தாவரவியல் - மஞ்சரியின் வகைகள் தோன்றுமிடத்தின் அடிப்படையில் | 11th Botany : Chapter 4 : Reproductive Morphology of Angiosperm
மஞ்சரியின் வகைகள் தோன்றுமிடத்தின் அடிப்படையில்
மஞ்சரி வெவ்வேறு இடத்திலிருந்து உருவாவதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? ஒரு தாவரத்தில் மஞ்சரி எங்குள்ளது? தண்டு நுனியிலா அல்லது இலைக் கக்கத்திலா?
தோன்றுமிடத்தின் அடிப்படையில் மஞ்சரியை மூன்று வகைகளாகப்பிரிக்கலாம். அவை,
நுனிமஞ்சரி: தண்டு நுனியிலிருந்து வளர்ந்து உருவாவது. எடுத்துக்காட்டு: நீரியம் ஒலியாண்டர்.
கக்கமஞ்சரி: இலையின் கக்கத்தில் தோன்றுவது. எடுத்துக்காட்டு: ஹைபிஸ்கஸ் ரோசா- சைனஸ்சிஸ்.
தண்டுமஞ்சரி (காலிஃபுளோரஸ்) : மரத்தின் தண்டுப்பகுதியிலிருந்து நேரடியாக மஞ்சரி உருவாதல். எடுத்துக்காட்டு: தியோபுரோமா கொக்கோ, கௌரோபிட்டா கைனென்சிஸ்.
பலா மற்றும் நாகலிங்க மரத்தின் மஞ்சரிகளைக் கவனி. அவை எங்கிருந்து உருவாகின்றன?