தயாரித்தல், பண்புகள், அமைப்பு, பயன்கள் - பாஸ்பரஸ் ட்ரைகுளோரைடு | 12th Chemistry : UNIT 3 : p-Block Elements-II
பாஸ்பரஸ் ட்ரைகுளோரைடு மற்றும் பென்டாகுளோரைடு:
தயாரித்தல்:
வெண் பாஸ்பரஸ் மீது குளோரின் வாயுவை மெதுவாக செலுத்தும்போது பாஸ்பரஸ் ட்ரைகுளோரைடு உருவாகிறது. வெண்பாஸ்பரஸை தயோனைல் குளோரைடுடன் வினைப்படுத்தியும் இதைப் பெற இயலும்.
P4 + 8SOC12 → 4PC13 + 4SO2 + 2S2C12
பண்புகள்
பாஸ்பரஸ் ட்ரை குளோரைடு, குளிர்ந்த நீரில் நீராற்பகுப்படைந்து பாஸ்பரஸ் அமிலத்தைத் தருகிறது.
PC12 + 3H2O → H3PO3 + 3HC1
SiC14 நீராற்பகுப்பைப் போலவே, இந்த வினையிலும் பாஸ்பரஸ் அணுவிலுள்ள காலியான 3d ஆர்பிட்டாலைப் பயன்படுத்தி நீர் மூலக்கூறுடன் சகப்பிணைப்பு உருவாக்கப்படுவதைத் தொடர்ந்து HCl நீக்கப்படுகிறது.
PC13 + H2O → PC13 H2O → P(OH)C12 + HC1
இவ்வினையானது தொடர்ந்து வரும் இரண்டு படிகளில் P(OH)3 or H3PO3 ஐத் தருகிறது
HPOC12 + H2O → H2PO2C1 + HC1
H2PO2C1 + H2O → H2PHO3 + HC1
ஆல்கஹால் மற்றும் கார்பான்ஸிலிக் அமில தொகுதிகளைக் கொண்ட மற்ற மூலக்கூறுகளுடனும் இதே போன்ற வினைகள் நிகழ்கின்றன.
3C2H5OH + PC13 → 3C2H5C1 + H3PO3
3C2H5COOH + PC13 → 3C2H5COC1 + H3PO3
படம் 3.5 பாஸ்பரஸ் ட்ரைகுளோரைடு
பாஸ்பரஸ் ட்ரைகுளோரைடின் பயன்கள்:
குளோரினேற்ற காரணியாகவும், H3PO3 தயாரித்தலிலும் பாஸ்பரஸ் ட்ரைகுளோரைடுபயன்படுகிறது.