Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | விதையின் வகைகள்

தாவரவியல் - விதையின் வகைகள் | 11th Botany : Chapter 4 : Reproductive Morphology of Angiosperm

   Posted On :  06.07.2022 07:18 am

11 வது தாவரவியல் : அலகு 4 : இனப்பெருக்க புற அமைப்பியல்

விதையின் வகைகள்

காணப்படும் விதையிலைகளின் அடிப்படையில் இரண்டு விதமான விதைகள் கண்டறியப்பட்டுள்ளன

விதையின் வகைகள்


அ) காணப்படும் விதையிலைகளின் அடிப்படையில் இரண்டு விதமான விதைகள் கண்டறியப்பட்டுள்ளன

(i) இருவிதையிலை விதை – இரண்டு விதையிலைகளைக் கொண்ட விதை

(ii) ஒருவிதையிலை விதை – ஒரு விதையிலையைக் கொண்ட விதை


ஆ) கருவூண் காணப்படுவது அல்லது கருவூண் அற்று காணப்படுவதைப் பொறுத்து விதைகள் இரண்டு வகைப்படும்

i) கருசூழ் புரதம் கொண்ட அல்லது கருவூண் கொண்ட விதை - விதையிலைகள் மெல்லிய சவ்வு போன்று காணப்படும். முதிர்ந்த விதைகளில் கருவூண் நிலைபெற்றுக் காணப்படும். இவை வளரும் நாற்றுகளுக்கு ஆரம்ப வளர்ச்சியின் போது ஊட்டம் அளிக்கிறது. எடுத்துக்காட்டு: ஆமணக்கு, சூரியகாந்தி. மக்காச்சோளம்.

ii) கருசூழ் புரதமற்ற அல்லது கருவூண் அற்ற விதை - இதில் வளரும் கருவிற்குத் தேவையான உணவுப்பொருள் உள்ளதால் இதனைப் பயன்படுத்தி வளர்கின்றன. அதனால் முதிர்ந்த விதைகளில் கருவூண் இருப்பதில்லை. இத்தகைய விதைகளில் விதையிலைகள் உணவைச் சேமித்துத் தடிப்புற்று, சதைப்பற்று மிக்கவையாகக் காணப்படுகிறது. எடுத்துக்காட்டு: பட்டாணி, நிலக்கடலை.

Tags : தாவரவியல்.
11th Botany : Chapter 4 : Reproductive Morphology of Angiosperm : Types of Seed in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 4 : இனப்பெருக்க புற அமைப்பியல் : விதையின் வகைகள் - தாவரவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 4 : இனப்பெருக்க புற அமைப்பியல்