தாவரவியல் - திரள் கனிகள் | 11th Botany : Chapter 4 : Reproductive Morphology of Angiosperm
திரள் கனிகள் (Aggregate fruits) :
இது இணையாச் சூலக இலைகள் கொண்ட ஓர் தனி மலரில் இருந்து உருவாகும் கனியாகும். ஒவ்வொரு தனிச் சூலகமும் ஒரு எளிய சிறு கனியாக மாறுகிறது. இத்தகைய சிறுகனிகளின் தொகுப்பு திரள்கனியை உண்டாக்கும். ஒவ்வொரு சூலகமும் ஒரு உள்ஓட்டு சதைக்கனி, உறை ஒட்டா வெடியாக்கனி, ஒருபுற வெடிகனி அல்லது சதைக்கனி வகை கனியாக உருவாகும். ஒரு தனி மலரால் உருவாக்கப்படும் இச்சிறு கனிகளின் திரள் கனித்தொகுப்பு (Etaerio) எனப்படும். எடுத்துக்காட்டு: அன்னோனா, பாலியால்தியா. (படம் 4.32)