கார்பனைல் சேர்மங்கள் மற்றும் கார்பாசிலிக் அமிலங்கள் | வேதியியல் - சரியான விடையைத் தேர்வு செய்க | 12th Chemistry : UNIT 12 : Carbonyl Compounds and Carboxylic Acids
வேதியியல் : கார்பனைல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள்
I. சரியான விடையைத் தேர்வு செய்க
1. கீழ்காண் வினையில் விளைப்பொருள் 'A' ன் சரியான அமைப்பு (NEET)
விடை : ஆ)
2. அசிட்டோனிலிருந்து சயனோஹைட்ரின் உருவாகும் வினை பின்வருவனவற்றுள் எதற்கு சான்றாக உள்ளது?
அ) கருகவர் பதிலீட்டு வினை
ஆ) எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினை
இ) எலக்ட்ரான் கவர் சேர்ப்பு வினை
ஈ) கருகவர் சேர்ப்பு வினை
விடை : ஈ) கருகவர் சேர்ப்பு வினை
3. பின்வரும் ஒரு வினைக்காரணியுடன் அசிட்டோன் கருகவர் சேர்ப்பு வினையில் ஈடுபட்டு அதன் பின்னர் நீர்நீக்கமடைகிறது. அந்த வினைக்காரணி
அ) கிரிக்னார்டு வினைக்காரணி
ஆ) Sn/HCI
இ) அமிலக்கரைசலிலுள்ள ஹைட்ரசீன்
ஈ) ஹைட்ரோசயனிக் அமிலம்
விடை : இ) அமிலக்கரைசலிலுள்ள ஹைட்ரசீன்
4. பின்வரும் வினையில், X' ஆனது ........ சோதனையை தராது.
அ) டாலன்ஸ் சோதனை
ஆ) விக்டர் மேயர் சோதனை
இ) அயோடோ ஃபார்ம் சோதனை
ஈ) ஃபெலிங் கரைசல் சோதனை
விடை : ஆ) விக்டர் மேயர் சோதனை
(X) ஆனது டாலன்ஸ் மற்றும் ஃபெல்லிங் கரைசல்களை ஒடுக்குகிறது மேலும் அயடோஃபார்ம் வினைக்கு உட்படுகிறது.
5. Y'Y' என்பது
அ) ஃபார்மால்டிஹைடு
ஆ) டைஅசிட்டோன் அம்மோனியா
இ) ஹெக்ஸாமெத்திலீன் டெட்ராஅமீன்
ஈ) ஆக்சைம்
விடை : இ) ஹெக்ஸாமெத்திலீன் டெட்ராஅமீன்
X - HCHO
Y - (CH2)6 N4
6. பின்வரும் வினைவரிசையில் விளைபொருள் Z ஐ கண்டறிக. எக்கனாயிக் அமிலம்
அ) (CH3)2C(OH)C6H5
ஆ) CH3 CH(OH)C6H5
இ) CH3CH(OH)CH2-CH3
ஈ)
விடை : அ) (CH3)2C(OH)C6H5
தீர்வு :
7. கூற்று : 2,2-டைமெத்தில் புரப்பனாயிக் அமிலம் HVZ வினையை தருவதில்லை: காரணம்:2,2- டைமெத்தில் புரப்பனாயிக் அமிலம் α- ஹைட்ரஜன் அணுவை கொண்டிருக்கவில்லை
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் , காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.
விடை : அ) கூற்று, காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
தீர்வு
8. பின்வருவனவற்றுள் கொடுக்கப்பட்ட சேர்மங்களின் அமிலத்தன்மையின் அடிப்படையிலான சரியான வரிசை
அ) FCH2COOH > CH3COOH > BrCH2COOH > CICH2COOH
ஆ) FCH2COOH > CICH2COOH > BrCH2COOH > CH3COOH
இ) CH3COOH > CICH2COOH > FCH2COOH > Br-CH2COOH
ஈ) CICH2COOH > CH3 COOH > BrCH2COOH > ICH2COOH
விடை : அ) FCH2COOH > CH3COOH > BrCH2COOH > CICH2COOH
9. பென்சாயிக் அமிலம் என்பது
அ) அனிலீனியம் குளோரைடு
ஆ) O -நைட்ரோ அனிலீன்
இ) பென்சீன் டைய சோனியம் குளோரைடு
ஈ) m - நைட்ரோ பென்சாயிக் அமிலம்
விடை: இ) பென்சீன் டையசோனியம் குளோரைடு
தீர்வு :
10. எத்தனாயிக் அமிலம் புரோமோ எத்தனாயிக் அமிலம் இந்த வினையானது ................என்றழைக்கப்படுகிறது.
அ) பிங்கல்ஸ்டீன் வினை
ஆ) ஹேலோஃபார்ம் வினை
இ) ஹெல்-வோல்ஹார்ட்-ஜெலின்ஸ்கி வினை
ஈ) இவற்றில் ஏதுமில்லை
விடை இ) ஹெல்-வோல்ஹார்ட்-ஜெலின்ஸ்கி வினை
11. CH3Br விளைப்பொருள் (C) என்பது
அ) அசிட்டைல் குளோரைடு
ஆ) குளோரோ அசிட்டிக் அமிலம்
இ) α - குளோரோசயனோ எத்தனாயிக் அமிலம்
ஈ) இவற்றில் ஏதுமில்லை
விடை அ) அசிட்டைல் குளோரைடு
தீர்வு :
12. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று டாலன்ஸ் வினைக்காரணியை ஒடுக்குகிறது?
அ) ஃபார்மிக் அமிலம்
ஆ) அசிட்டிக் அமிலம்
இ) பென்சோபீனோன்
ஈ) இவற்றில் ஏதுமில்லை
விடை அ) ஃபார்மிக் அமிலம்
13. B என்பது
விடை ஆ)
தீர்வு :
14. இன் IUPAC பெயர் PTA-2
அ) பியுட் - 3- ஈனாயிக் அமிலம்
ஆ) பியுட் - 1 - ஈன் - 4 - ஆயிக் அமிலம்
இ) பியுட் - 2 - ஈன் - 1 - ஆயிக் அமிலம்
ஈ) பியுட் - 3 - ஈன் - 1 - ஆயிக் அமிலம்
விடை : அ) பியுட் - 3- ஈனாயிக் அமிலம்
தீர்வு:
15. இந்த வினையில் உருவாகும் விளைபொருளை கண்டறிக.
விடை : ஈ)
தீர்வு :
தொகுதி CH2 - தொகுதியாக ஒடுக்கப்படும் (உல்ப் கிஷ்னர் ஒடுக்கம்)
16. HCN உடனான வினையில் பின்வரும் எந்த சேர்மத்தில் சீர்மையற்ற (கைரல்) கார்பன் உருவாவதில்லை.
விடை : a)
தீர்வு :
17. கூற்று : p - N, N - டைமெத்தில் அமினோபென்சால்டிஹைடு, பென்சாயின் குறுக்க வினைக்கு உட்படுகிறது.
காரணம் : ஆல்டிஹைடு (-CHO) தொகுதியானது மெட்டா ஆற்றுப்படுத்தும் தொகுதியாகும்.
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
விடை : ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
தீர்வு:
18. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று விகிதக்கூறு சிதைவு வினைக்கு எடுத்துக்காட்டாகும்
அ) ஆல்டால் குறுக்கம்
ஆ) கான்னிசரோ வினை
இ) பென்சாயின் குறுக்கம்
ஈ) இவற்றில் ஏதுமில்லை
விடை : ஆ) கான்னிசரோ வினை
19. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று 50% சோடியம் ஹைட்ராக்சைடு கரைசலுடன் வினைப்பட்டு ஆல்-கஹாலையும், அமிலத்தையும் தருகிறது?
அ) பீனைல்மெத்தனல்
ஆ) மெத்தனல்
இ) எத்தனால்
ஈ) மெத்தனால்
விடை : அ) பீனைல்மெத்தனல்
தீர்வு :
20. அசிட்டால்டிஹைடு மற்றும் பென்சால்டிஹைடை வேறுபடுத்தியறிய பயன்படுத்தப் படும்வினைக்காரணி
அ) டாலன்ஸ் வினைக்காரணி
ஆ) ஃபெலிங் கரைசல்
இ) 2, 4 - டைநைட்ரோபீனைல் ஹைட்ரசீன்
ஈ) செமிகார்பசைடு
விடை : ஆ) ஃபெலிங் கரைசல்
21. பீனைல் மெத்தனல், அடர் NaOH உடன் வினைப்பட்டு X மற்றும் Y எனும் இரண்டு விளைபொருட்களைத் தருகிறது. சேர்மம் X ஆனது உலோக சோடியத்துடன் வினைப் பட்டு ஹைட்ரஜன் வாயுவை வெளியேற்றுகிறது. எனில் X மற்றும் Y ஆகியவை முறையே
அ) சோடியம் பென்சோயேட் மற்றும் பீனால்
ஆ) சோடியம் பென்சோயேட் மற்றும் பீனைல்மெத்தனால்
இ) பீனைல்மெத்தனால் மற்றும் சோடியம் பென்சோயேட்
ஈ) இவற்றில் ஏதுமில்லை
விடை: இ) பீனைல்மெத்தனால் மற்றும் சோடியம் பென்சோயேட்
தீர்வு :
22. பின்வரும் வினைகளில் எதில் புதிய கார்பன் கார்பன் பிணைப்பு உருவாகவில்லை ? PTA - 5
அ) ஆல்டால் குறுக்கம்
ஆ) பிரீடல் கிராஃப்ட் வினை
இ) கோல்ப் வினை
ஈ) உல்ஃப் கிஷ்னர் வினை
விடை: ஈ) உல்ஃப் கிஷ்னர் வினை
23. "A" எனும் ஒரு ஆல்கீன் O3 மற்றும் Zn - H2O உடன் வினைப்பட்டு புரப்பனோன் மற்றும் எத்தனல் ஆகியவற்றை சம மோலார் அளவுகளில் உருவாக்குகிறது. ஆல்கீன் "A" உடன் HCl ஐ சேர்க்கும் போது சேர்மம் "B" முதன்மையான விளைபொருளாக கிடைக்கிறது, விளைபொருள் "B" யின் அமைப்பு.
விடை : C
தீர்வு :
24. ஒப்பிடத்தக்க மூலக்கூறு நிறைகள் கொண்ட ஆல்டிஹைடுகள், கீட்டோன்கள் மற்றும் ஆல்கஹால்களை ஒப்பிடும்போது கார்பாக்சிலிக் அமிலங்கள் அதிக கொதிநிலையை பெற்றுள்ளன. இதற்கு காரணம் (NEET)
அ) வாண்டர்வால்ஸ் கவர்ச்சி விசைகளின் காரணமாக நிகழும் கார்பாக்சிலிக் அமில மூலக்கூறுகளின் கூட்டமைவு
ஆ) கார்பாக்சிலேட் அயனி உருவாதல்
இ) ஒரே மூலக்கூறினுள் H-பிணைப்புகள் உருவாதல்
ஈ) மூலக்கூறுகளுக்கிடைப்பட்ட H-பிணைப்புகள் உருவாதல்
விடை : ஈ) மூலக்கூறுகளுக்கிடைப்பட்ட H-பிணைப்புகள் உருவாதல்