ஆல்டிஹைடுகளுக்கான சோதனை
i) டாலன்ஸ் வினைக்காரணி சோதனை
அசிட்டோலினோன் m- நைட்ரோ அசிட்டோலீனோன் டாலன்ஸ் வினைக்காரணி என்பது அம்மோனியாவில் கரைந்த வெள்ளி நைட்ரேட் கரைசலாகும். ஒரு ஆல்டிஹைடை டாலன்ஸ் வினைக்காரணியுடன் சேர்த்து வெப்பபடுத்தும்போது உலோக வெள்ளி வீழ்படிவாவதால் பளபளப்பான வெள்ளி ஆடி உருவாகிறது. இந்த வினையானது ஆல்டிஹைடுகளுக்கான வெள்ளி ஆடி சோதனை என்றழைக்கப்படுகிறது.
CH3 CHO + 2 [Ag(NH3)2]+ + 3OH- → CH3COO- + 4NH3 + 2Ag ( வெள்ளி)+ 2H2O
ii) ஃபெல்லிங் கரைசல் சோதனை
சமகனஅளவு கொண்ட ஃபெல்லிங் கரைசல் - A (நீரிய காப்பர் சல்பேட் கரைசல்) ஃபெல்லிங் கரைசல் - B (காரங்கலந்த சோடியம் பொட்டாசியம் டார்டோரேட் கரைசல்- ரோசெல்லே உப்பு) ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஃபெல்லிங் கரைசல் பெறப்படுகிறது. ஆல்டிஹைடை ஃபெல்லிங் கரைசலுடன் சேர்த்து வெப்பப்படுத்தும்போது அடர் நீல நிற கரைசலானது செந்நிற வீழ்படிவாக (குப்ரஸ் ஆக்சைடு) மாறுகிறது.
CH3 CHO + 2Cu2+ (நீலம்) + 5OH- → CH3COO- + Cu2O↓ (சிவப்பு)+ 3H2O
iii) பெனிடிக்ட் கரைசல் சோதனை
பெனிடிக்ட் கரைசல் என்பது CuSO4 , சோடியம் சிட்ரேட் மற்றும் NaOH ஆகியவை கலந்த கலவையாகும். இதிலுள்ள Cu2+ அயனிகள் ஆல்டிஹைடுகளால் ஒடுக்கப்பட்டு செந்நிற குபரஸ் ஆக்சைடு வீழ்படிவாகிறது.
CH3 CHO + 2Cu2+ (நீலம்) + 5OH- → CH3COO- + Cu2O↓ (சிவப்பு)+ 3H2O
iv) ஷிஃப் காரணி சோதனை:
நீர்த்த ஆல்டிஹைடு கரைசல்களை ஷிஃப் வினைக்காரணியுடன் (ரோசனிலின் ஹைட்ரோ குளோரைடு நீரில் கரைக்கப்பட்டு, SO2 செலுத்தி அதன் சிவப்பு நிறம் நிறமிழக்கச் செய்யப்படுகிறது) சேர்க்கும்போது அதன் சிவப்பு நிறம் மீள உருவாகிறது. இந்த சோதனையானது ஆல்டிஹைடுகளுக்கான ஷிஃப் சோதனை என அறியப்படுகிறது. கீட்டோன்கள் இந்த சோதனையை தருவதில்லை. ஆனால், அசிட்டோன் மெதுவாக இந்த சோதனைக்கு உட்படுகிறது.