மலர் | தாவரவியல் - அமைந்திருக்கும் விதம் | 11th Botany : Chapter 4 : Reproductive Morphology of Angiosperm
துணை
உறுப்புகள்
அமைந்திருக்கும் விதம்
இதழ்கள் (புல்லிகள், அல்லிகள், பூவிதழ்கள் ) ஒன்றுடன்
ஒன்று அமைந்திருக்கும் விதம் இதழ் அமைவு முறை
எனலாம்.
1. வட்ட அமைவு (Cyclic
(or) whorled): மலரின் பாகங்கள் குறிப்பிட்ட வட்ட அடுக்குகளாக அமைந்திருக்கும்.
எடுத்துக்காட்டு: பிராசிக்கா.
2. சுருள் அமைவு (Acyclic
or spiral): மலரின் பாகங்கள் சதைப்பற்றுள்ள பூத்தளத்தின் மீது சுழல் முறையில் அமைந்திருக்கும்.
எடுத்துக்காட்டு: மக்னோலியா.
3. சுருள் வட்ட
அமைவு (Spirocyclic (on hemicyclic): (பாதிவட்ட
அமைவு) மலரின் சில பாகங்கள் வட்ட அடுக்ககுகளாகவும் மற்றவை சுருள் அமைவிலும் அமைந்திருக்கும்.
எடுத்துக்காட்டு: அன்னோனா, பாலியால்தியா.