தாவரவியல் - கூட்டுக்கனிகள் | 11th Botany : Chapter 4 : Reproductive Morphology of Angiosperm
கூட்டுக்கனிகள் (Multiple (or) composite fruits)
ஒரு முழு மஞ்சரியும் அதைத் தாங்கும் மஞ்சரிக்காம்பும் சேர்ந்து உருவாகும் பல்கூட்டுக் கனியே கூட்டுக்கனி எனப்படும். இதில் இரு வகைகள் உள்ளன. (படம் 4.33)
அ) கூட்டு சதைக்கனி (Sorosis) - கதிர் அல்லது மடல் கதிர் வகை மஞ்சரியிலிருந்து உருவாகும் கூட்டு சதைக்கனியாகும். சதைப்பற்று மிக்க பூவிதழ்களால் கனிகள் பிணைந்து அவற்றைத் தாங்கும் அச்சும் சதைப்பற்றும் சாறும் மிக்கதாக மாறி முழு மஞ்சரியும் நெருக்கமாக அமைந்த ஒரு தொகுப்பாக உருவாகிறது. எடுத்துக்காட்டு: அன்னாசி, பலா.
உங்களுக்குத் தெரியுமா?
1. ஆர்க்டிக் துருவப்பகுதியில் காணப்படும் லூபினஸ் ஆர்க்டிக்கஸ் (ஃபேபேஸி குடும்பம்) விதை சுமார் 10,000 தெரியுமா? வருடங்கள் வரை தொடர்ந்து உறக்க நிலையில் இருந்து, பின்னர் முளைக்கும் திறன் பெற்ற ஓர் பழமையான விதையாகும்.
2. ஃபோனிக்ஸ் டாக்டிலிஃபெரா (பேரிச்சை மரம்) தாவரத்தின் விதை சாக்கடலுக்கு (Dead sea) அருகில் உள்ள அரச ஹெரோடு அரண்மனையில் 20,000 ஆண்டுகளாக உயிருடன் முளைக்கும் திறன்பெற்ற நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
3. மொரிங்கா ஒலிய்ஃபெரா (முருங்கை) தாவரத்தின் விதைப்பொடி, நீரைத் தூய்மைப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.
உங்களுக்குத் தெரியுமா?
• லொடாய்சியா மால்டிவிகா தாவரத்தின் விதை உலகத்திலேயே மிகவும் பெரிய விதையாகும். முதிர்ந்த கனியானது 40 - 50 செ.மீ. விட்டத்தையும், 15 - 30 கிலோகிராம் எடையையும் கொண்டது.
• பலானைட்டிஸ் ஏஜிப்டியாக்கா மற்றும் டிரைகோனெல்லா ஃபொய்னம் கிரேக்கம் தாவரங்களின் கனிகளில் கருத்தரிக்க உதவும்
ஹார்மோன் புரோஜெஸ்டிரோனைக் கொண்டுள்ளன.
ஆ) கோளப்பூத்தளக்கனி (Syconus)
- ஹைப்பந்தோடியம் மஞ்சரியிலிருந்து தோன்றும்
ஒரு வகை கூட்டுக்கனியாகும். இந்த மஞ்சரியின் பூத்தளம் தொடர்ந்து வளர்ந்து சதைப்பற்றுடன்
கூடிய கனியாக மாறிப் பல உண்மைக்கனிகள் அல்லது உறை ஒட்டா வெடியாக்கனிகளைச் சூழ்ந்து
காணப்படுகிறது. உறை ஒட்டா வெடியாக்கனிகள் ஹைப்பந்தோடியத்தின் பெண் மலரிலிருந்து உருவாகிறது.
எடுத்துக்காட்டு: ஃபைகஸ்.