Home | 8 ஆம் வகுப்பு | 8வது கணிதம் | வரைபடங்கள்: ஆய அச்சுகளுக்கு இணையான நேர்க்கோடுகள்

இயற்கணிதம் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு கணக்கு - வரைபடங்கள்: ஆய அச்சுகளுக்கு இணையான நேர்க்கோடுகள் | 8th Maths : Chapter 3 : Algebra

   Posted On :  21.10.2023 08:59 am

8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : இயற்கணிதம்

வரைபடங்கள்: ஆய அச்சுகளுக்கு இணையான நேர்க்கோடுகள்

ஒரு நேர்க்கோடானது X அச்சுக்கு இணையாக உள்ளது எனில், அக்கோடு X அச்சில் உள்ள ஒவ்வொரு புள்ளியிலிருந்தும் சம தொலைவில் இருக்கும். இதனை y = c எனக் குறிக்கின்றோம்.

8. ஆய அச்சுகளுக்கு இணையான நேர்க்கோடுகள் 

ஒரு நேர்க்கோடானது X அச்சுக்கு இணையாக உள்ளது எனில், அக்கோடு X அச்சில் உள்ள ஒவ்வொரு புள்ளியிலிருந்தும் சம தொலைவில் இருக்கும். இதனை y = c எனக் குறிக்கின்றோம்

ஒரு நேர்க்கோடானது Y அச்சுக்கு இணையாக உள்ளது எனில், அக்கோடு Y அச்சில் உள்ள ஒவ்வொரு புள்ளியில் இருந்தும் சம தொலைவில் இருக்கும். இதனை x = k எனக் குறிக்கின்றோம். (இங்கு c மற்றும் k ஆகியவை மாறிலிகள் ஆகும்)

எடுத்துக்காட்டு 3.43

X = 5 என்ற சமன்பாட்டிற்கு வரைபடம் வரைக 

தீர்வு:

X =5 என்பது y இன் எந்தவொரு மதிப்புக்கும் X இன் ஆயத்தொலைவு எப்போதும் 5 ஆகவே இருக்கும். எனவே, நாம் y இன் ஆயத்தொலைவிற்கு மதிப்பு கொடுத்து கீழ்க்கண்டவாறு அட்டவணைப்படுத்தலாம்.


x = 5 என்பது கொடுக்கப்பட்டுள்ளது (நிலையானது

y இக்கு ஏதேனும் சில மதிப்புகளை எடுத்துக்கொள்ளவும்

(5,–2) (5,–1) (5,0) (5,2) (5,3) ஆகியப் புள்ளிகளை வரைபடத்தாளில் குறித்து, அவற்றை இணைக்கவும். Y அச்சிலிருந்து 5 அலகுகள் தூரத்தில், Y அச்சுக்கு இணையாக ஒரு நேர்க்கோடு நமக்குக் கிடைக்கும்.


குறிப்பு 

i) x = 0 என்பது Y அச்சைக் குறிக்கிறது.

ii) y = 0 என்பது X அச்சைக் குறிக்கிறது.

சிந்திக்க 

(5, –10), (0,5), (5,20) ஆகிய புள்ளிகளில் எந்தெந்தப் புள்ளிகள் X = 5 என்ற நேர்க்கோட்டின் மீது அமைந்துள்ளன?

Tags : Algebra | Chapter 3 | 8th Maths இயற்கணிதம் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு கணக்கு.
8th Maths : Chapter 3 : Algebra : Graph: Line parallel to the coordinate axes Algebra | Chapter 3 | 8th Maths in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : இயற்கணிதம் : வரைபடங்கள்: ஆய அச்சுகளுக்கு இணையான நேர்க்கோடுகள் - இயற்கணிதம் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு கணக்கு : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : இயற்கணிதம்