Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | சிறப்பு வகை மஞ்சரி

மஞ்சரி வகைகள் - சிறப்பு வகை மஞ்சரி | 11th Botany : Chapter 4 : Reproductive Morphology of Angiosperm

11 வது தாவரவியல் : அலகு 4 : இனப்பெருக்க புற அமைப்பியல்

சிறப்பு வகை மஞ்சரி

எந்த ஒரு வகையான வளர்ச்சி முறையையும் காட்ட இயலாத மஞ்சரிகள், சிறப்பு வகை மஞ்சரிகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மலர்களின் கிளைத்தல், அமைந்திருக்கும் விதம், மற்றும் சில சிறப்பு அமைப்புகளின் அடிப்படையில் மஞ்சரிகளை வகைப்படுத்தலாம்.

I. வரம்பற்ற வளர்ச்சி (ரசிமோஸ்)

II. வரம்புடைய வளர்ச்சி (சைமோஸ்)

III. கலப்பு வகை மஞ்சரி (வரம்புடைய, வரம்பற்ற வளர்ச்சி உடைய வகைகளின் கலவையாக இருக்கும் சில தாவரங்களின் மஞ்சரிகள் ஆகும்).

IV. சிறப்பு வகை மஞ்சரிகள் (மேற்காண் மஞ்சரி வகைகளின் கீழ் வராத மஞ்சரிகள் ஆகும்).



சிறப்பு வகை மஞ்சரி:

எந்த ஒரு வகையான வளர்ச்சி முறையையும் காட்ட இயலாத மஞ்சரிகள், சிறப்பு வகை மஞ்சரிகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

1. சையாத்தியம்: முழு மலர் மஞ்சரியும் ஒரு தனி மலரைப் போல் காணப்படும். சிறிய ஒருபால் மலர்கள் கோப்பை வடிவவட்டப் பூவடிச்செதில் (Involucre) சூழக் காணப்படும். ஆண் மலர்கள் ஸ்கார்பியாய்டு முறையில் அமைந்திருக்கும். பெண்மலர் தனித்து, மையப்பகுதியில் நீண்ட பூக்காம்புடன் காணப்படும். ஆண் மலர்கள் மகரந்தத்தாள் மட்டும், பெண் மலர் சூலகவட்டம் மட்டுமே கொண்டவை. மஞ்சரி ஆரச்சீராகவோ (யூஃபோர்பியா), இருபக்கச்சீராகவோ (பெடிலேந்தஸ்) காணப்படும். தேன் சுரப்பி வட்ட பூவடிச்செதிலின்மேல் (Involucre) காணப்படும். 


2. ஹைபந்தோடியம் : உள்ளீடற்ற கோளவடிவ பூத்தளத்தின் உட்சுவரில் ஒரு பால் மலர்கள் அமைந்த மஞ்சரி. வரிசையான பூவடிச்செதில்களால் சூழப்பட்ட சிறிய திறப்பான ஆஸ்டியோல் தவிர பூத்தளம் மூடப்பட்டிருக்கும். ஆண்மலர்கள் திறப்பருகில் மேற்புறமும், பெண் மலர்கள், பால் நடுநிலை (பாலிலா) மலர்கள் நடுவிலிருந்து அடிப்புறத்திலும், கலந்து காணப்படும். எடுத்துக்காட்டு: ஃபைகஸ் சிற்றினங்கள் (ஆலமரம், அத்தி, அரசமரம்).

3. சீனாந்தியம்: வட்டமான தட்டுப்போன்ற திறந்த பூத்தளத்தின் மீது பெண்மலர்கள் நடுவிலும், ஆண்மலர்கள் விளிம்பிலும் காணப்படும். எடுத்துக்காட்டு டார்ஸ்டீனியா.

 


Tags : Types of Inflorescence மஞ்சரி வகைகள்.
11th Botany : Chapter 4 : Reproductive Morphology of Angiosperm : Special Inflorescence Types of Inflorescence in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 4 : இனப்பெருக்க புற அமைப்பியல் : சிறப்பு வகை மஞ்சரி - மஞ்சரி வகைகள் : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 4 : இனப்பெருக்க புற அமைப்பியல்