தாவரவியல் - இனப்பெருக்க புற அமைப்பியல் : அறிமுகம் | 11th Botany : Chapter 4 : Reproductive Morphology of Angiosperm
இனப்பெருக்க புற அமைப்பியல்
கற்றல் நோக்கங்கள்
இப்பாடத்தினை
கற்போர்
• மஞ்சரியின்
வகைகளை வரிசைப்படுத்த,
• ரசிமோஸ், சைமோஸ்
மஞ்சரிகளை வேறுபடுத்த, ஒரு மலரைப் பிரித்து அதன் பாகங்களை ஆய்ந்தறிய,
• பல்வேறு இதழமைவு
வகைகளைப் புரிந்து கொள்ள, பல்வேறு வகையான சூல் ஒட்டுமுறைகளை அறிய,
• பல்வேறு வகை
கனிகளை, விதைகளை அறிய,
• பல்வேறு கனி,
விதைகளின் அமைப்பை கற்க,
• இருவிதையிலை
விதையை ஒருவிதையிலை விதையிலிருந்து வேறுபடுத்த இயலும்.
பாட
உள்ளடக்கம்
41 மஞ்சரி
4.2. மலர்
4.3. துணை பாகங்கள்
4.4. மகரந்தத்தாள்
வட்டம்
4.5. சூலக வட்டம்
4.6. பூச்சூத்திரம்,
மலர் வரைபடம் உருவாக்குதல்
4.7 கனி
4.8. விதை
பல நூற்றாண்டுகளாக மலர்கள் உலகளாவிய கலாச்சார அடையாளமாக
இருந்து வருகின்றன. உலகளவில் தினசரி வாழ்க்கையில் முக்கிய அழகியல் உறுப்பாக கலையின்
அடையாளமாக காலம் முழுவதும் உள்ளன. மலர்களைப் பரிமாறிக் கொள்வது மரியாதை, பாசம், மகிழ்ச்சி
மற்றும் அன்பைக் குறிக்கிறது.
ஆனால் தாவரங்களைப் பொறுத்தவரை மலரின் பயன்பாடு நாம்
உபயோகிக்கும் விதம் மற்றும் புரிந்து கொள்வதிலிருந்து வேறுபடுகிறது. ஒரு தாவரம் தன்
இனத்தைப் பெருக்குவதற்கு மலர் உதவுகிறது. இனப்பெருக்க உறுப்புகளான மலர், அதன் அமைப்பு
மற்றும் கனிகள், விதைகள் பற்றி இந்த பாடத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மலர்
வளர்ப்பு (Floriculture)
மலர் வளர்ப்பு என்பது தோட்டக்கலையின்
ஒரு பிரிவாகும். இது மலர்கள் மற்றும் அலங்காரத் தாவரங்கள் வளர்ப்புடன் தொடர்பு கொண்டது.
இந்திய அரசாங்கம் மலர் வளர்ப்பை வளர்ந்து வரும் புதிய தொழிலாக அடையாளம் கண்டுள்ளது.
ஏற்றுமதிக்கான 100% வாய்ப்பு கொண்டதாகப் பதிந்துள்ளது. வேளாண்மை மற்றும்பதப்படுத்தப்பட்ட
உணவு ஏற்றுமதி முன்னேற்ற ஆணையம்(APEDA) இந்தியாவில் வேளாண்மை மற்றும் தோட்டக் கலை பொருட்களுக்கான
ஏற்றுமதியை ஊக்குவிக்கும் அமைப்பாகும்.