மஞ்சரிகள் வகைகள் - கலப்பு வகை மஞ்சரிகள் | 11th Botany : Chapter 4 : Reproductive Morphology of Angiosperm
மலர்களின் கிளைத்தல், அமைந்திருக்கும் விதம், மற்றும் சில சிறப்பு அமைப்புகளின் அடிப்படையில் மஞ்சரிகளை வகைப்படுத்தலாம்.
I. வரம்பற்ற வளர்ச்சி (ரசிமோஸ்)
II. வரம்புடைய வளர்ச்சி (சைமோஸ்)
III. கலப்பு வகை மஞ்சரி (வரம்புடைய, வரம்பற்ற வளர்ச்சி உடைய வகைகளின் கலவையாக இருக்கும் சில தாவரங்களின் மஞ்சரிகள் ஆகும்).
IV. சிறப்பு வகை மஞ்சரிகள் (மேற்காண் மஞ்சரி வகைகளின் கீழ் வராத மஞ்சரிகள் ஆகும்).
கலப்பு வகை மஞ்சரிகள்:
ரசிமோஸ், சைமோஸ் மஞ்சரிகளின் உருவாக்க வகை கலந்து, ஒரே மஞ்சரியாக வெளிப்படும். அவை இருவகைப்படும்.
1. திர்சஸ் (Thyrsus): இது ரசிம் அச்சில் அமைந்த சைம்கள் ஆகும். வரம்பற்ற மைய அச்சில் பக்கவாட்டில் காம்புடைய சைம் மலர்கள் (தனி டைக்கேஷியம் அல்லது கூட்டு டைக்கேஷியம்) அமைந்திருக்கும். எடுத்துக்காட்டு: ஆசிமம் (துளசி).
2. வெர்ட்டிசில்
அல்லது வெர்ட்டிசிலாஸ்டர் (Verticillaster): மைய அச்சு இரண்டு எதிர் எதிர் பக்கவாட்டு காம்பற்ற
சைம்களைக் கணுவில் கொண்டவை. ஒவ்வொரு கிளையும் ஒருகைக்கிளைத்த, இடம்வலமாக ஸ்கார்பியாய்டுசைம் போல் உருவாவதால் மலர்கள்
கணுவைச் சுற்றி கூட்டமாகக் காணப்படும். எடுத்துக்காட்டு: லியூக்கஸ் (தும்பை).