பாஸ்பரஸின் ஆக்ஸைடுகள் மற்றும் ஆக்ஸோஅமிலங்களின் அமைப்பு வாய்ப்பாடுகள்
பாஸ்பரஸ் ஆனது பாஸ்பரஸ் ட்ரை ஆக்சைடு, மற்றும் பாஸ்பரஸ் பென்டாக்சைடு ஆகியவற்றை உருவாக்குகிறது. பாஸ்பரஸ் ட்ரை ஆக்சைடில் நான்கு பாஸ்பரஸ் அணுக்கள் நான்முகியின் மூலைகளிலும், ஆறு ஆக்ஸிஜன் அணுக்கள் விளிம்புகளிலும் அமைந்துள்ளன. P-O பிணைப்பு நீளம் 165.6pm இது P-O (184 pm) ஒற்றை பிணைப்பின் நீளத்தைவிட குறைவாகும். pr-dr பிணைப்பின் காரணமாக இதில் குறிப்பிடத்தகுந்தளவு இரட்டை பிணைப்புத் தன்மை உருவாகிறது.
P4O10 மூலக்கூறில் ஒவ்வொரு பாஸ்பரஸ் அணுவும் மூன்று ஆக்ஸிஜன் அணுக்களுடன் மூன்று பிணைப்புகளையும், கூடுதலாக ஒரு ஆக்ஸிஜன் அணுவுடன் ஈதல் சகப்பிணைப்பையும் உருவாக்குகின்றன. முனைய P-O பிணைப்பின் நீளம் 143 pm, இது எதிர்பார்க்கப்பட்ட ஒற்றை பிணைப்பு நீளத்தைவிட குறைவான மதிப்பாகும். ஆக்ஸிஜன் அணுவின் நிரம்பிய p ஆர்பிட்டால்களும், பாஸ்பரஸின் காலியான d ஆர்பிட்டாலும் மேற்பொதிவதே இதற்கு காரணமாக இருக்கலாம்.
பாஸ்பரஸின் ஆக்ஸோஅமிலங்களின் அமைப்பு வாய்ப்பாடுகள்:
பாஸ்பரஸின் ஆக்ஸோஅமிலங்களின் தயாரிப்பு: