மலரின் இன்றியமையா உறுப்புகள் | தாவரவியல் - சூலக வட்டம் | 11th Botany : Chapter 4 : Reproductive Morphology of Angiosperm
சூலக
வட்டம் (Gynoecium)
சூலக வட்டம் அல்லது சூலகம் மலரின் பெண் இனப்பெருக்க
உறுப்பாகும்.
சூலகம் (Pistil)
அகன்ற அடிப்பகுதியான சூலகப்பை , நீண்ட
பகுதியான சூலகத்தண்டு, மகரந்தம் ஏற்கும்
மேல்பகுதியான சூலகமுடி இவற்றால் ஆனது.
சூலகப்பைக்காம்பு (ஸ்டைப்) உடைய சூலகப்பையை ஸ்டைபிடேட்
சூலகப்பை எனலாம்.
சூலிலை: இவை சூலகவட்டத்தின் உறுப்புகளாகும். சூலகவட்டம் ஒன்று
அல்லது அதற்கு மேற்பட்ட சூலக இலைகளால் ஆனது. சூலக இலைகள் தனித்தவையாகவோ இணைந்தோ காணப்படும்.
1.
சூலக இலைகளின் எண்ணிக்கை
ஒற்றைச்சூலக இலை
சூலகம் (Mono or Uni carpellary): ஒரு சூலக இலைக் காணப்படும். எடுத்துக்காட்டு:
பேபேஸி.
இரு சூலக இலை
சூலகம்: இரண்டு சூலக இலைகளால் ஆனது. எடுத்துக்காட்டு:
ரூபியேஸி
மூன்று சூலக இலை
சூலகம்:
மூன்று சூலக இலைகளால் ஆனது. எடுத்துக்காட்டு: குக்கர்பிட்டேஸி.
நான்கு சூலக இலை
சூலகம்:
நான்கு சூலக இலைகளால் ஆனது. எடுத்துக்காட்டு: லேமியேஸி.
பல சூலக இலை சூலகம்:
பல சூலக இலைகளால் ஆனது. எடுத்துக்காட்டு: நிம்ஃபயேசி.
2.
சூலக இலை இணைவு
இது வகைப்பாட்டியலில் முக்கியமானெதாரு பண்பாகும். இணையாச்சூலிலை
சூலகம் மூடுவிதைத் தாவரங்களின் மூதாதைய நிலை கொண்டதாகப் பொதுவாகக் கருதப்படுகிறது.
இணையாச்சூலக இலை
சூலகம் (Apocarpous): இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட தனித்தசூலக இலைகளால் ஆனது.
எடுத்துக்காட்டு: அன்னோனா.
இணைந்த சூலக இலை
சூலகம் (syncarpous): இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சூலக இலைகளால் ஆனவை. அவை
இணைந்து காணப்படும். எடுத்துக்காட்டு: சிட்ரஸ்,
தக்காளி.
3.
சூலக அறைகளின் எண்ணிக்கை
சூலகப்பையினுள் சிறப்பு வகைத் திசுவான (பிளாசெண்டா)
சூல் ஒட்டுத்திசுவின் மேல் சூல்கள் காணப்படும். செப்டம் என்பது சூலகப்பையின் குறுக்குச்சுவர் அல்லது பிரிவினைப்பகுதி ஆகும்.
சூலகப்பையின் சுவர்களும் செப்டாக்களும் உருவாக்கும் வெற்றிடம் சூலக அறை எனப்படும்.
இதே போல் நான்கு அறை சூலகப்பை, ஐந்து அறை சூலகப்பைகளும்
சூலகப்பை அறைகளின் எண்ணிக்கை நான்கு, ஐந்துக்கு ஏற்றாற் போல் முறையே காணப்படும். ஒன்றுக்கு
மேல் அறை உள்ள சூலகப்பைகள் புளூரி லாக்குலர்
எனப்படும்.
4.
பூத்தளத்தின் குறுக்கப்பட்ட இடைக்கணுவின் நீட்சி:
1. புல்லி அல்லி
பூத்தள இடைக்கணு (Anthophore): அல்லி வட்டத்திற்கும், புல்லி
வட்டத்திற்கும் இடையே பூத்தளத்தின் இடைக்கணுப்பகுதி நீட்சியுற்று காணப்படும். எடுத்துக்காட்டு:
கேரியோ ஃபில்லேஸி (சைலின் கொனாய்டியா)
2. அல்லி ஆணக
இடைக்கணு (Androphore): அல்லி வட்டத்திற்கும் மகரந்தத்தாள் வட்டத்திற்கும் இடையே
உள்ள இடைக்கணுப் பகுதி நீண்டு காணப்படும். எடுத்துக்காட்டு : க்ரூவியா.
3. ஆணகப்பெண்ணக
இடைக்கணு (Gynophore): மகரந்தத்தாள் வட்டத்திற்கும், சூலக வட்டத்திற்கும் இடையே உள்ள
இடைக்கணுப்பகுதி நீண்டு காணப்படும். எடுத்துக்காட்டு: கப்பாரிஸ்.
4. ஆண் பெண்ணக
இடைக்கணு (அ) பெண், ஆணக இடைக்கணு
(Gynandrophore (or) Androgynophore): அல்லி வட்டத்திற்கும் மகரந்தத்தாள்
வட்டத்திற்கும் இடைய உள்ள பகுதியும், மகரந்தத்தாள் வட்டத்திற்கும் சூலக வட்டத்திற்கும்
இடையே உள்ள பகுதியும் இரண்டுமே நீண்டு காணப்படும். எடுத்துக்காட்டு: கைனான்ட்ராப்சிஸ்.
ஹைப்பாந்தியம்: சதைப்பற்றுள்ள, ஏற்றமடைந்த
பெரும்பாலும் தேன்சுரப்புடைய கோப்பை போன்ற பூத்தளம் ஆகும்.
5.
சூலகப்பை அமைவிடம்
சூலகப்பை மலரின் மற்ற பாகங்களுடன் எங்கு ஒட்டியிருக்கிறது
என்பதை குறிப்பிடுவதாகும். இது கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்படும். 1. மேல் மட்டச் சூலகப்பை: இந்த வகைச்சூலகப்பையில்
புல்லிகள், அல்லிகள், மகரந்தத்தாள்கள் சூலகப்பையின் அடியில் ஒட்டியிருக்கும். 2. கீழ்மட்டச் சூலகப்பை: இந்த வகைச்சூலகப்பையில்
புல்லிகள், அல்லிகள், மகரந்தத்தாள்கள் சூலகப்பையின் முனையில் ஒட்டியிருக்கும்.
3. அரைகீழ்மட்டச்சூலகப்பை: இந்தவகைச்சூலகப்பையில் புல்லிகள், அல்லிகள், மகரந்தத்தாள்கள்
அல்லது ஹைபாந்தியம் சூலகப்பையின் மையத்திற்கு அருகே ஒட்டியிருக்கும்.
6.
பூத்தளத்தில் பூவிதழ் / மகரந்தத்தாள் வட்டம் இணைந்திருக்கும் விதம்:
மலரில் பூவிதழ் வட்டம், மகரந்தத்தாள் வட்டத்தின் அமைவிடத்தை குறிப்பது.சூலகப்பைக்கு ஹைபாந்தியம் இருந்தால் அதற்கு ஏற்ப அமைவிடம் வேறுபட்டிருக்கும்.
ஹைப்போகைனஸ்
(சூலக கீழ் மலர்): புல்லி இதழ்கள், அல்லி இதழ்கள், மகரந்ததாள்கள்
மேற்மட்ட சூலகப்பையின் அடியில் இணைந்திருப்பது ஹைப்போகைனஸ் எனப்படும். எடுத்துக்காட்டு:
மால்வேஸி.
எப்பிஹைப்போகைனஸ்
(அரை கீழ்மட்டச் சூலகமலர்): புல்லி
இதழ்கள், அல்லி இதழ்கள், மகரந்ததாள்கள் சூலகப்பையின் (அரைகீழ்மட்டச்சூலகப்பை) அரைமட்டத்தில்
இணைந்திருப்பது எப்பிஹைப்போகைனஸ் எனப்படும். எடுத்துக்காட்டு: பேபேசி, ரோசேசி.
எப்பிகைனஸ்
(சூலகமேல் மலர்): புல்லி
இதழ்கள், அல்லி இதழ்கள், மகரந்ததாள்கள் கீழ்மட்டச்சூலகப்பையின் மேல்புறத்தில் இணைந்திருப்பது
எப்பிகைனஸ் எனப்படும். எடுத்துக்காட்டு: வெள்ளரி, ஆப்பிள், ஆஸ்டரேசி.
பெரிகைனஸ்
(சூலகசூழ்மலர்): ஹைபாந்தியம் ஓர் மேல்மட்டச்சூலகப்பையின் அடியில்
இணைந்திருப்பது பெரிகைனஸ் எனப்படும்.
எப்பிபெரிகைனஸ்
(சூலகமேல்மலர்): ஹைப்பாந்தியம் ஓர் கீழ்மட்டச் சூலகப்பையின்
மேற்பரப்பில் இணைந்திருப்பது எப்பிபெரிகைனஸ்
எனப்படும்.
சூல்
ஒட்டுமுறை (Placentation)
சூலகப்பையில் சூல் ஒட்டுத்திசு அமைந்திருக்கும் விதத்திற்கு
சூல் ஒட்டுமுறை என்று பெயர்.
விளிம்பு
சூல் ஒட்டுமுறை (Marginal):
ஒற்றைச் சூலகத்தின் விளிம்பில் காணப்படும் சூல் ஒட்டுத்திசுவில்
சூல்கள் ஒட்டியிருக்கும். எடுத்துக்காட்டு: ஃபேபேஸி.
தடுப்புச்
சுவர் சூல் ஒட்டுமுறை (Superficial):
சூல்கள் சூலகப்பை பிரிக்கும் குறுக்குச் சுவர்களின்
புறப்பரப்பில் ஒட்டியிருக்கும். எடுத்துக்காட்டு: நிம்ஃபயேஸி.
தனித்த
மைய சூல் ஒட்டுமுறை (Free central):
பல சூலிலை கொண்ட குறுக்குச் சுவர் அற்ற இணைந்த சூலகப்பையின்
மைய அச்சில் சூல் ஒட்டுத்திசு காணப்படும்.
எடுத்துக்காட்டு:
கேரியாஃபில்லேஸி, டையாந்தஸ், பிரிம்ரோஸ்.
அச்சு
சூல் ஒட்டுமுறை:
சூல் ஒட்டுத்திசுவானது குறுக்குச்சுவருடைய பல சூலிலையுடைய
இணைந்த சூலகப்பையின் மைய அச்சிலிருந்து தோன்றும். எடுத்துக்காட்டு: ஹைபிஸ்கஸ், தக்காளி, எலுமிச்சை .
சுவர்
சூல் ஒட்டுமுறை (Parietal):
ஓரறை கொண்ட பல சூலிலையுடைய இணைந்த சூலகப்பையின் சுவர்களின்
மீது அல்லது சூலிலைகள் சந்திக்கும் இடங்களில் சூல் ஒட்டுத்திசு காணப்படும்.
எடுத்துக்காட்டு:
கடுகு, அர்ஜிமோன், வெள்ளரி.
அடிச்சூல்
ஒட்டுமுறை:
ஓரறை கொண்ட சூலகப்பையின் அடிப்புறத்தில் சூல் ஒட்டுத்திசு
காணப்படும்.
எடுத்துக்காட்டு:
சூரியகாந்தி (ஆஸ்டரேஸி), மாரிகோல்டு.