Home | 8 ஆம் வகுப்பு | 8வது கணிதம் | காரணிப்படுத்துதல்

இயற்கணிதம் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு கணக்கு - காரணிப்படுத்துதல் | 8th Maths : Chapter 3 : Algebra

   Posted On :  21.10.2023 05:56 am

8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : இயற்கணிதம்

காரணிப்படுத்துதல்

எந்த ஒரு எண்ணையும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்களின் பெருக்கற்பலனாக எழுதுவதைக் காரணிப்படுத்துதல் என்கிறோம்.

காரணிப்படுத்துதல்

எந்த ஒரு எண்ணையும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்களின் பெருக்கற்பலனாக எழுதுவதைக் காரணிப்படுத்துதல் என்கிறோம். எண் 12 ஐப் பகாக் காரணிகளின் பெருக்கற்பலனாக எழுதலாம். 12 = 2 × 2 × 3 இதனைப் பகாக் காரணிபடுத்துதல் என்கிறோம்.

குறிப்பு

பகா எண்கள்: ஒன்றாலும், தன்னாலும் வகுபடக் கூடிய எண்கள் அல்லது இரண்டு காரணிகளை மட்டுமே உடைய எண்கள். எடுத்துக்காட்டு: 2, 3, 5,7, 11,... .

பகு எண்கள்: இரண்டுக்கும் மேற்பட்ட காரணிகளை உடைய எண்கள். எடுத்துக்காட்டு: 4, 6, 8, 9, 10, 12,....

இயற்கணிதக் கோவையை எவ்வாறு காரணிப்படுத்துவீர்கள்? ஆம். கொடுக்கப்பட்ட  கோவையை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோவைகளின் பெருக்கல் பலனாக எழுத முடிந்தால் அதனைக் கோவைகளின் காரணிப்படுத்துதல் என்கிறோம்.

எடுத்துக்காட்டாக (i) a2 – b2 = (a + b)(a – b) இங்கு (a + b) மற்றும் (a – b) ஆகியவை a2 – b2 இன் இரண்டு காரணிகள் ஆகும்.

(ii) 5y + 30 = 5(y + 6) இங்கு 5 மற்றும் (y + 6) ஆகியவை 5y + 30 இன் இரண்டு காரணிகள் ஆகும்

மேலும் எந்த ஒரு கோவையையும் நாம் (1) × (கோவை) எனக் காரணிப்படுத்தலாம்

எடுத்துக்காட்டாக a2 – b2 என்பதனை (1) × (a2 – b2) அல்லது (–1) × (b2 a2) என காரணிப்படுத்த முடியும். ஏனென்றால் எண் 1, அனைத்து எண்கள் மற்றும் கோவைகளின் காரணி ஆகும்.

எனவே, நாம் கோவைகளைக் காரணிப்படுத்தும்போது, கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் பொருத்தமானக் காரணிப்படுத்துதல் முறையைப் பின்பற்றி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காரணிகளைப் பெறலாம் (1 தவிர).


வகை 1: ஒவ்வொரு உறுப்பிலும் உள்ள பொதுக் காரணியை வெளியே எடுத்துக் காரணிப்படுத்துதல் 

கோவையில் உள்ள அனைத்துப் பொதுக் காரணிகளையும் வெளியே எடுத்து காரணிகளை வரிசைப்படுத்த வேண்டும்.


எடுத்துக்காட்டு 3.18

காரணிப்படுத்துக: 4x2 y + 8xy

தீர்வு :

இங்கு, 4x2y + 8xy கீழ்க்கண்டவாறு எழுதலாம்

 = (2 × 2 × x × x × y) + (2 × 2 × 2 × x × y)

2, 2, x, y என்ற பொதுக் காரணிகளை வெளியே எடுக்க, நமக்குக் கிடைப்பது

= 2 × 2 × x × y ( x + 2)

= 4xy (x + 2) 


வகை 2: ஒவ்வொரு உறுப்பில் இருந்தும் பொதுவாக உள்ள ஈருறுப்புக் காரணியை வெளியே எடுத்து காரணிப்படுத்துதல்.

எடுத்துக்காட்டு 3.19

(i) காரணிப்படுத்துக: (2x +5)(x y) + (4y)(x y

தீர்வு:

இங்கு (2x + 5)(x y) + (4y)(x y)

(x y) என்ற பொதுக் காரணியை வெளியே எடுக்க நமக்கு கிடைப்பது, (x y)(2x + 5 + 4y)

(ii) காரணிப்படுத்துக: 3n(p – 2) + 4(2 – p)

தீர்வு

இங்கு வெளியே எடுக்க 

3n(p – 2) – 4(p – 2) 

(p – 2) என்ற பொதுக் காரணியை வெளியே எடுக்க 

நமக்கு கிடைப்பது, (p – 2)(3n – 4)


வகை 3: ஒன்றாகச் சேர்த்துக் காரணிப்படுத்துதல்

சில நேரங்களில், கொடுக்கப்பட்ட கோவைகளில், பொதுக்காரணிகளைக் கொண்ட உறுப்புகளை மட்டும் ஒன்றாகச் சேர்த்து, அவ்வுறுப்புகளில் உள்ள பொதுக்காரணியை வெளியே எடுப்பதன் மூலம் எளிமையாகக் காரணிப்படுத்த இயலும்.

எடுத்துக்காட்டு 3.20

காரணிப்படுத்துக : x2 + yz + xy + xz 

தீர்வு:

இங்கு , x2 + yz +xy + xz 

பொருத்தமான முறையில் உறுப்புகளைச் சேர்க்க = (x2 + xy) + (yz + xz)

= x(x + y) + z( y + x)

= x(x + y) + z(x + y)         (பரிமாற்றுப் பண்பு

(x + y) என்ற பொதுக் காரணியை வெளியே எடுக்க, நமக்குக் கிடைப்பது

= (x + y)(x + z) 


வகை 4: முற்றொருமையைப் பயன்படுத்திக் காரணிப்படுத்துதல்

(i) (a + b)2 = a2 + 2ab + b2 

(ii) (a – b)2 = a2 – 2ab +b2 

(iii) a2 – b2 = (a + b)(a – b)


எடுத்துக்காட்டு 3.21

காரணிப்படுத்துக: x2 + 8x +16

தீர்வு

இங்கு , x2 + 8x + 16

உடன் ஒப்பிட நமக்குக் கிடைப்பது a = x ; b = 4 

(x2) + 2(x)(4) + (4)2 = (x + 4)2

x2 + 8x + 16 = (x + 4)2 = (x + 4) (x + 4) 

(x + 4), (x + 4) ஆகியவை இரு காரணிகளாகும். 


எடுத்துக்காட்டு 3.22

காரணிப்படுத்துக: 49x2 – 84xy + 36y2

தீர்வு

இங்கு, 49x2 – 84xy + 36y2 = 72 x2 – 84xy + 62y2

= (7x)2 – 2(7x)(6y) + (6y)2 

a2 – 2ab + b2 = (a – b)2 உடன் ஒப்பிட நமக்குக் கிடைப்பது a =7x, b = 6y

(7x)2 – 2(7x)(6y) + (6y)2 = (7x – 6y)2

49x2 – 84xy + 36y2 = (7x –6y)2 

(7x – 6y), (7x – 6y) ஆகியவை இரு காரணிகளாகும்.


இவற்றை முயல்க

காரணிகளைக் காண்க.



எடுத்துக்காட்டு 3.23

காரணிப்படுத்துக: 49x2 – 64y2

தீர்வு

இங்கு, 49x2 – 64y2 = 72 x2  82y2

= (7x)2 –  (8y)2

a2 – b2 = (a + b)(a – b)

உடன் ஒப்பிட நமக்குக் கிடைப்பது a =7x, b = 8y

எனவே (7x)2 –  (8y)2 =  (7x + 8y) (7x – 8y)

(7x + 8y), (7x – 8y) ஆகியவை இரு காரணிகளாகும்.


வகை 5: (ax2 + bx + c)   என்ற வடிவில் உள்ள கோவையைக் காரணிப்படுத்துதல்

எடுத்துக்காட்டு 3.24

காரணிப்படுத்துக: x2 + 8x  + 15

தீர்வு


x2 + 8x  + 15 என்ற கோவை ax2 + bx + c என்ற வடிவத்தில் உள்ளது.

இங்கு  a = 1, b = 8 , c = 15

பெருக்குத் தொகை = a × c                 கூடுதல் = b

= 1 × 15 = 15                                                          b = 8

= x2 + 8x  + 15

= x2 + 3x  + 5x  + 15 ( நடு உறுப்பு 8 3x  + 5x  என பிரித்து எழுத )

= (x2 + 3x ) +  (5x + 15 )

= x (x + 3) +  5(x + 3)

(பொதுக் காரணி x + 3 வெளியே எடுக்க)

x2 + 8x  + 15 =  (x + 3) (x + 5)

(x + 3), (x + 5) ஆகியவை இரு காரணிகளாகும்.


சிந்திக்க 

x2 – 4 (x  – 2)  =  (x2 – 4 ) (x  – 2)  இது சரியா? தவறு எனில், சரி செய்க.


எடுத்துக்காட்டு 3.25

காரணிப்படுத்துக: 7c2 + 2c – 5

தீர்வு


ax2 + bx + c என்ற வடிவத்தில் உள்ளது.

இங்கு a = 7, b = 2 , c = –5

பெருக்குத் தொகை = a × c  =  7 × ( –5) = –35    கூடுதல் b= 2  

= 7c2 + 2c – 5

= 7c– 5c + 7c – 5 (  நடு உறுப்பு 2c  – 5c  + 7c  என பிரித்து எழுத )

= (7c– 5c) + (7c – 5)

= c(7c – 5) + 1(7c – 5) (பொதுக் காரணி 7c – 5 வெளியே எடுக்க

= (7c – 5)(c + 1)


இவற்றை முயல்க

பின்வருவனவற்றைக் காரணிப்படுத்துக

(1) 3y + 6 

(2) 10x2 + 15y2 

(3) 7m(m – 5) + 1(5 – m) 

(4) 64 – x2 

(5) x2 – 3x + 2 

(6) y2 – 4y – 32 

(7) p2 + 2p – 15 

(8) m2 + 14m + 48 

(9) x2 x – 90 

(10) 9x2 – 6x – 8


Tags : Algebra | Chapter 3 | 8th Maths இயற்கணிதம் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு கணக்கு.
8th Maths : Chapter 3 : Algebra : Factorisation Algebra | Chapter 3 | 8th Maths in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : இயற்கணிதம் : காரணிப்படுத்துதல் - இயற்கணிதம் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு கணக்கு : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : இயற்கணிதம்