக் கூறுகளை அதிர்வியக்கத்தினால் பெற்றுள்ளது. 

உயர் வெப்பநிலையில் ஈரணு மூலக்கூறானது மொத்தம் ஏழு சுதந்திர இயக்கக்கூறுகளைப் பெற்றுள்ளது. f = 7 

• எடுத்துக்காட்டு: ஹைட்ரஜன், நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன்

III. மூவணு மூலக்கூறுகள் : 

1. நேர்க்கோட்டில் அமைந்து மூவணு மூலக்கூறு : 

• மைய அணுவின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு அணுக்கள் அமைந்துள்ளன. 

• நேர்க்கோட்டு மூவணு மூலக்கூறு மூன்று இடப்பெயர்வு சுதந்திர இயக்கக்கூறுகளையும், இரண்டு சுழற்சி இயக்கக் கூறுகளையும் பெற்றுள்ளது


• மையத்தில் அமைந்துள்ள கூடுதல் அணுவைத் தவிர்த்து, அனைத்து வகையிலும் இது ஈரணு மூலக்கூறை ஒத்துள்ளது. 

• சாதாரண வெப்பநிலையில் நேர்க்கோட்டு மூவணு மூலக்கூறு ஐந்து சுதந்திர இயக்கக்கூறுகளையும், உயர் வெப்ப நிலையில், கூடுதலாக இரண்டு அதிர்வு சுதந்திர இயக்கக்கூறுகளையும் பெற்று, மொத்தம் ஏழு சுதந்திர இயக்கக் கூறுகளைப் பெற்றுள்ளது. f = 7  

• எடுத்துக்காட்டு: கார்பன்-டை- ஆக்ஸைடு.

2. நேர்க்கோட்டில் அமையாத மூவணு மூலக்கூறு :

இவ்வகை மூவணு மூலக்கூறுகளில், மூன்று அணுக்களும் முக்கோண மொன்றின் மூன்று உச்சியில் அமைந்திருப்பது போன்று காணப்படும்.


• மூன்று நேர்கோட்டு சுதந்திர இயக்கக்கூறுகளையும், ஒன்றுக்கொன்று செங்குத்தாக அமைந்த மூன்று செங்குத்து அச்சுகளைப் பொருத்து சுழலும் சுழற்சி சுதந்திர இயக்கக் கூறுகளையும் பெற்றுள்ளது. 

இவ்வமைப்பின் மொத்த சுதந்திர இயக்கக்கூறுகளின் எண்ணிக்கை ஆறு ஆகும். f = 6

எடுத்துக்காட்டு: நீர், சல்பர்-டை-ஆக்ஸைடு. 


5. ஓரணு மூலக்கூறு ஈரணு மூலக்கூறு மற்றும் மூவணு மூலக்கூறுகளின் மோலார் தன்வெப்ப ஏற்புத் திறன்களின் விகிதத்திற்கான கோடையை வருவி. 

• ஒரு பேபால் நல்லியல்பு வாயு ஒன்றின் மோலார் தன்வெப்ப ஏற்புத்திறன்களுக்கிடையே உள்ள தொடர்பை, மேயர் தொடர்பு CP - CV = R கொடுக்கிறது.

• ஆற்றல் சமபங்கீட்டு விதியைப் பயன்படுத்தி CP - CV மதிப்பையும் மேலும் அவற்றிற்கிடையேயான விகிதம் = γ = CP - CV யையும் கணக்கிடலாம்.

(γ -வெப்பப்பரிமாற்றமில்லா அடுக்குக்குறியீடு 

1. ஓரணு மூலக்கூறு: 

• மூலக்கூறு ஒன்றின் சராசரி இயக்க ஆற்றல்

  = 3/2  kT

• ஒருமோல் வாயுவின் மொத்த ஆற்றல் =

= 3/2 kT × N= 3/2 RT

• ஒருமோல் வாயுவின் பருமன் மாறா மோலார் தன்வெப்ப ஏற்புத்திறன் =

மோலார் தன்வெப்ப ஏற்புத்திறன்களின் தகவு γ = CP / CV


2. ஈரணு மூலக்கூறு: 

• தாழ்வெப்பநிலையில் உள்ள ஈரணு மூலக்கூறு ஒன்றின் சராசரி இயக்க ஆற்றல் = 5/2  kT

• ஒரு மோல் வாயுவின் மொத்த ஆற்றல்   

= 5/2 kT × N= 5/2 RT

• ஒரு மோல் வாயுவின் பருமன் மாறா மோலார் தன்வெப்ப ஏற்புத்திறன்  

CdU dT = [5/2RT ] ; C= 5/2 R


உயர் வெப்பநிலையிலுள்ள ஈரணு மூலக்கூறு ஒன்றின் அகஆற்றல் = 7/2  RT


• CV மற்றும் CP இன் மதிப்பானது ஓரணு மூலக்கூறுகளை விட, ஈரணு மூலக்கூறுகளுக்கு அதிகமாக உள்ளது. 

• ஓரணு வாயு மூலக்கூறுகளின் வெப்பநிலையை 1°C உயர்த்துவதற்குத் தேவைப்படும் வெப்பத்தை விட ஈரணு வாயு மூலக்கூறுகளுக்கு அதிக வெப்பம் தேவைப்படும்.


III மூவணு மூலக்கூறுகள்: 

1. நேர்க்கோட்டிலமைந்த மூவணு மூலக்கூறு :

• ஒரு மோல் மூலக்கூறின் அக ஆற்றல் 


2. நேர்க்கோட்டில் அமையாத மூவணு மூலக்கூறு :

• ஒரு மோல் மூவணு மூலக்கூறின் அக ஆற்றல் = 


• வாயுக்களின் இயக்கவியல் கொள்கையின் அடிப்படையில், பருமன் மற்றும் அழுத்தம் மாறா தன்வெப்ப ஏற்புத்திறன்கள் வெப்பநிலையில் சார்ந்ததல்ல. 


6. மேக்ஸ்வெல் - போல்ட்ஸ்மென் பகிர்வுச் சார்பினை விரிவாக விளக்கவும். 

• அறை ஒன்றில் உள்ள வாயு மூலக்கூறுகள் ஒழுங்கற்ற முறையில் எல்லா திசைகளிலும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. 

• ஒவ்வொரு மூலக்கூறும் மற்ற மூலக்கூறுகளுடன் மோதலுற்று அவற்றின் வேகங்களைப் பரிமாறிக் கொள்கின்றன. 

• v முதல் v + dv என்ற வேக எல்லைக்குள் உள்ள மூலக் கூறுகளின் எண்ணிக்கையை கீழே கொடுக்கப்பட்டுள்ள மற்ற மேக்ஸ்வெல் - போல்ட்ஸ்மென் வேகப்பகிர்வுச் சார்பினைப் பயன்படுத்தி கணக்கிடலாம்.


• கொடுக்கப்பட்ட கெல்வின் வெப்பநிலையில் குறைந்த வேகத்தைப் பெற்றுள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கை பரவளைய வடிவில் (v2) அதிகரித்து, மிகவும் சாத்தியமான வேகத்தை அடைந்தவுடன் அடுக்கு குறியீட்டு    மதிப்பில் குறையும்.


• சராசரி இருமடி மூல வேகம்  சராசரி வேகம் சராசரி வேகம் மற்றும் மிகவும் சாத்தியமான வேகம் Vrmp ஆகியவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 

• கொடுக்கப்பட்ட மூன்று வேகங்களில் Vrms பெரும மதிப்பைப் பெற்றுள்ளது. உதாரணமாக 50ms-1 முதல் 60ms-1 வரை வேக மதிப்புகளைப் பெற்றுள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கையைக் காண்பதற்கு,


எனத் தொகைப்படுத்த வேண்டும். 

• பொதுவாக vயிலிருந்து v + dv வரை வேக மதிப்புகளைப் பெற்றுள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கையை பின்வருமாறு வரையறுக்கலாம்.


• வாயு மூலக்கூறுகளின் செயல்பாட்டை வரைபடத்தின் அடிப்படையில் அனுமானிக்க இயலும்... 

• 1) வரைபடத்திற்கு கீழே உள்ள பரப்பு, அமைப்பிலுள்ள வாயு மூலக்கூறுகளின் மொத்த எண்ணிக்கையைக் கொடுக்கும். 

• 2) படத்தில் இருவேறு வெப்பநிலைகளில் உள்ள வாயு மூலக்கூறுகளின் வேகப்பகிர்வு, வரைபட வடிவில் காட்டப்பட்டுள்ளது. கெல்வின் வெப்பநிலை அதிகரிக்கும் போது வளைகோட்டின் உச்சி வலது பக்கத்தை நோக்கி நகர்கின்றது. ஒவ்வொரு மூலக்கூறின் சராசரி வேகமும் அதிகரிக்கிறது. வரைபடத்தின் பரப்பில் எவ்வித மாற்றமும் இல்லை. வரைபடத்தின் பரப்பு வாயு மூலக்கூறுகளின் மொத்த எண்ணிக்கைக்குச் சமமாகும். 


7. வாயுக்களின் சராசரி மோதலிடைத் தூரத்திற்கான கோவையை வருவி. 

• வாயுக்களின் இயக்கவியற் கொள்கையின் எடுக்கோள்களின் படி, வாயு மூலக்கூறுகள் அனைத்தும் ஒழுங்கற்ற இயக்கத்தில், ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன. 

• இரண்டு அடுத்தடுத்த மோதல்களுக்கு இடையே இந்த வாயுமூலக்கூறுகள் சீரான திசைவேகத்துடன் நேர்க்கோட்டுப் பாதையில் செல்கின்றன. இது "சராசரி மோதலிடைத்தூரம்" எனப்படும். 

• மூலக்கூறுகளில், d- விட்டம், n- ஓரலகு பருமன், V- சராசரி வேகம்,

• படத்தில், ஒரே ஒரு மூலக்கூறு மட்டும் இயக்கத்தில் உள்ளது. மற்ற அனைத்து மூலக்கூறுகளும் ஓய்வு நிலையில் உள்ளது. 

• v - சராசரி வேகத்தில், t - நேரத்தில் மூலக்கூறு கடக்கும் தொலைவு - vt ஆகும். t - நேரத்தில் பருமன் = πd2vt 

• உருளையினுள் அமைந்திருக்கும் அனைத்து மூலக்கூறுகளின் மீதும் இம்மூலக்கூறு மோதலை ஏற்படுத்தும். மோதல்களின் எண்ணிக்கை கற்பனை உருளையின் பருமனில் அடங்கியுள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கைக்குச் சமமாகும். 

மோதல்களின் எண்ணிக்கையில் உருளையின் பருமன் = πd2vtn 

• சராசரி மோதலிடைத்தூரம், 


λ = vt / nπd2vt = 1 / nπd2          …….. (1)

சராசரி மோதலிடைத்தூரத்திற்கான சரியான கணிதச் சமன்பாடு,   

 …….. (2)

• இதிலிருந்து சராசரி மோதலிடைத் தூரமானது, எண் அடர்த்திக்கு எதிர்விகிதத்தில் இருக்கும் எண் அடர்த்தி அதிகரிக்கும் போது மூலக்கூறுகளின் மோதலும் அதிகரிக்கும்.

• மூலக்கூறின் நிறை 'm' ஐப் பொருத்து சமன்பாடு (2) ஐ மாற்றவும்.   


சமன்பாடு (2)-ல் n-ன் மதிப்பை பிரதியிட

…….. (3)

 PV = NkT என்பது நாமறிந்ததே ,


சமன்பாடு (2) இல் n-ன் மதிப்பை பிரதியிடுக

 …….. (4)


8. பிரௌனியன் இயக்கத்தினை விளக்குக. 

• திரவப் பரப்பிலுள்ள மகரந்தத் துகள்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஒழுங்கற்று இயங்குகின்றன. 

• பிரௌனியன் கண்டறிந்த, திரவப்பரப்பிலுள்ள இந்த மகரந்தத் துகள்களின் ஒழுங்கற்ற (குறுக்கு - நெடுக்கான) இயக்கம் “பிரௌனியன் இயக்கம்” எனப்படும். 

• நீர்ப்பரப்பிலுள்ள தூசுத்துகள்களின் ஒழுங்கற்ற இயக்கத்தைக் காணலாம். 

• மகரந்தத் துகள்களின் ஒழுங்கற்ற இயக்கத்தை ஆய்வு செய்து வீனர் மற்றும் ஃகோய் என்ற இரு அறிஞர்கள் பிரௌனியன் இயக்கத்திற்கான விளக்கத்தைக் கொடுத்தனர். 

• இவ்விளக்கத்தின்படி, திரவப்பரப்பிலுள்ள துகள்களின் மீது, அதனைச் சூழ்ந்துள்ள திரவ மூலக்கூறுகள் தொடர்ந்து மோதுவதால் அத்துகள்கள் ஒழுங்கற்ற இயக்கத்தை மேற்கொள்கின்றன.

• ஐன்ஸ்டீன் வாயுக்களின் இயக்கவியற்கொள்கையின் அடிப்படையில் பிரௌனியன் இயக்கத்திற்கான கொள்கையிலிருந்து மூலக்கூறு ஒன்றின் சராசரி அளவினைக் கணக்கிட்டார். 

• இயக்கவியற் கொள்கையின்படி, திரவம் அல்லது வாயுவில் மிதந்து கொண்டிருக்கும் எந்த ஒரு துகளும் அனைத்து திசைகளிலிருந்தும் தொடர்ந்து தாக்கப்படும். இதில் சராசரி மோதலிடைத்தூரம் கிட்டத்தட்ட புறக்கணிக்கப்படும். 

• துகள்கள் ஒழுங்கற்ற மற்றும் குறுக்கு நெடுக்கான இயக்கத்தை மேற்கொள்ளும்.


பிரௌனியன் இயக்கத்தை பாதிக்கும் காரணிகள்:

1. வெப்பநிலை உயரும்போது பிரௌனியன் இயக்கமும் அதிகரிக்கும். 

2. திரவம் அல்லது வாயுத் துகள்களின் பருமன் அதிகரிக்கும் போதும், உயர் பாகியல் தன்மை மற்றும் அடர்த்தி காரணமாகவும், பிரௌனியன் இயக்கம் குறையும்.


Tags : Kinetic Theory of Gases | Physics வாயுக்களின் இயக்கவியற் கொள்கை | இயற்பியல்.
11th Physics : UNIT 9 : Kinetic Theory of Gases : Long Questions and Answer Kinetic Theory of Gases | Physics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : அலகு 9 : வாயுக்களின் இயக்கவியற் கொள்கை : நெடுவினாக்கள் மற்றும் பதில்கள் - வாயுக்களின் இயக்கவியற் கொள்கை | இயற்பியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : அலகு 9 : வாயுக்களின் இயக்கவியற் கொள்கை