தாவரவியல் - மலர் வரைபடம், மலர் சூத்திரம் | 11th Botany : Chapter 4 : Reproductive Morphology of Angiosperm
மலர்
வரைபடம், மலர் சூத்திரம்
உருவாக்கும்
முறை:
மலர்ச்சூத்திரம் என்பது ஒரு மலரின் சிறப்பம்சங்களைப்
பற்றி எளிதான முறையில் விளக்கும் வழி முறையாகும். மலர் வரைப்படம் என்பது மலரின் குறுக்கு
வெட்டுத் தோற்றத்தை விளக்கப்படமாக குறிக்கும் முறையாகும். மலரின் வட்ட அடுக்குகள் மேலிருந்து
பார்ப்பதைப் போன்று குறிக்கப்பட்டிருக்கும். பூவடிச் செதில், பூக்காம்புச் செதில்,
பூவின் மற்ற பாகங்களின் எண்ணிக்கை மற்றும் அமைந்திருக்கும் விதம், இணைவு, தழுவு அமைவு,
சூல் ஒட்டு முறை அனைத்தும் விளக்கும் படமாகும்.
மலரைக் கொண்டுள்ள கிளை, மலரின் மைய அச்சு ஆகும். மைய
அச்சை நோக்கியுள்ள மலரின் பக்கம் மலரின் மேல்பக்கமாகும். பூவடிச் செதிலை நோக்கியுள்ள
மலரின் பக்கம் மலரின் கீழ்பக்கமாகும் மலரின் பலவகையான பாகங்கள் வட்ட அடுக்குகளாக அமைந்திருக்கும்
விதமாகக் காட்டப்பட்டுள்ளது.
கீழ்க்காணும் ஆங்கிலச்சுருக்கங்களும் குறியீடுகளும்
மலர் சூத்திரத்தில் பயன்படுத்தப்படுகின்றன
Br: பூவடிச் செதிலுடையவை
Ebr: பூவடிச் செதிலற்றவை
Brl: பூக்காம்புச் செதிலுடையவை
Ebrl: பூக்காம்புச் செதிலற்றவை
: ஆரச்சீருடைய
% : இரு பக்கச்சீருடைய
: ஆண் மலர்
: பெண் மலர்
: இரு பால் மலர்
K: புல்லி வட்டம், K5 புல்லி இதழ்கள் ஐந்து, இணையாதவை, K (5) புல்லி இதழ்கள் ஐந்து, இணைந்தவை.
C: அல்லி வட்டம் C5, அல்லி இதழ்கள் ஐந்து இணையாத அல்லிகள், C (5) அல்லி இதழ்கள் ஐந்து
இணைந்தவை.
C (2+3) ஈருதடான அல்லி வட்டம், இரண்டு மடல்கள் கொண்ட
மேலுதடு கொண்டவை.
A: மகரந்தத்தாள் வட்டம், A3 மூன்று மகரந்தத்தாள்கள்
இணையாதவை. A2+2, மகரந்தத்தாள்கள் நான்கு, இரு அடுக்குகள் (டைடினமஸ்) ஒவ்வொரு அடுக்கிலும் இரண்டு மகரந்தத்தாள்கள், இணையாதவை.
A (9) +1 பத்து மகரந்தத்தாள்கள், இரு கற்றைகள் (இரு கற்றை மகரந்தத்தாள்கள்)
9 மகரந்தாள்கள் இணைந்து ஒரு கற்றையாகவும், ஒன்று மற்றொரு
கற்றையாகவும் காணப்படும்.
: மகரந்தத்தாள்கள் அல்லி ஒட்டியவை, இவை அல்லிவட்ட
சுருக்கமும், மகரந்தத்தாள் வட்டச்சுருக்கமும் ஒரு வளைகோட்டினால் இணைக்கப்பட்டிருக்கும்.
இனப்பெருக்கத் தன்மையற்ற மகரந்தத்தாள் (வளமற்றவை)
G: சூலக வட்டம் அல்லது சூலகம்
G2; சூலக இலைகள் இரண்டு இணையாதவை (apocarpous)
சூலக இலைகள் மூன்று இணைந்தவை (Syncarpous)
மலர் வரைபடம்
- சில தாவரங்களின் மலர்ச்சூத்திரம் மற்றும் மலர் வரைபடம்
G0 : பிஸ்டில்லோடு (மலட்டுச்சூலிலை - இனப்பெருக்கத் தன்மையற்றவை)
Ġ: மேல்மட்டசூலகப்பை
G : கீழ்மட்ட சூலகப்பை
G- : அரைகீழ்மட்ட சூலகப்பை
∝ : எண்ணற்ற பூவின் பாகங்களை குறிப்பதற்கு