Home | 12 ஆம் வகுப்பு | 12வது வேதியியல் | தொகுதி 16 (ஆக்ஸிஜன் தொகுதி) தனிமங்கள்

வளம், இயற் பண்புகள் | P-தொகுதி தனிமங்கள் -II | வேதியியல் - தொகுதி 16 (ஆக்ஸிஜன் தொகுதி) தனிமங்கள் | 12th Chemistry : UNIT 3 : p-Block Elements-II

   Posted On :  18.07.2022 12:50 am

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 3 : P-தொகுதி தனிமங்கள் -II

தொகுதி 16 (ஆக்ஸிஜன் தொகுதி) தனிமங்கள்

16ஆம் தொகுதியைச் சார்ந்த தனிமங்கள் சால்கோஜன்கள் அல்லது தாதீனிகள் என அழைக்கப்படுகின்றன.ஏனெனில், பெரும்பாலான தாதுக்கள் ஆக்சைடுகளாக அல்லது சல்பைடுகளாக உள்ளன.

தொகுதி 16 (ஆக்ஸிஜன் தொகுதி) தனிமங்கள்


வளம்:

16ஆம் தொகுதியைச் சார்ந்த தனிமங்கள் சால்கோஜன்கள் அல்லது தாதீனிகள் என அழைக்கப்படுகின்றன. ஏனெனில், பெரும்பாலான தாதுக்கள் ஆக்சைடுகளாக அல்லது சல்பைடுகளாக உள்ளன. முதல் தனிமமான ஆக்சிஜன் மிக அதிக வளம் கொண்ட தனிமமாகும், இது காற்றில் டை ஆக்ஸிஜனாகவும் (20 % நிறை, மற்றும் கனஅளவுச் சதவீதத்திற்கும் அதிகமாக) ஆக்சைடுகளாக சேர்ம நிலையிலும் காணப்படுகிறது. புவிப்பரப்பில் ஆக்சிஜனும், சல்பரும் முறையே 46.6 % & 0.034% சதவீத நிறையை உருவாக்குகின்றன. சல்பர் தனிமமானது சல்பேட்டுகளாகவும் (ஜிப்சம், எப்சம் போன்றவை...) சல்பைடுகளாகவும் (கலீனா, ஜிங்க் பிளண்ட் போன்றவை...) காணப்படுகிறது. இது எரிமலைச் சாம்பலிலும் காணப்படுகிறது. இத்தொகுதியைச் சார்ந்த மற்ற தனிமங்கள் மிகக் குறைந்தளவே கிடைக்கின்றன மேலும் இவை செலீனைடுகள் , டெல்லூரைடுகளாக சல்பைடு தாதுக்களுடன் சேர்ந்து கிடைக்கின்றன. 


இயற் பண்புகள்:

16 ஆம் தொகுதியைச் சார்ந்த தனிமங்களின் இயற்பண்புகள் கீழே உள்ள அட்டவணையில் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.

அட்டவணை 3.2 : 16 ஆம் தொகுதித் தனிமங்களின் சில இயற்பண்புகள் 



Tags : Occurrence, Physical properties | p-Block Elements-II | Chemistry வளம், இயற் பண்புகள் | P-தொகுதி தனிமங்கள் -II | வேதியியல்.
12th Chemistry : UNIT 3 : p-Block Elements-II : Group 16 (Oxygen group) elements Occurrence, Physical properties | p-Block Elements-II | Chemistry in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 3 : P-தொகுதி தனிமங்கள் -II : தொகுதி 16 (ஆக்ஸிஜன் தொகுதி) தனிமங்கள் - வளம், இயற் பண்புகள் | P-தொகுதி தனிமங்கள் -II | வேதியியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 3 : P-தொகுதி தனிமங்கள் -II