வளம், இயற் பண்புகள் | P-தொகுதி தனிமங்கள் -II | வேதியியல் - தொகுதி 17 (ஹேலஜன் தொகுதி) | 12th Chemistry : UNIT 3 : p-Block Elements-II
தொகுதி 17 (ஹேலஜன் தொகுதி)
இவைகள் அதிக வினைத்திறன் உடையதால் இணைந்த நிலையில் மட்டுமே காணப்படுகின்றன. புளூரினின் முக்கியமான மூலம் புளூரோஸ்பார் அல்லது புளூரைட். புளூரினின் பிற தாதுக்கள் கிரையோலைட் புளூரோபடைட். குளோரினின் முக்கியமான மூலம் கடல் நீரில் காணப்படும் சோடியம் குளோரைடாகும். கடல் நீரில் புரோமைடுகள் மற்றும் அயோடைடுகளும் காணப்படுகின்றன.
இயற்புண்புகள்
17ஆம் தொகுதியைச் சேர்ந்த தனிமங்களின் பொதுப் பண்புகள் பின்வருமாறு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.
அட்டவணை 3.3 17ஆம் தொகுதி தனிமங்களின் பொதுப் பண்புகள்
பண்புகள்
குளோரின் அதிக வினைத்திறன் மிக்கது. எனவே இயற்கையில் இது தனித்து கிடைப்பதில்லை. வழக்கமாக இது உலோக குளோரைடுகளாகக் கிடைக்கிறது. மிக முக்கியமான குளோரைடு சோடியம் குளோரைடு ஆகும். இது கடல் நீரில் காணப்படுகிறது.