Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | இயற்கணித முற்றொருமைகள் (Algebraic Identies)

விளக்கம், எடுத்துக்காட்டு, தீர்வு | இயற்கணிதம் | கணக்கு - இயற்கணித முற்றொருமைகள் (Algebraic Identies) | 9th Maths : UNIT 3 : Algebra

   Posted On :  24.09.2023 11:20 am

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : இயற்கணிதம்

இயற்கணித முற்றொருமைகள் (Algebraic Identies)

ஒரு சமன்பாடு, அதிலுள்ள மாறிகளின் எம்மதிப்புக்கும் பொருந்துமாறு இருக்குமானால் அச்சமன்பாடு ஒரு முற்றொருமை எனப்படும்.

இயற்கணித முற்றொருமைகள் (Algebraic Identies)

ஒரு சமன்பாடு, அதிலுள்ள மாறிகளின் எம்மதிப்புக்கும் பொருந்துமாறு இருக்குமானால் அச்சமன்பாடு ஒரு முற்றொருமை எனப்படும்.

பின்வரும் முற்றொருமைகளை நாம் முன்பே கற்றிருக்கின்றோம்.

(1) (a + b)2a2 + 2ab + b2 

(2) (ab)2a2 − 2ab + b2 

(3) (a + b)(ab) ≡ a2b2 

(4) (x + a)(x + b) ≡ x2 + (a + b)x + ab


குறிப்பு 



எடுத்துக்காட்டு 3.16

பின்வருவனவற்றை முற்றொருமைகளைப் பயன்படுத்தி விரித்தெழுதுக

(i) (3x + 4y)2 

(ii) (2a – 3b)2 

(iii) (5x + 4y) (5x – 4y

(iv) (m + 5)(m − 8) 

தீர்வு

(i) (3x + 4y)2

(3x + 4y)2 = (3x)2 + 2(3x) (4y) + (4y)2 [ஏனெனில், (a + b)2 = a2 + 2ab + b2

[a = 3x, b = 4y எனப் பிரதியிட]

= 9x2 + 24xy + 16y2 

(ii) (2a – 3b)2 

(2a – 3b)2 = (2a)2 − 2(2a)(3b) + (3b)2        [ஏனெனில், (xy)2 = x2 – 2xy + y2

[x = 2a, y = 3b எனப் பிரதியிட]

= 4a2 − 12ab + 9b2

(iii) (5x + 4y) (5x − 4y)

(5x + 4y)(5x − 4y) = (5x)2 − (4y)2        [ஏனெனில், (a + b)(ab) = a2b2]

[a = 5x,  b = 4y எனப் பிரதியிட]

= 25x2 − 16y2 

(iv) (m + 5) (m − 8)

(m + 5) (m − 8) = m2 + (5 − 8)m − (5)(8)        [ஏனெனில், (x + a)(xb) = x2 + (ab)xab]

[ x = m, a = 5, b = 8 எனப் பிரதியிட]

= m2 – 3m − 40 


1. (a + b + c)2 என்ற மூவுறுப்புக் கோவையின் விரிவாக்கம் (Expansion of Trinomial)

 (x + y)2 = x2 + 2.xy + y2 என்பது நாம் அறிந்ததே.


 x = a + b, y = c எனப் பிரதியிட,

எனவே, (a + b + c)2 = (a + b)2 + 2(a + b)(c)+c2

= a2 + 2ab + b2 + 2ac +2bc + c2

= a2 + b2 + c2 + 2ab + 2bc +2ca 

எனவே, (a + b + c)2a2 + b2 + c2 + 2ab + 2bc + 2ca


எடுத்துக்காட்டு 3.17

 (ab + c)2 இன் விரிவு காண்க

தீர்வு

 (a + b+c)2 இன் விரிவில்b ‘− b' எனப் பிரதியிட,

முற்றொருமை (a + b+c)2 = a2 + b2 + c2 + 2ab +2bc +2ca இன் படி

(a + (−b) + c)2 = a2 +(−b)2 + c2 + 2a(−b) + 2(−b)c + 2ca 

= a2 + b2 + c2 − 2ab − 2bc +2ca


முன்னேற்றத்தைச் சோதித்தல்

பின்வரும் முற்றொருமைகளை விரிவுபடுத்திச் சரிபார்க்க.

(a + b + c)2 = (−a−b− c)2

(−a + b + c)2 = (abc)2

(ab+c)2 = (−a + bc)2

(a + bc)2 = (− a b + c)2


எடுத்துக்காட்டு 3.18

(2x + 3y + 4z)2 இன் விரிவு காண்க

தீர்வு

முற்றொருமையின்படி,

(a + b + c)2 = a2 + b2 + c2 + 2ab + 2bc + 2ca

a = 2x, b = 3y மற்றும் c = 4z எனப் பிரதியிட,

(2x + 3y + 4z)2 = (2x)2 + (3y)2 + (4z)2 + 2(2x)(3y) + 2(3y)(4z) + 2(4z)(2x)

 = 4x2 + 9y2 + 16z2 + 12xy + 24yz + 16xz 


எடுத்துக்காட்டு 3.19

 3m + 2n – 4l பக்க அளவு கொண்ட சதுரத்தின் பரப்பளவு காண்க.

தீர்வு

 a = 3m

 b = 2n 

 c = −4l

எனப் பிரதியிட,

சதுரத்தின் பரப்பளவு = பக்கம் × பக்கம் 

= (3m + 2n – 4l) × (3m + 2n – 4l)

= (3m + 2n – 4l)2

 (a + b+c)2 = a2 + b2 + c2 + 2ab + 2bc +2ca என்பது நாம் அறிந்ததே.

 [3m +2n + (−4l)]2 = (3m)2 + (2n)2 + (−4l)2 +2(3m)(2n) + 2(2n)(−4l) +2(−4l)(3m)

 = 9m2 + 4n2 + 16l2 + 12mn − 16ln – 24lm 

எனவே, சதுரத்தின் பரப்பளவு

 = [9m2 + 4n2 + 16l2 + 12mn – 16ln – 24lm] சதுர அலகுகள் 


2. மூன்று ஈருறுப்புக் கோவைகளின் பெருக்கற்பலனை உள்ளடக்கிய முற்றொருமைகள் (Identities involving Product of Three Binomials) 

(x + a) (x + b) (x + c) = [(x+a) (x + b)] (x + c)

= [x2 + (a + b)x + ab] (x + c

= x2(x) + (a + b)(x)(x) + abx + x2c + (a + b)(x)c + abc 

= x3 + ax2 + bx2 + abx + cx2 + acx + bcx + abc 

= x3 + (a + b + c)x2 + (ab + bc + ca)x + abc

எனவே,

  (x + a)(x + b)(x + c) ≡ x3 + (a + b + c)x2 + (ab + bc + ca)x + abc


எடுத்துக்காட்டு 3.20

கீழ்க்காண்பனவற்றை விரித்தெழுதுக

(i) (x +5)(x + 6) (x +4)

(ii) (3x – 1)(3x+ 2) (3x − 4) 

தீர்வு

முற்றொருமை (x + a)(x + b)(x + c) ≡ x3 + (a + b + c)x2 + (ab + bc + ca)x + abc           ... (1)

(i) (x + 5)(x + 6)(x +4) 

a = 5

b = 6

c = 4

என (1)ல் பிரதியிட,

 = x3 + (5+6+ 4)x2 + (30 +24 + 20)x + (5)(6)(4)

= x3 + 15x2 + 74x + 120

(ii) (3x − 1)(3x + 2)(3x − 4)

x => 3x, a => −1, b => 2, c=> −4 என (1)ல் பிரதியிட,

= (3x)3 + (−1+2– 4) (3x)2 + (−2 − 8 + 4)(3x) + (−1)(2)(−4) 

= 27x3 + (−3)9x2 + (−6)(3x) + 8

= 27x3 – 27x2 – 18x + 8


3. (x + y)3 மற்றும் (xy)3ன் விரிவாக்கம்

(x + a) (x + b)(x + c) ≡ x3 + (a + b + c)x2 + (ab + bc + ca)x + abc

கீழ்க்காணும் முற்றொருமையில், a = b = c = y எனப் பிரதியிட

நாம் பெறுவது,

 (x + y) (x + y)(x + y) = x3 + (y + y + y)x2 + (yy + yy + yy)x + yyy

= x3 + (3y)x2 + (3y2)x + y3 

எனவே, (x + y)3 x3 + 3x2y + 3xy2 + y3 

அல்லது (x + y)3 x3 + y3 + 3xy(x + y)

 yக்குy, எனப் பிரதியிட

 (xy)3x3 − 3x2y + 3.xy2y3 அல்லது

 (xy)3x3y3 – 3xy(xy)


எடுத்துக்காட்டு 3.21

 (5a – 3b)3 விரித்தெழுதுக.

தீர்வு

 (xy)3 = x3 − 3x2y + 3xy2y3 என்பது நாம் அறிந்தது.

(5a – 3b)3 = (5a)3 – 3(5a)2(3b) + 3(5a)(3b)2 − (3b)3

= 125a3 − 3(25a2) (3b) + 3(5a) (9b2) − (3b)3

= 125a3 – 225a2b + 135ab2 – 27b3 

  x3 + y3 + z3 − 3xyz ≡ (x + y + z)(x2 + y2 + z2xyyzzx)

மேற்கண்ட முற்றொருமையை வலப்புறமுள்ள கோவைகளைப் பெருக்கிச் சரிபார்க்கலாம்.

குறிப்பு:

• (x + y + z) = 0 எனில், x3 + y3 + 23 = 3.xyz ஆகும்.

கூட்டல், கழித்தல், பெருக்கல் போன்றவற்றைச் சில முற்றொருமைகளில் பயன்படுத்துதல் (நிரூபணமின்றி). 

(i) x3 + y3 ≡ (x + y) 3 – 3xy(x + y

(ii) x3y3 ≡ (xy) 3 + 3xy(xy


எடுத்துக்காட்டு 3.22

 (2x + 3y + 4z) (4x2 + 9y2 + 16z2 – 6.xy – 12yz – 8zx) இன் பெருக்கற்பலனைக் காண்க

தீர்வு

  (a + b + c) (a2 + b2 + c2abbcca) = a3 + b3 + c3 −3abc என்பது நாம் அறிந்ததே

 (2x +3y + 4z) (4x2 + 9y2 +16z2 − 6xy – 12yz – 8zx)

= (2x)3 + (3y)3 + (4z)3 – 3(2x) (3y)(4z)

= 8x3 + 27y3 +64z3 – 72xyz


எடுத்துக்காட்டு 3.23

முற்றொருமையைப் பயன்படுத்தி 103 − 153 + 53 இன் மதிப்பு காண்க

தீர்வு

முற்றொருமையின்படி, a + b + c = 0, எனில் a3 + b3 + c3 = 3abc

a = 10, b = −15, c = 5 எனப் பிரதியிட

இங்கு , a + b+ c = 10 −15 + 5 = 0 

103 + (−15)3 + 53 = 3(10)(−15)(5) 

103−153 +53 = − 2250

Tags : Explanation, Example Solved Problems | Algebra | Maths விளக்கம், எடுத்துக்காட்டு, தீர்வு | இயற்கணிதம் | கணக்கு.
9th Maths : UNIT 3 : Algebra : Algebraic Identities Explanation, Example Solved Problems | Algebra | Maths in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : இயற்கணிதம் : இயற்கணித முற்றொருமைகள் (Algebraic Identies) - விளக்கம், எடுத்துக்காட்டு, தீர்வு | இயற்கணிதம் | கணக்கு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : இயற்கணிதம்