Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | மகரந்தத்தாள் வட்டம்

மலரின் இன்றியமையா உறுப்புகள் - தாவரவியல் - மகரந்தத்தாள் வட்டம் | 11th Botany : Chapter 4 : Reproductive Morphology of Angiosperm

   Posted On :  06.07.2022 04:25 am

11 வது தாவரவியல் : அலகு 4 : இனப்பெருக்க புற அமைப்பியல்

மகரந்தத்தாள் வட்டம்

மலரின் மூன்றாம் வட்டம், இது மலரின் மலரின் ஆண் பாகமாகும்.

மலரின் இன்றியமையா உறுப்புகள்

மகரந்தத்தாள் வட்டம்:

மகரந்தத்தாள் வட்டம்: மலரின் மூன்றாம் வட்டம், இது மலரின் மலரின் ஆண் பாகமாகும். மேலும் மகரந்தத்தாள்களால் ஆனது. ஒவ்வொரு மகரந்தத்தாளும் மூன்று பாகங்கள் கொண்டது. அவை மகரந்தக்கம்பி, மகரந்தப்பை, இணைப்புத்திசு.

மகரந்தப்பை: மேற்புறம் நுண்வித்தகங்களைக் கொண்ட பருத்த பகுதி. மகரந்த கம்பி: மகரந்தத்தாள்களின் காம்பு.



இணைப்புத் திசு: மகரந்தப்பையின் மடல்களை மகரந்தக் கம்பியுடன் இணைக்கும் திசு.

மகரந்தப்பை பொதுவாக இரண்டு பகுதிகளை கொண்டு இருக்கும். அவை மகரந்தப்பை மடல்கள் (theca) எனப்படும். ஒவ்வொரு மகரந்தப்பை மடலும் இரண்டு நுண்வித்தகங்களைக் கொண்டுள்ளது. இரண்டு நுண்வித்தகங்களும் இணைந்து ஒரு மகரந்தப்பை அறையை உருவாக்கும்.


லாடிக்கியுல் (குறுகிய இழைபோன்ற பூவிதழ்வட்டம்): போயேசியின் உறுப்பினர்களில் உள்ளதை போன்று குறுகிய இழைபோன்ற பூவிதழ்வட்டம் காணப்பட்டால் அது லாடிக்கியூல் எனப்படும்.

இனப்பெருக்க தன்மையற்ற மகரந்தத்தாள்கள் மலட்டு மகரந்தத்தாள்கள் எனப்படும். எடுத்துக்காட்டு: கேஷியாவின் சிறிய மகரந்தத்தாள்கள்.

தனித்தவை : மகரந்தத்தாள் ஒன்றுடன் ஒன்று இணையாதவை.

பிரிநிலை : மகரந்தத்தாள்கள் மலரின் பிறபாகங்களுடன் இணையாமல் இருக்கும்.

இணையாத மகரந்தத்தாள் கொண்டவை : மலரின் மகரந்தத்தாள்கள் தனித்தவையாகவும், பிரிந்த நிலையிலும் காணப்படும்.

  

மகரந்தத்தாள்களின் இணைவு:

மகரந்தத்தாள்கள் தங்களுக்குள்ளாகவோ, மலரின் மற்ற பாகங்களுடனோ இணைந்திருப்பதை குறிக்கும். இது இரு வகைப்படும். அவை 1. ஒத்த உறுப்பிணைவு மற்றும் 2. வேறுபட்ட உறுப்பிணைவு.

1. ஒத்த உறுப்பிணைவு: மகரந்தத்தாள்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்திருக்கும். இவை மூன்று வகைப்படும். அ. தாள் இணைவு ஆ. சிஞ்சினிஷியஸ் இ. சினான்டரஸ்

அ. தாள் இணைவு: மகரந்தக்கம்பிகள் ஒன்று அல்லது பல கற்றைகளாக சேர்ந்திருக்கும். ஆனால் மகரந்தப்பைகள் தனியாக ஒட்டாமல் கீழ்க்கண்ட வகைகளில் காணப்படும்.

1. ஒரு கற்றை மகரந்தத்தாள்கள்: மகரந்தத்தாள்களின் அனைத்து மகரந்தக்கம்பிகளும் ஒரு கற்றையாகச் சேர்ந்திருக்கும் எடுத்துக்காட்டு: மால்வேஸி (செம்பருத்தி, பருத்தி) 

2. இரு கற்றை மகரந்தத்தாள்கள் : மகரந்தத்தாள்களின் மகரந்தக்கம்பிகள் சேர்ந்து இருகற்றைகளாகக் காணப்படும். எடுத்துக்காட்டு: பேபேஸி, (பட்டாணி) கிளைடோரியா.

3. பல கற்றை மகரந்தத்தாள்கள்: மகரந்தக்கம்பிகள் சேர்ந்து பல கற்றைகளாக இணைந்து இருக்கும். எடுத்துக்காட்டு: சிட்ரஸ், பாம்பாக்ஸ்


ஆ. பை இணைவு: (சிஞ்சினிஷியஸ்) மகரந்தக் கம்பிகள் இணையாமல் தனித்தும், மகரந்தப்பைகள் இணைந்தும் காணப்படும். எடுத்துக்காட்டு: ஆஸ்டரேஸி.


இ. முழு இணைவு (சினான்டரஸ்): மகரந்தக் கம்பிகளும், மகரந்தப்பைகளும் முழுமையாக இணைந்து இருக்கும். எடுத்துக்காட்டு: காக்சீனியா.

2. வேறுபட்ட உறுப்பிணைவு: மலரின் மற்ற பாகங்களுடன் மகரந்தத்தாள்கள் ஒட்டிக் காணப்படுவது வேறுபட்ட உறுப்பிணைவு எனப்படும்.

அல்லி ஒட்டியவை: மகரந்தத்தாள்கள் அல்லி இதழ்களுடன் ஒட்டிக் காணப்படும். எடுத்துக்காட்டு: - கத்தரி, டாட்டூரா.


 

அ. புல்லி ஒட்டியவை:

மகரந்தத்தாள்கள் புல்லி இதழ்களுடன் ஒட்டிக்காணப்படும். எடுத்துக்காட்டு: கிரிவில்லியா (சில்வர் ஓக்) 

ஆ. பூவிதழ் ஒட்டியவை (Epiphyllous): மகரந்தத்தாள்கள் பூவிதழ்களுடன் ஒட்டிக் காணப்படும். எடுத்துக்காட்டு: அஸ்பராகஸ்.

இ. கைனோஸ்டீஜியம்: மகரந்தத்தாள்களுடன் சூல்முடி இணைந்து உருவாவது கைனோஸ்டீஜியம் ஆகும். எடுத்துக்காட்டு: கலோடிராபிஸ் மற்றும் ஆர்க்கிடேசி.

ஈ. பொலினியம் : மகரந்தத்தூள்கள் ஒன்றாக இணைந்து ஒரே தொகுப்பாகக் காணப்படும். எடுத்துக்காட்டு: கலோடிராபிஸ்

 

 

மகரந்தத்தாள்களின் நீள் அமைப்பு

I. டைடினாமஸ் :

மலரின் நான்கு மகரந்தத்தாள்களில் இரண்டு நீளமாகவும், இரண்டு குட்டையாகவும் அமைந்திருக்கும். எடுத்துக்காட்டு: ஆசிமம்.

2. டெட்ராடினமஸ்: மலரின் ஆறு மகரந்தத்தாள்களில் நான்கு நீண்ட மகரந்த கம்பிகளையும், இரண்டு குட்டையான மகரந்த கம்பிகளையும் கொண்டிருக்கும். எடுத்துக்காட்டு: பிராசிக்கா.

3. ஹெட்டிரோஸ்டெமனஸ்: ஒரு மகரந்தத்தாள்கள் வெவ்வேறு நீளத்தில் இருப்பதாகும். எடுத்துக்காட்டு: கேஷியா.


மகரந்தப்பை மடல்கள்:

1. ஒருமடல் மகரந்தப்பை: ஒரு அறை கொண்ட மகரந்தம் இரண்டு நுண் வித்தகங்களைக் கொண்டிருக்கும். அவை குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் சிறுநீரக வடிவத்தில் காணப்படும். எடுத்துக்காட்டு: மால்வேசி.

2. இருமடல் மகரந்தப்பை: இரண்டு அறைகள் நான்கு நுண் வித்தகங்களைக் (மகரந்தப்பை ) கொண்டிருக்கும். குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் வண்ணத்துப்பூச்சி வடிவில் காணப்படும். எடுத்துக்காட்டு: சொலானேசி.



மகரந்தப்பை மகரந்தக்கம்பியில் ஒட்டியிருக்கும் முறை:

1. அடிப்பிணைப்பு: (Innate) மகரந்தக்கம்பியின் நுனியில் மகரந்தப்பையின் அடிப்பகுதி இணைந்திருக்கும். எடுத்துக்காட்டு: டாட்டூரா.

2. முதுகுப்பிணைப்பு: மகரந்தக்கம்பியின் நுனியானது மகரந்தப்பையின் முதுகுப்புறத்தில் இணைந்திருக்கும். எடுத்துக்காட்டு: ஹைபிஸ்கஸ். 

3. வெர்சடைல்: மகரந்தக்கம்பியின் நுனியானது மகரந்தைப்பையின் மையப்புள்ளியில் இணைந்திருக்கும். எடுத்துக்காட்டு: புல், ஒரைசா சட்டைவா.


4. முழுப்பிணைப்பு: மகரந்தக்கம்பி மகரந்தப்பையின் அடி முதல் நுனி வரை தொடர்ந்து பிணைந்திருக்கும். எடுத்துக்காட்டு: நிலம்போ.

 

Tags : Parts of Flower | Botany மலரின் இன்றியமையா உறுப்புகள் - தாவரவியல்.
11th Botany : Chapter 4 : Reproductive Morphology of Angiosperm : Androecium Parts of Flower | Botany in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 4 : இனப்பெருக்க புற அமைப்பியல் : மகரந்தத்தாள் வட்டம் - மலரின் இன்றியமையா உறுப்புகள் - தாவரவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 4 : இனப்பெருக்க புற அமைப்பியல்