Home | 12 ஆம் வகுப்பு | 12வது வேதியியல் | பாஸ்பரஸின் பண்புகள் மற்றும் பயன்கள்
   Posted On :  18.07.2022 12:48 am

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 3 : P-தொகுதி தனிமங்கள் -II

பாஸ்பரஸின் பண்புகள் மற்றும் பயன்கள்

பாஸ்பரஸ் அதிக வினைத்திறன் கொண்டது. இது பின்வரும் முக்கிய வேதிப்பண்புகளைப் பெற்றுள்ளது.

பாஸ்பரஸின் பண்புகள்

பாஸ்பரஸ் அதிக வினைத்திறன் கொண்டது. இது பின்வரும் முக்கிய வேதிப்பண்புகளைப் பெற்றுள்ளது.

ஆக்ஸிஜனுடன் வினை: மஞ்சள் நிற பாஸ்பரஸ், காற்றில் தானாக தீப்பற்றி எரிந்து பாஸ்பரஸ் பென்டாக்சைடு வெண்புகையைத் தருகிறது. சிவப்பு பாஸ்பரஸும் வெப்பப்படுத்தும் போது ஆக்ஸிஜனுடன் வினைப்பட்டு பாஸ்பரஸ் ட்ரை ஆக்ஸைடு அல்லது பாஸ்பரஸ் பென்டாக்சைடைத் தருகிறது.


குளோரினுடன் வினை: பாஸ்பரஸ், குளோரினுடன் வினைப்பட்டு ட்ரை மற்றும் பென்டா குளோரைடுகளை தருகிறது.அறை வெப்பநிலையில் மஞ்சள் பாஸ்பரஸ் தீவிரமாக வினைபுரிகிறது, ஆனால் சிவப்பு பாஸ்பரஸ் வெப்பப்படுத்தும்போது மட்டும் வினைபுரிகிறது.


P4 + 6C12 → 4PC13

பாஸ்பரஸ் ட்ரை குளோரைடு

P4 + 10C12 → 4PC13

பாஸ்பரஸ் பென்டாகுளோரைடு

காரங்களுடன் வினை : மஞ்சள் பாஸ்பரஸை, மந்த வாயுச்சூழலில் காரங்களுடன் சேர்த்து கொதிக்கவைக்கும்போது பாஸ்பீன் வாயுவை வெளியேற்றுகிறது. இதில் பாஸ்பரஸ் ஒடுக்கும் காரணியாக செயல்படுகிறது.


P4 + 3NaOH + 3H2O → 3NaH2PO2 + PH3

                                சோடியம் ஹைப்போ பாஸ்பைட் பாஸ்பீன்

நைட்ரிக் அமிலத்துடன் வினை : பாஸ்பரஸை அடர் நைட்ரிக் அமிலத்துடன் வினைப்படுத்தும்போது, பாஸ்பாரிக் அமிலமாக ஆக்ஸிஜனேற்றமடைகிறது. இவ்வினையில் படிக அயோடின் வினைவேகமாற்றியாக செயல்படுகின்றன.


P4 + 20HNO3 → 4H3PO4 + 20NO2 + 4H2O

                     ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலம்

உலோகங்களுடன் வினை: Ca மற்றும் Mg போன்ற உலோகங்களுடன் பாஸ்பரஸ் வினைப்பட்டு பாஸ்பைடுகளைத் தருகிறது. சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற உலோகங்கள் வீரியமுடன் வினைபுரிகின்றன.


P4 + 6Mg → 2Mg3P2

         மெக்னீசியம் பாஸ்பைடு

P4 + 6Ca → 2Ca3P2

            கால்சியம் பாஸ்பைடு

P4 + 12Na → 4Na3P . 

      சோடியம் பாஸ்பைடு


பாஸ்பரஸின் பயன்கள்: 

1. தீப்பெட்டிகளில் சிவப்பு பாஸ்பரஸ் பயன்படுகிறது. 

2. இது, பாஸ்பரஸ் வெண்கலம் போன்ற உலோகக் கலவைகள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. 


12th Chemistry : UNIT 3 : p-Block Elements-II : Properties and Uses of phosphorus in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 3 : P-தொகுதி தனிமங்கள் -II : பாஸ்பரஸின் பண்புகள் மற்றும் பயன்கள் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 3 : P-தொகுதி தனிமங்கள் -II