கேள்வி பதில்கள், தீர்வுகள் | இயற்கணிதம் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 3.10 | 8th Maths : Chapter 3 : Algebra

   Posted On :  21.10.2023 09:36 am

8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : இயற்கணிதம்

பயிற்சி 3.10

8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : இயற்கணிதம்: பயிற்சி 3.10 : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 3.10


பல்வகைத் திறனறிப் பயிற்சிக் கணக்குகள் 


1. மூன்று எண்களின் கூடுதல் 58. இதில் இரண்டாவது எண்ணானது முதல் எண்ணின் ஐந்தில் இரண்டு பங்கின் மூன்று மடங்கு ஆகும். மூன்றாவது எண்ணானது முதல் எண்ணை விட 6 குறைவு எனில், அந்த மூன்று எண்களையும் காண்க.



2. ABC என்ற முக்கோணத்தில் B என்பது A இன் மூன்றில்  இரண்டு பங்கு ஆகும். C என்பது, A விட 20 அதிகம் எனில், அந்த மூன்று கோணங்களின் அளவுகளைக் காண்க.



3. ஓர் இரு சமபக்க முக்கோணத்தில் சம பக்கங்கள் முறையே 5y – 2 மற்றும் 4y + 9 அலகுகள் ஆகும். அதன் மூன்றாவது பக்கம் 2y + 5 அலகுகள் எனில் y இன் மதிப்பையும், முக்கோணத்தின் சுற்றளவையும் காண்க.



4. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் கோணம் XOZ மற்றும் கோணம் ZOY ஆகியவை நேர்க்கோட்டில் அமையும் அடுத்துள்ள கோணங்கள் எனில் x இன் மதிப்பைக் காண்க




5. கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களுக்கு வரைபடம் வரைக.


வரைபடமானது ஒரு நேர்க்கோட்டு அமைப்பைக் குறிக்கின்றதா?



மேற்சிந்தனைக் கணக்குகள் 


6. ஏறு வரிசையில் எடுத்துக் கொள்ளப்பட்ட மூன்று அடுத்தடுத்த முழுக்கள் முறையே 2,3 மற்றும் 4 ஆல் பெருக்கிக் கூட்டினால் 74 கிடைக்கும் எனில், அந்த மூன்று எண்களையும் காண்க.



7. ஒரு களப் பயணத்திற்கு 331 மாணவர்கள் சென்றனர். ஆறு பேருந்துகள் முழுமையாக நிரம்பின. 7 மாணவர்கள் மட்டும் ஒரு வேனில் பயணிக்க வேண்டியதாயிற்று எனில், ஒவ்வொரு பேருந்திலும் எத்தனை மாணவர்கள் இருந்தனர்?



8. ஒரு தள்ளு வண்டி வியாபாரி, சில கரிக்கோல்கள் (Pencils) மற்றும் பந்துமுனை எழுதுகோல்கள் (Ball point pens) என மொத்தம் 22 பொருள்களை வைத்திருக்கிறார். ஒரு குறிப்பிட்ட நாளில், அவரால் அனைத்துக் கரிக்கோல்களையும் பந்துமுனை பேனாக்களையும் விற்க முடிந்தது. கரிக்கோல்கள் ஒவ்வொன்றும் ₹15 இக்கும், பந்துமுனை பேனாக்கள் ஒவ்வொன்றும் ₹20 இக்கும் விற்பனை செய்த பிறகு அந்த வியாபாரியிடம் ₹380 இருந்தது எனில், அவர் விற்ற கரிக்கோல்களின் எண்ணிக்கை யாது?



9. y = x,  y = 2x,  y= 3x மற்றும் y = 5x ஆகிய சமன்பாடுகளின் வரைபடங்களை ஒரே வரைபடத்தாளில் வரைக. இந்த வரைபடங்களில் ஏதேனும் சிறப்பை உங்களால் காண முடிகிறதா?



10. ஒரு குவிவு பல கோணத்தின் கோணங்களின் எண்ணிக்கையையும், பக்கங்களின் எண்ணிக்கையையும் கவனத்தில் கொள்க. கீழேக்கொடுக்கப்பட்டுள்ளது போல் அட்டவணைப்படுத்துக.


பலகோணத்தின் கோணங்களின் எண்ணிக்கைக்கும் பக்கங்களின் எண்ணிக்கைக்கும் இடையே உள்ள தொடர்பை வரைப்படம் மூலம் விளக்குக.


Tags : Questions with Answers, Solution | Algebra | Chapter 3 | 8th Maths கேள்வி பதில்கள், தீர்வுகள் | இயற்கணிதம் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு கணக்கு.
8th Maths : Chapter 3 : Algebra : Exercise 3.10 Questions with Answers, Solution | Algebra | Chapter 3 | 8th Maths in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : இயற்கணிதம் : பயிற்சி 3.10 - கேள்வி பதில்கள், தீர்வுகள் | இயற்கணிதம் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு கணக்கு : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : இயற்கணிதம்