வேதியியல் - கார்பாக்சிலிக் அமிலங்கள் | 12th Chemistry : UNIT 12 : Carbonyl Compounds and Carboxylic Acids
கார்பாக்சிலிக் அமிலங்கள்
அறிமுகம்
-COOH எனும் கார்பாக்சில் வினைச்செயல் தொகுதியை கொண்டுள்ள கார்பன் சேர்மங்கள் கார்பாக்சிலிக் அமிலங்கள் என்றழைக்கப்படுகின்றன. கார்பாக்சில் தொகுதி என்பது கார்பனைல் தொகுதி மற்றும் ஹைட்ராக்ஸி தொகுதி (-OH) ஆகியவற்றின் கூடுகை ஆகும்.
எனினும், கார்பாக்சில் தொகுதியானது தனக்கே உரித்தான சிறப்புப் பண்புகளைப் பெற்றுள்ளது. கார்பாக்சிலிக் அமிலங்களானவை, கார்பாக்சில் கார்பன் அணுவுடன் இணைந்துள்ள ஆல்கைல் அல்லது அரைல் தொகுதிகளைப் பொருத்து அலிஃபாடிக் (R - COOH) சேர்மமாகவோ அல்லது அரோமேடிக் (Ar - COOH) சேர்மமாகவோ இருக்கலாம். அலிஃபாடிக் கார்பாக்சிலிக் அமிலங்களில் சில உயர் கார்பன் எண்ணிக்கை (C12 முதல் C18 வரை) மூலக்கூறுகள் இயற்கை கொழுப்புகளில் கிளிசரால் எஸ்டர்களாக காணப்படுகின்றன., இவை கொழுப்பு அமிலங்கள் என அறியப்படுகின்றன.