மலர் | தாவரவியல் - இதழமைவு | 11th Botany : Chapter 4 : Reproductive Morphology of Angiosperm

   Posted On :  18.05.2022 01:58 pm

11 வது தாவரவியல் : அலகு 4 : இனப்பெருக்க புற அமைப்பியல்

இதழமைவு

புல்லி இதழ்களும் அல்லி இதழ்களும், மலரின் மொட்டில் அமைந்திருக்கும் முறைக்கு இதழமைவு என்று பெயர்.

இதழமைவு (Aestivation):

புல்லி இதழ்களும் அல்லி இதழ்களும், மலரின் மொட்டில் அமைந்திருக்கும் முறைக்கு இதழமைவு என்று பெயர்.


அ. தொடு இதழமைவு: புல்லி இதழ் அல்லது அல்லி இதழ்களின் விளிம்புகள் ஒன்றை ஒன்று தழுவாமல் தொட்டுக் கொண்டிருக்கும் எடுத்துக்காட்டு: மால்வேசி குடும்ப தாவரங்களின் புல்லிவட்டம் கலோடிரோபிஸ், அன்னோனா.

ஆ. திருகு இதழமைவு (convolute or contorted): ஒவ்வொரு புல்லி அல்லது அல்லி இதழின் ஒரு விளிம்பு மற்றொரு இதழின் விளிம்பைத் தழுவிக் கொண்டிருக்கும். எடுத்துக்காட்டு: செம்பருத்தியின் அல்லி இதழ்கள்.

இதழமைவு: புல்லி இதழ்களும் அல்லி இதழ்களும், மலரின் மொட்டில் அமைந்திருக்கும் முறைக்கு இதழமைவு என்று பெயர்.

ஈ. குவின்குன்ஷியல் : இது அடுக்கு இதழமைவின் ஒரு வகையாகும். இதில் இரண்டு அல்லி இதழ்கள் வெளியேயும், இரண்டு அல்லி இதழ்கள் உள்ளேயும் ஒரு அல்லி இதழின் ஒரு விளிம்பு உள்ளேயும் மற்றொரு விளிம்பு வெளியேயும் காணப்படும். எடுத்துக்காட்டு: கொய்யா, ஐப்போமியா வின் புல்லிவட்டம், கேதராந்தஸ்.

இ. அடுக்கு இதழமைவு: புல்லி இதழ்கள் மற்றும் அல்லி இதழ்கள் ஒழுங்கற்று ஒன்றையொன்று தழுவிக் கொண்டிருக்கும். இதழ் வட்டத்தின் ஒரு இதழ் வெளியேயும், ஒரு இதழ் உள்ளேயும் மற்ற மூன்று இதழ்களின் ஒரு விளிம்பு வெளிப்புறமும் மற்றொரு விளிம்பு உட்புறமும் காணப்படும். எடுத்துக்காட்டு: கேஷியா டிலோனிக்ஸ்

3 வகைகள்: 1. ஏறுதழுவு. 2. குவின்குன்ஷியல். 3. வெக்ஸில்லரி.

உ. வெக்ஸில்லரி (இறங்கு தழுவு இதழமைவு): மேல் பக்கத்தில் அமைந்த பெரிய அல்லி இதழின் இரு விளிம்புகளும் பக்கவாட்டில் உள்ள இதழ்களைத் தழுவிக் கொண்டிருக்கும். பக்கவாட்டு அல்லி இதழ்களின் மற்றொரு விளிம்பு கீழ் பக்கத்தில் உள்ள அல்லி இதழ்களைத் தழுவிக் கொண்டிருக்கும்.  எடுத்துக்காட்டு: பட்டாணி, பீன்ஸ்.

Tags : Flower | Botany மலர் | தாவரவியல்.
11th Botany : Chapter 4 : Reproductive Morphology of Angiosperm : Aestivation Flower | Botany in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 4 : இனப்பெருக்க புற அமைப்பியல் : இதழமைவு - மலர் | தாவரவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 4 : இனப்பெருக்க புற அமைப்பியல்