இயற்கணிதம் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 3.9 (வரைபடங்கள்) | 8th Maths : Chapter 3 : Algebra
பயிற்சி 3.9
1. கோடிட்ட இடங்களை நிரப்புக:
(i) y = px , இங்கு p ∈ z என்ற நேர்க்கோடானது எப்போதும் ஆதி வழியாகச் செல்லும்.
(ii) X = 4 மற்றும் Y = – 4 என்ற கோடுகள் சந்திக்கும் புள்ளி __(4, −4)__
(iii) கொடுக்கப்பட்ட வரைபடத்தின் அளவுத்திட்டம்,
x அச்சின் மீது 1 செ.மீ = ___4__ அலகுகள்
y அச்சின் மீது 1 செ.மீ = ___−4__ அலகுகள்
2. சரியா தவறா எனக் கூறுக.
(i) (1,1) (2,2) (3,3) ஆகிய புள்ளிகள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும். விடை: சரி
(ii) y = –9x ஆதிப்புள்ளி வழியாகச் செல்லாது. விடை: தவறு
3. ஆய அச்சுகளை (2,0) மற்றும் (0,2) ஆகிய புள்ளிகளில் சந்திக்கும் கோடானது, (2,2) என்ற புள்ளி வழியாகச் செல்லுமா?
4. (4,–2) என்ற புள்ளி வழியாகச் செல்லும் கோடு Y அச்சை (0,2) என்ற புள்ளியில் சந்திக்கிறது. இந்த கோட்டின் மீது இரண்டாம் கால்பகுதியில் அமையும் புள்ளி ஏதேனும் ஒன்றைக் கூறுக.
5. P (5,3) Q(–3,3) R(–3,–4) மற்றும் S ஆகிய புள்ளிகள் ஒரு செவ்வகத்தை உருவாக்கும் எனில் புள்ளி S இன் ஆயத் தொலைவுகளைக் காண்க.
6. ஒரு கோடானது (6,0) மற்றும் (0,6) ஆகிய புள்ளிகள் வழியே செல்கிறது. மற்றொரு கோடானது (–3,0) மற்றும் (0,–3) வழியாக செல்கிறது எனில், இவற்றுள் எந்தெந்தப் புள்ளிகளை இணைத்தால் ஒரு சரிவகம் கிடைக்கும்?
7. (–3,7) (2,–4) மற்றும் (4,6) (–5,–7) என்ற சோடிப் புள்ளிகளை இணைத்து உருவாகும் கோடுகள் சந்திக்கும் புள்ளியைக் காண்க. மேலும் நேர்க்கோடுகள் ஆய அச்சுகளைச் சந்திக்கும் புள்ளிகளையும் காண்க.
8. கீழ்க்காணும் சமன்பாடுகளுக்கு வரைபடம் வரைக.
(i) x = –7
(ii) y = 6
9. கொடுக்கப்பட்ட சமன்பாடுகளுக்கு வரைபடம் வரைக.
(i) y = –3x
(ii) y = x – 4
(iii) y = 2x + 5
10. விடுபட்ட மதிப்புகளைக் காண்க.