தயாரித்தல், பண்புகள், பயன்கள் - ஹைட்ரோகுளோரிக் அமிலம் | 12th Chemistry : UNIT 3 : p-Block Elements-II
ஹைட்ரோகுளோரிக் அமிலம்
ஆய்வகத் தயாரிப்பு
சோடியம் குளோரைடு மற்றும் அடர் கந்தக அமிலத்தை வினைபடுத்தி இது தயாரிக்கப்படுகிறது.
NaC1 + H2SO4 → NaHSO4 + HC1
NaHSO4 + NaC1 → Na2SO4 + HC1
HC1 வாயுவினை அடர் கந்தக அமிலத்தின் வழியாக செலுத்தி உலர் ஹைட்ரோகுளோரிக் அமிலம் பெறப்படுகிறது.
பண்புகள்
ஹைட்ரஜன் குளோரைடு ஒரு நிறமற்ற மூக்கைத் துளைக்கும் நெடியுடைய வாயு. எளிதாக நிறமற்ற திரமாகிறது (கொதிநிலை 189K) மற்றும் வெண்மை நிற திண்ம படிகமாக உறைகிறது (உருகுநிலை 159K). இது நீரில் அதிகளவு கரைகிறது.
HC1 (g) + H2O (1) → H3O+ + C1-
வேதிப் பண்புகள்
அனைத்து அமிலங்களைப் போலவே இது உலோகங்களுடன் ஹைட்ரஜன் வாயுவை வெளியேற்றுகிறது. மேலும் கார்பனேட் மற்றும் பைகார்பனேட் உப்புகளிலிருந்து கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுகிறது.
Zn + 2HC1 → ZnC12 + H2
Mg + 2HC1 → MgC12 + H2
Na2CO3 + 2HC1 → 2NaC1 + CO2 + H2
CaCO3 + 2HC1 → CaC12 + CO2 + H2
NaHCO3 + 2HC1 → 2NaC1 + CO2 + H2O
சோடியம் சல்பைட்டிலிருந்து கந்தக டை ஆக்சைடை வெளியேற்றுகிறது.
Na2SO3 + 2HC1 → 2NaC1 + H2O + SO2
மூன்று பங்கு அடர் ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் ஒரு பங்கு அடர் நைட்ரிக் அமிலம் கலந்த கலவை இராஜதிராவகம் என அழைக்கப்படுகிறது. இது தங்கம் மற்றும் பிளாட்டினம் போன்றவற்றை கரைக்கப் பயன்படுகிறது.
Au + 4H+ + NO3- + 4C1- → AuC14- + NO + 2H2O
3Pt + 16H+ + 4NO3- + 18C1- → 3[PtC16]2- + 4NO + 8H2O
ஹைட்ரோ குளோரிக் அமிலத்தின் பயன்கள்
1. குளோரின், அம்மோனியம் குளோரைடு, ஸ்டார்ச்சிலிருந்து குளுக்கோஸ் போன்றவை தயாரிப்பில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் பயன்படுகிறது.
2. எலும்பிலிருந்து பசை தயாரிக்கப்ப பயன்படுகிறது.