மலர் | தாவரவியல் - அல்லிவட்டம் | 11th Botany : Chapter 4 : Reproductive Morphology of Angiosperm

11 வது தாவரவியல் : அலகு 4 : இனப்பெருக்க புற அமைப்பியல்

அல்லிவட்டம்

பெரும்பான்மையான மலர்களின் கவர்ச்சிகரமான உறுப்பு மற்றும் வழக்கமாக வண்ணமயமான உறுப்பு அல்லிவட்டமாகும்.

அல்லிவட்டம் (Corolla)

பெரும்பான்மையான மலர்களின் கவர்ச்சிகரமான உறுப்பு மற்றும் வழக்கமாக வண்ணமயமான உறுப்பு அல்லிவட்டமாகும். இவை அயல் மகரந்த சேர்க்கைக்குப் பூச்சிகளை கவர்கின்றன.

 

1. இணைவு:

அ. இணையா அல்லிவட்டம் (Apopetalous / Polypetalous,) அல்லி இதழ்கள் இணையாமல் தனித்திருக்கும். எடுத்துக்காட்டு: ஹைபிஸ்கஸ்.

ஆ. இணைந்த அல்லிவட்டம் (Gamopetalous/Sympetalous): அல்லி இதழ்கள் இணைந்தவை. எடுத்துக்காட்டு: டாட்டுரா.

 

பூவிதழ் வட்டம்:

ஒத்த அங்கமலர்கள் என்ற கலைச்சொல் நினைவிருக்கிறதா? மலரில் அல்லிவட்டம் புல்லிவட்டம் என வேறுபாடு இல்லாமல் இருந்தால் அது பூவிதழ்வட்டம் எனப்படும். ஒவ்வொரு உறுப்பும் பூவிதழ் எனப்படும். பூவிதழ்கள் இணையாமல் இருந்தால் தனித்த பூவிதழ் வட்டம் (பாலிஃபில்லஸ்) எனப்படும். எடுத்துக்காட்டு அல்லியம் சட்டைவம். பூவிதழ்கள் இணைந்து காணப்பட்டால் இணைந்த பூவிதழ் வட்டம் எனப்படும் (கேமோஃபில்லஸ்). எடுத்துக்காட்டு: அல்லியம் சீபா.

இதழமைவு (Aestivation):

புல்லி இதழ்களும் அல்லி இதழ்களும், மலரின் மொட்டில் அமைந்திருக்கும் முறைக்கு இதழமைவு என்று பெயர்.


அ. தொடு இதழமைவு: புல்லி இதழ் அல்லது அல்லி இதழ்களின் விளிம்புகள் ஒன்றை ஒன்று தழுவாமல் தொட்டுக் கொண்டிருக்கும் எடுத்துக்காட்டு: மால்வேசி குடும்ப தாவரங்களின் புல்லிவட்டம் கலோடிரோபிஸ், அன்னோனா.

ஆ. திருகு இதழமைவு (convolute or contorted): ஒவ்வொரு புல்லி அல்லது அல்லி இதழின் ஒரு விளிம்பு மற்றொரு இதழின் விளிம்பைத் தழுவிக் கொண்டிருக்கும். எடுத்துக்காட்டு: செம்பருத்தியின் அல்லி இதழ்கள்.

இதழமைவு: புல்லி இதழ்களும் அல்லி இதழ்களும், மலரின் மொட்டில் அமைந்திருக்கும் முறைக்கு இதழமைவு என்று பெயர்.

ஈ. குவின்குன்ஷியல் : இது அடுக்கு இதழமைவின் ஒரு வகையாகும். இதில் இரண்டு அல்லி இதழ்கள் வெளியேயும், இரண்டு அல்லி இதழ்கள் உள்ளேயும் ஒரு அல்லி இதழின் ஒரு விளிம்பு உள்ளேயும் மற்றொரு விளிம்பு வெளியேயும் காணப்படும். எடுத்துக்காட்டு: கொய்யா, ஐப்போமியா வின் புல்லிவட்டம், கேதராந்தஸ்.

இ. அடுக்கு இதழமைவு: புல்லி இதழ்கள் மற்றும் அல்லி இதழ்கள் ஒழுங்கற்று ஒன்றையொன்று தழுவிக் கொண்டிருக்கும். இதழ் வட்டத்தின் ஒரு இதழ் வெளியேயும், ஒரு இதழ் உள்ளேயும் மற்ற மூன்று இதழ்களின் ஒரு விளிம்பு வெளிப்புறமும் மற்றொரு விளிம்பு உட்புறமும் காணப்படும். எடுத்துக்காட்டு: கேஷியா டிலோனிக்ஸ்.

3 வகைகள்: 1. ஏறுதழுவு. 2. குவின்குன்ஷியல். 3. வெக்ஸில்லரி.

உ. வெக்ஸில்லரி (இறங்கு தழுவு இதழமைவு): மேல் பக்கத்தில் அமைந்த பெரிய அல்லி இதழின் இரு விளிம்புகளும் பக்கவாட்டில் உள்ள இதழ்களைத் தழுவிக் கொண்டிருக்கும். பக்கவாட்டு அல்லி இதழ்களின் மற்றொரு விளிம்பு கீழ் பக்கத்தில் உள்ள அல்லி இதழ்களைத் தழுவிக் கொண்டிருக்கும்.  எடுத்துக்காட்டு: பட்டாணி, பீன்ஸ்.

 

Tags : What, Shapes, Fusion | Flower | Botany மலர் | தாவரவியல்.
11th Botany : Chapter 4 : Reproductive Morphology of Angiosperm : Corolla What, Shapes, Fusion | Flower | Botany in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 4 : இனப்பெருக்க புற அமைப்பியல் : அல்லிவட்டம் - மலர் | தாவரவியல் : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 4 : இனப்பெருக்க புற அமைப்பியல்