தயாரிப்பு, வேதிப் பண்புகள் - அமில நீரிலி | 12th Chemistry : UNIT 12 : Carbonyl Compounds and Carboxylic Acids

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 12 : கார்பனைல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள்

அமில நீரிலி

தயாரிப்பு முறைகள், வேதிப் பண்புகள் அமில நீரிலி

அமில நீரிலி


தயாரிப்பு முறைகள் 

1. கார்பாக்சிலிக் அமிலங்களை P2O5 உடன் சேர்த்து வெப்பப்படுத்தி தயாரித்தல்

கார்பாக்சிலிக் அமிலங்களை P2O5 உடன் சேர்த்து வெப்பப்படுத்தும்போது அவை நீர்நீக்கமடைந்து அமில நீரிலிகளை உருவாக்குகின்றன என்பதை நாம் முன்னரே கற்றறிந்தோம்

2. கார்பாக்சிலிக் அமில உப்புக்களுடன் அமில ஹேலைடுகளை வினைப்படுத்துதல் மூலம் தயாரித்தல்.

அமில குளோரைடுகளை, கார்பாக்சிலிக் அமிலங்களின் சோடியம் உப்புகளுடன் சேர்த்து வெப்பப்படுத்தும்போது அவை தத்தமது நீரிலிகளை தருகின்றன.



வேதிப் பண்புகள் 

1. நீராற்பகுத்தல்

அமில நீரிலிகள் மெதுவாக நீராற்பகுப்படைந்து கார்பாக்சிலிக் அமிலங்களை தருகின்றன.


2. ஆல்கஹாலுடன் வினை

அமில நீரிலிகள், ஆல்கஹால்களுடன் வினைப்பட்டு எஸ்டர்களை உருவாக்குகின்றன.


3. அம்மோனியா உடன் வினை

அமில நீரிலிகள், அம்மோனியா உடன் வினைப்பட்டு அமைடுகளை உருவாக்குகின்றன.


4. PCl5 உடன் வினை

அமில நீரிலிகள், PCI5 உடன் வினைப்பட்டு அசைல் குளோரைடுகளை உருவாக்குகின்றன.



Tags : Preparation, Chemical properties தயாரிப்பு, வேதிப் பண்புகள்.
12th Chemistry : UNIT 12 : Carbonyl Compounds and Carboxylic Acids : Acid anhydride Preparation, Chemical properties in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 12 : கார்பனைல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள் : அமில நீரிலி - தயாரிப்பு, வேதிப் பண்புகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 12 : கார்பனைல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள்